பாடம் 9.4 அணி இலக்கணம்

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 9.4 அணி இலக்கணம் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

கற்றவை கற்றபின்

பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.

ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி

இப்பாடல் இயல்பு நவிற்சி அணியாகும். கவிஞர் தம் கருத்தை இயல்பாக உள்ளபடியே அழகுடன் கூறியமையால் இயல்பு நவிற்சி அணி ஆகும்.

மதிப்பீடு

குறு வினா

1. உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது?

ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

2. உயர்வு நவிற்சி அணி என்பது யாது?

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்

கூடுதல் வினாக்கள்

1. அணி என்றால் என்ன?

உடலுக்கு அழகு தரும் அணிகலன் போல் சொல்லும் பொருளும் அழகுற அமைவது அணி ஆகும். கவிஞர் தம் கருத்தை சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தை தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும். அணி என்பதற்கு அழகு என்பது பொருள்

2. இயல்பு நவிற்சி அணி சான்று கூறுக

ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

(எ. கா.)

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி

– கவிமணி தேசிக விநாயகனார்

இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

3. உயர்வு நவிற்சி அணி சான்று கூறுக

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

(எ. கா.)

குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று

வெந்நீரில் குளித்தால்
மேேல கருக்குமென்று

ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று

பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா

என்று ஒரு தாய் தாலாட்டுப் பாடுகிறாள். இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.

மொழியை ஆள்வோம்

அகரவரிசைப்படுத்துக.

ஒழுக்கம், உயிரி, ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஓளவை

விடை :

அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிரி, ஊக்கம், எளிமை, ஐந்து, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஓளவை

பத்தியைப் படித்துக் கீழக்காணும் வினாக்களுக்கு விடையளிக்க

அரசர் ஒருவர் தன் மக்களிடம் “அமைதி” என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர. அரசர் ஒவ்வாெரு ஓவியமாகப் பார்த்துக் கொணடே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூணடும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியாேடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளாேடு இருந்தது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?” என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். “இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். அதற்கு ஓவியர் “ மன்னா பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்க வி்டாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி” என்பார்

1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?

அசாதாரண நிலையில் சாதரணத்தை தேடுவது

2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாக தோன்றுவது என்ன?

பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பத அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்க விடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பது உண்மையான அமைதி

3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?

போர்களத்தில் போர்களின் மத்தியில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருப்பது போல் வரைந்திருப்பேன்

4. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக?

அமைதி தேடும் மனங்கள்

மொழியோடு விளையாடு

கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக

நேற்றுஎங்கள் ஊரில் மழைபெய்கிறது
இன்றுபெய்யும்
நாளைபெய்தது
  1. நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது
  2. இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது
  3. நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்

இது போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க

1. நேற்று நான் ஊருக்கு போனேன்
இன்று நான் ஊருக்கு போகிறேன்
நாளை நான் ஊருக்கு போவேன்

2. நேற்று வயலில் ஆடு மேய்ந்தது
இன்று வயலில் ஆடு மேய்கிறது
நாளை வயலில் ஆடு மேயும்

3. நேற்று என் அப்பா வந்தார்
இன்று என் அப்பா வருகிறார்
நாளை என் அப்பா வருவார்

கட்டங்களில் மறைந்துள்ள அணிகலன்களின் பெயர்களை எழுதுக

ணிமாேபு
ம்திம்ளை
ளா
ல்சூம்சில்
டுக்ன்
  • கம்மல்
  • சூளாமணி
  • மோதிரம்
  • சிலம்பு
  • வளையல்
  • கடுக்கன்

நிற்க அதற்குத் தக…

கலைச்சாெல் அறிவாேம்

  • மனிதநேயம் – Humanity
  • கருணை – Mercy
  • உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
  • நாேபல் பரிசு – Nobel Prize
  • சரக்குந்து – Lorry

 

Published on: January 31, 2025 Last Updated: January 31, 2025 — Examination Department

பாடம் 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

மதிப்பீடு

1. “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.

