பாடம் 3.3 கணியனின் நண்பன்
Hello, Friends.,
Here we have provided the SSLC Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 3.3 கணியனின் நண்பன் to prepare for exams. The solutions are accurate and as per the SSLC syllabus.
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________
- நூலறிவு
- நுண்ணறிவு
- சிற்றறிவு
- பட்டறிவு
விடை : நுண்ணறிவு
2. தானே இயங்கும் இயந்திரம் _______________.
- கணினி
- தானியங்கி
- அலைபேசி
- தொலைக்காட்சி
விடை : தானியங்கி
3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- நின் + றிருந்த
- நின்று + இருந்த
- நின்றி + இருந்த
- நின்றி + ருந்த
விடை : நின்று + இருந்த
4. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- அவ்வு + ருவம்
- அ + உருவம்
- அவ் + வுருவம்
- அ + வுருவம்
விடை : அ + உருவம்
5. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- மருத்துவம்துறை
- மருத்துவதுறை
- மருந்துதுறை
- மருத்துவத்துறை
விடை : மருத்துவத்துறை
6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________
- செயலிழக்க
- செயல்இழக்க
- செயஇழக்க
- செயலிலக்க
விடை : செயலிழக்க
7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் __________
- போக்குதல்
- தள்ளுதல்
- அழித்தல்
- சேர்த்தல்
விடை : சேர்த்தல்
8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் __________
- அரிது
- சிறிது
- பெரிது
- வறிது
விடை : அரிது
ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை __________
விடை : எந்திரங்கள்
2. தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு __________
விடை : செயற்கை நுண்ணறிவு.
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் __________
விடை : டீப் புளூ.
4. சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு __________
விடை : சவுதி அரேபியா
இ. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. தொழிற்சாலை
விடை : தொழிற்சாலை என்பது மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதாகும்
2. உற்பத்தி
விடை : சோப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எங்கள் ஊரில் உள்ளது
3. ஆய்வு
விடை : ஆய்வு என்பது ஒரு தேடல் வகை
4. செயற்கை
விடை : மனிதர்கள் விசாயத்தில் செயற்கை உரங்களை பயன்படுத்துகின்றன
5. நுண்ணறிவு
விடை : மனிதர்கள் நுண்ணறிவால் சிந்திக்கின்றனர்
ஈ. குறுவினா
1. ரோபோ என்னும் சொல் எவ்வாறு உருவானது?
- காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.
- ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.
- ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாக அந்த நாடகத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது.
2. ‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
- 1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார்.
- ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது. போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”
உ. சிறுவினா
1. எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.
- மனிதர்களை விட மீத்திறன் மிக்கதாக இருப்பதனால், மனிதர்களை விட விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட முடிகின்றது.
- மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய எந்திர மனிதன் பயன்படுகிறான். உணவங்களில் உணவு பரிமாறுவதற்குப் பயன்படுகிறான்.
- பொது இடங்களில் வழிகாட்டுவதற்குப் பயன்படுகிறான். வெடிகுணடுகளைச் செயலிழக்கச் செய்கிறான்.
- விளையாட்டுத்துறையிலும், மருத்துவத்துறையிலும் முத்திரை பதித்து வருகிறான். மனிதனால் செல்ல முடியாத இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறான்.
- பயம் அறியாதவன் இந்த எந்திர மனிதன்
2. துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?
- வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துவப்பகுதிகள் மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலை இருப்பதில்லை.
- இங்கு ஆய்வு செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் அவர்கள் பல உபாதைகளுக்கு ஆட்படுவர் அல்லது இறந்தும் போவார். அப்படி நடந்தால் ஆய்வு பாதியில் நின்றுவிடும். முழுமையும் பெறாது.
- ஆனால் எந்திரமனிதர்கள் எந்த பருவநிலையிலும் இயங்கும் தன்மை பெற்றவர்கள். இவர்களை பயன்படுத்தினால் ஆய்வு எந்த தடங்கலுமின்றி முழுமைபெறும்.
- அதனால் தான் துருவப்பகுதியில் ஆய்வு செய்ய எந்திர மனிதர்களை அனுப்புகின்றனர்.
கூடுதல் வினாக்கள்
1. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மனித ஆற்றல் குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே __________
விடை : தானியங்கிகள்
2. நான் ஓர் எந்திரமனிதன். என்னை __________ என்றும் அழைப்பார்கள்
விடை : ரோபோ
3. ஐக்கிய நாடுகள் சபை _________ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது.
விடை : புதுமைகளின் வெற்றியாளர்
4. _________, _________ ஒரே மாதிரியான வேலைகளை மனிதரை விட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும்
விடை : நுட்பமான, கடினமான
5. சூழ்நிலைகளை உணர்வதற்கான _________ ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன
விடை : நுண்ணுணர்வுக் கருவிகள் ( Sensors)
6. தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் தானியங்கிகள் _________, _________ போன்ற பணிகளைச் செய்கின்றன.
விடை : உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல்
7. எந்திர மனிதர்களுக்கும் தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு _________ ஆகும்
விடை : செயற்கை நுண்ணறிவு
8. சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ள ரோபோவின் பெயர் _________
விடை : சோபியா