மனிதன் மற்றொரு மனிதன்பால் கொள்ளும் நேயமே மனிதநேயம். இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம். மனித பூக்கள் அதில் ஏராளம். பார்த்து ரசிப்பது ஒரு இனம். பறித்து சூடுவது ஒரு இனம் மலரைப் பார்ப்பதற்கு உரிமம் தேவையில்லை. பறிப்பதற்கு அந்த செடியின் சொந்தக்காரராய், அதன் பராமரிப்பாளராய், பாதுகாவலராய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

அவ்வாறு இருக்கையில் தனது உயிரையே பிறருக்கு தானமாக அளித்த ஹிதேந்தரேயன் பெற்றோர் செயலை என்னவென்று சொல்வது தெரியவில்லை. ஆயிரம் கனவுகளோடு வளர்த்த மகனின் உடல் உறுப்புகளை பிறருக்கு கொடுக்க முன்வந்தனர். அவன் இறந்தும் வாழ வேண்டும் எனறு நினைத்தனர். அவனது முடிவு ஒரு தொடக்கமாகப் பிறருக்கு அமைய வேண்டும் என்று எண்ணினர். ஹிதேந்திரனின் இறுதி முடிபவு பல மனிதர்களுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. அரக்ள எடுத்த முடிவு சரியானதே.

ஹிதேந்திரன் பெற்றோர் மருத்துவராக இருந்ததால் தக்க தருணத்தில் முடிவை எடுக்க முடிந்தது. ஆனால், நம்பில் பலர் இந்தச் சூழ்நிலைக்கு பல நேரங்களில் ஆட்படுகின்றோம். ஆனால் சரியான முடிவை எடுக்காமல் தவிக்கின்றோம். இதனால் பல மனிதர்களின் முடிவு முடிவாகவே அமைந்து விடுகின்றது. அவை மண்ணுக்குள்ளேயே மடிந்தும் முடிந்தும் விடுகிறது. பல உயிர்கள் வாழ வழிவகை இல்லாமல் போய்விடுகிறது.

இதனால் பல உயிர்கள் மடிந்தும் விடுகின்றது. ஒரு மனிதனின் முடிவு பல மனிதர்களின் தொடக்கத்திற்கு வழிவகை செய்கிறது. ஆகவே “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்புத் தக்க காரணத்துடன் நம் பாடத்தலைப்பிற்கு பொருந்தி வந்துள்ளது.

2. இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.

இறந்தும் வாழ்வர்

Published on: January 31, 2025 Last Updated: January 31, 2025 — Examination Department

பாடம் 9.2 மனிதநேயம்

Hello, Friends .,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 9.2 மனித நேயம் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் _______

  1. மனித வாழ்க்கை
  2. மனித உரிமை
  3. மனிதநேயம்
  4. மனித உடைமை

விடை : மனிதநேயம்

2. வள்ளலார் தம் பொருளை கவர்ந்தவரிடமும் _______ காட்டியவர்.

  1. கோபம்
  2. வெறுப்பு
  3. கவலை
  4. அன்பு

விடை : அன்பு

3. அன்னை தெராசாவிற்கு ________ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது

  1. பொருளாதாரம்
  2. இயற்பியல்
  3. மருத்துவம்
  4. அமைதி

விடை : அமைதி

4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ________

  1. குழந்தைகளை பாதுகாப்போம்
  2. குழந்தைகளை நேசிப்போம்
  3. குழந்தைகள் உதவி மையம்
  4. குழந்தைகளை வளர்ப்போம்

விடை : குழந்தைகளை பாதுகாப்போம்

பொருத்துக

1. வள்ளலார்நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்திபசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெராசாகுழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனிதநேயம்

விடை : அனைவரிடம் மனிதமாண்பு மலர வைப்பதே மனிதநேயம்

2. உரிமை

விடை : சுதந்திரம் அனைவருக்கும் பிறப்பு உரிமை

3. அமைதி

விடை : அன்னை தெராசாவிற்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு கிடைத்தது

4. அன்பு செய்தல்

விடை : வள்ளலார் தம் பொருளை கவர்ந்தவரிடமும் அன்பு செய்தல் வேண்டும் என நினைத்தார்

குறு வினா

1. யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

மனித நேயத்துடன் வாழ்பவர்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

2. வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?

வள்ளலார் பசிப்பிணியை பாேக்க வடலூரில் சத்திய தருமச் சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்

3. அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது?

ஒரு நாள் அன்னை தெரசா சாலையின் ஓரமாக நடந்து சென்றார். அப்போது வழியல் மூதாட்டி ஒருவர் சாலையின் ஓரம் படுத்திருந்தார். அவர்முகத்தை துணியால் மூடி இருந்தார். ஒரு கையால் பூனைக்குட்டியை அணைத்துக் கொண்டு இருந்தார்.

அன்னை தெரசா அவரின் அருகில் சென்று உற்று நோக்கினார். தொழுநோயின் கடுமையால் உண்டான வேதனை மூதாட்டியன் முகத்தில் தெரிந்தது. கைகளில் விரல்கள் இல்லை.

அன்னைதெராசா மனம் கலங்கினார். மூதாட்டியின் அருகில் சென்று அவரை தொட்டு தூக்கினார். சாலை ஓரத்தில் படுத்து இருப்பது ஏன்? எனக் கேட்டார்.

என்னைத் தொடாதீர்கள். என் நோய் உங்களுக்கும் தொற்றிக் கொள்ளும் என உறவினர்கள் என்னை வெறுத்து விலக்கி விட்டனர். என்னுடன் பேசுவதில்லை.

என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்த பூனை மட்டும் என்னுடன் இருக்கிறது என அழுதாள் மூதாட்டி. இதைக் கேட்ட அன்னை தெராசா கண்ணீர் விட்டார்.

சிறு வினா

கைலாஷ் சத்யார்த்தி நாேபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது?

கைலாஷ் சத்யார்த்தி சிறுவயதில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார். அவன் தந்தையுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பான்.

ஏன் அந்தச் சிறுவன் தன்னைப்போல் பள்ளிக்கு வரவில் என்ற கேள்வி அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. தன் ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார். “பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை.

வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்” என்ற பதில் கிடைத்தது. அந்த பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது.

இதுவே கைலாஷ் சத்யார்த்தி நாேபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு ஆகும்.

சிந்தனை வினா

அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.

அன்னை தெரசா அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, தெருத்தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள் ஒரு கடையில் சென்று யாசம் கேட்டார். அந்த கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்.

கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிவிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெராசாவை கோபமாகப் பார்த்து விட்டு, தெராசா நீட்டிய கையில் எச்சிலை துப்பினார். அப்போது சற்றம் மனம் தளராமல் “மிக்க நன்றி! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்.

அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிபப்புத் தன்மை உடைய பெண்ணை இப்பொழுது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு நொடிப்பொழுதில் கல்லாப் பெட்டியில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசாவிடம கொடுத்துவிட்டார். இப்படி அன்னை தெராசவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதன் தனக்கென வாழாமல் ________ வாழ வேண்டும்

விடை : பிறர்க்கென

2. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என ________ கூறினார்

விடை : வள்ளலார்

3. பள்ளி செல்லா குழந்தைகளுக்காக கைலாஷ் சத்யார்த்தி ________ என்னும் இயக்கத்தைத் தாெடங்கினார்

விடை : குழந்தைகளைப் பாதுகாப்போம்

4. குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது ________ எதிரான குற்றமாகும்.

விடை : மனிதத் தன்மைக்ககு

5. சத்திய தருமச்சாலை என்னும் அமைப்பைத் தொடங்கியவர் ________

விடை : வள்ளலார்

6. தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்ககென
   முயலுநர் உண்மையானே என்னும் அடிகள்  இடம் பெற்றுள்ள நூல் ________

விடை : புறநானூறு

7. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது என்று கூறியவர் ________

விடை : கைலாஷ் சத்யார்த்தி

குறு வினா

1. மனிதன் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ வேண்டுமெனில் தேவையானவை எவை?

  • அருள்
  • பொறுமை
  • பரிவு
  • நன்றி
  • உணர்வு
  • இன்சொல் பேசுதல்

2. மனித நேயம் என்றால் என்ன?

எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும்

3. அன்னைதெரசாவிற்கு நோபல் பரிசு தேடிவரக் காரணம் யாது?

மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்த காரணத்தினால் அமைதிக்கான நாேபல் பரிசு தேடிவரக் காரணம்

Published on: January 31, 2025 Last Updated: January 31, 2025 — Examination Department

பாடம் 9.1  ஆசியஜோதி

Hello, Friends .,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 9.1 ஆசிய ஜோதி to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

சொல்லும் பொருளும்

  • அஞ்சினார் – பயந்தனர்
  • கருணை – இரக்கம்
  • வீழும் – விழும்
  • ஆகாது – முடியாது
  • பார் – உலகம்
  • நீள்நிலம் – பரந்த உலகம்
  • முற்றும் – முழுவதும்
  • மாரி – மழை
  • கும்பி – வயிறு
  • பூதலம் – பூமி

பாடலின் பொருள்

யாகசாலையில் நின்றவர் அனைவரும் புத்தர்பிரானைக் கண்டு நடுங்கினர். அவர் முன்னால் நிற்கவும் அஞ்சினர். கூடி இருந்த மக்களின் முன்னால் இரக்கமே உருவான புத்தர்பிரான் கூறிய உரையைக் கேளுங்கள்.

வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல். எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ?

நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ?

எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர்.

காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா?

ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது. ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.

நூல் வெளி

  • தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
  • முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
  • ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
  • இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புத்தரின் வரலாற்றை கூறும் நூல் _________

  1. ஜீவஜோதி
  2. ஆசியஜோதி
  3. நவஜோதி
  4. ஜீவன்ஜோதி

விடை : ஆசியஜோதி

2. நேர்மையான வாழ்வு வாழ்பவர் _________

  1. எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்
  2. உயிர்களைத் துன்புறுத்துவர்
  3. தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
  4. தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

விடை : எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்

3. ஒருவர் செய்யக் கூடாதது _________

  1. நல்வினை
  2. தீவினை
  3. பிறவினை
  4. தன்வினை

விடை : தீவினை

4. எளிதாகும் என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. எளிது + தாகும்
  2. எளி + தாகும்
  3. எளிது + ஆகும்
  4. எளிதா + ஆகும்

விடை : எளிது + ஆகும்

5. பாலையெல்லாம் என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. பாலை+யெல்லாம்
  2. பாலை+எல்லாம்
  3. பாலை+எலாம்
  4. பா+எல்லாம்

விடை : பாலை+எல்லாம்

6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. இன்உயிர்
  2. இனியஉயிர்
  3. இன்னுயிர்
  4. இனிமைஉயிர்

விடை : இன்னுயிர்

7. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. மலைஎலாம்
  2. மலையெலாம்
  3. மலையெல்லாம்
  4. மலைஎல்லாம்

விடை : மலையெலாம்

குறு வினா

1. அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?

வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லோர்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிரைக் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.

2. எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?

எல்லா உயிர்களும் தம் உயிரைப் பெரிதாக மதித்து பாதுகாப்பது போல எறும்பும் தன் உயிரைக் காக்கப் பாடுபடுகிறது.

3. ஒரு நாளும் விட்டுச் செல்லாதது எது?

ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.

4. உலகம் முழுமையையும் எப்போது ஆள முடியும்?

நல்ல மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையும் இரக்கத்தால் ஆட்சி செய்ய முடியும்.

சிறு வினா

எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?

  • வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லோர்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிரைக் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.
  • எல்லா உயிர்களும் தம் உயிரைப் பெரிதாக மதித்து பாதுகாப்பது போல எறும்பும் தன் உயிரைக் காக்கப் பாடுபடுகிறது.
  • நல்ல மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையும் இரக்கத்தால் ஆட்சி செய்ய முடியும்.
  • உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைகிறது. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவார்.
  • காடு, மலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்கு தருகிறது. அது தீய செயல் அன்று.
  • இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள். நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும் வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைப்பதில்லை.
  • ஆயிரம் பாவங்கள் செய்து ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் அகன்ற போகாது. ஒருவர் செய்த நன்மையும், தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.
  • ஆகையால் தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்த பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிவிடும் எண்ணத்தை உங்களை விட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.

சிந்தனை வினா

பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் அவைகளை வீடுகளில் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும். அவைகளை சுதந்திரமாக வாழ விட வேண்டும். வீடுகளில் வளர்ப்பதால், அவைகளைக்கு கட்டுப்பாட்டை உருவாக்கி கூண்டுகளிலும், கூடுகளிலம் அடைக்கின்றோம். விலங்குகளைக் கட்டு போடுகின்றோம். எந்த உயிரினங்களும் அடிமையாகவும், அடைக்கப்படும் இருப்பதை விரும்புவதில்லை.

அதனல், அவைகளை அவைகளுக்குள்ள வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும். இறைவன் படைப்பில் அனைத்துமே சமம் என்று எண்ண வேண்டும். இதறகாக மாணவர்களாகிய நாம் போராட வேண்டும். சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்று சொல்லுவது போல, சுதந்திரம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்புரிமை என்பதை மனிதன் உணர வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

பிரித்து எழுதுக

  • இன்னுயிர் = இனிமை + உயிர்
  • நாடெங்கும் = நாடு + எங்கும்
  • எளிதாகும் = எளிது + ஆகும்
  • பக்குவமாவது = பக்குவம் + ஆவது

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசிய விநாயகனார் _________ என்னும் பட்டம் பெற்றவர்

  1. கவிமணி
  2. குழந்தை கவிஞர்
  3. கவிஞாயிறு
  4. பாட்டுக் கவிஞர்

விடை : கவிமணி

2. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே _________ வாழ்பவர்

  1. நேர்மையற்ற வாழ்வு
  2. நேர்மையான வாழ்வு
  3. நட்புடன்
  4. பகைமையுடன்

விடை : நேர்மையான வாழ்வு

3. தேசிக விநாயகனார் ______ நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.

  1. பத்தொன்பதாம்
  2. இருபதாம்
  3. பதினெட்டாம்
  4. பதினேழாம்

விடை : இருபதாம்

4. கவிமணி ______ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

  1. 34
  2. 35
  3. 36
  4. 33

விடை : 36

5. லைட் ஆஃப் ஆசியா என்னும் நூலினை எழுதியவர்

  1. கவிமணி
  2. எர்னஸ்ட் ஹெமிங்வே
  3. எட்வின் அர்னால்டு
  4. லிலியன் வாட்சன்

விடை : எட்வின் அர்னால்டு

வினாக்கள்

1. தேசிய விநாயகனார் பற்றி குறிப்பு வரைக

  • தேசிய விநாயகனார் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்
  • 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்
  • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்

2. ஆசியஜோதி குறிப்பு வரைக

ஆசியஜோதி ஆங்கில மொழியல் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றை கூறுகிறது

 

Published on: January 31, 2025 Last Updated: January 31, 2025 — Examination Department

பாடம் 8.5 பெயர்ச்சொல்

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 8.5 பெயர்ச்சொல் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக

  1. பறவை
  2. மண்
  3. முக்காலி
  4. மரங்கொத்தி

விடை : மண்

2. காரணப்பெயரை வட்டமிடுக

  1. மரம்
  2. வளையல்
  3. சுவர்
  4. யானை

விடை : வளையல்

3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக

  1. வயல்
  2. வாழை
  3. மீன்கொத்தி
  4. பறவை

விடை : வாழை

குறு வினா

1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

பெயர்ச் சாெல் ஆறு வகைப்படும். அவையாவன

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. பண்புப்பெயர்
  6. தாெழிற்பெயர்

2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன?

ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மா, கருவேலங்காடு.

3. காரணப்பெயர் என்றால் என்ன?

நம் முன்னாேர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தாேடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காணப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நாற்காலி, கரும்பலகை

சிறு வினா

1. அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.

பொருட்பெயர்

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.

(எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

மனிதர்கள் பெயர்கள் பொருட்பெயர் வகையையே சாரும்.

உயர்திணைப் பொருட்பெயர்: (எ.கா.) அக்ஸா, ஜோசப், மாறன் & மகாலட்சுமி

இடப்பெயர்

ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.

(எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

காலப்பெயர்

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

சினைப்பெயர்

பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.

(எ.கா.) கண், கை, இலை, கிளை.

பண்புப்பெயர்

பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

தாெழிற்பெயர்

தாெழிலைக் குறிக்கும் பெயர் தாெழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

2. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.

  • காவியா புத்தகம் படித்தாள் – பொருட்பெயர்
  • காவியா பள்ளிக்குச் சென்றாள் – இடப்பெயர்
  • காவியா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்
  • காவியா தலை அசைத்தாள் – சினைப்பெயர்
  • காவியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்
  • காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர

கூடுதல் வினாக்கள்

1. இடுகுறிப் பொதுப்பெயர் என்றால் என்ன?

ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மரம், காடு.

2. இடுகுறிப் சிறப்புப்பெயர் என்றால் என்ன?

ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மா, கருவேலங்காடு.

3. காரணப் பொதுப்பெயர் என்றால் என்ன?

காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா.) பறவை, அணி

4. காரணப் சிறப்புப்பெயர் என்றால் என்ன?

குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச் சிறப்புப்பெயர் ஆகும்.

(எ.கா.) வளையல், மரங்கொத்தி

மொழியை ஆள்வோம்

அகராதியை பயன்படுத்தி பொருள் எழுதுக

1. கருணை

விடை : உயிர்களிடத்தில் கொள்ளும் ஒருவகை பரிவு உணர்வு

2. அச்சம்

விடை : பயம், மனதில் ஏற்படும் ஓர் உணர்வு, தைரியத்தை இழக்கும் நிலைமை

3. ஆசை

விடை : வேண்டும் பொருள் மீது செல்லும் விருப்பம்

கீழ்காணும் பெயர்ச்சாெற்களை அகரவரிசையில் எழுதுக.

பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை :

ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம்,  பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால்

பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுகை.

1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவுதே எனச் சான்றோர்கள் கருதினர்

  • இரண்டுமே,  சான்றோர் – பண்புப்பெயர்
  • கைகள் – சினைப்பெயர்
  • உதவவே, கருதினர் – தொழிற்பெயர்

2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.

  • அறம், பொருள், இன்பம், வீடு, நூல் – பொருட்பெயர்
  • அடைதல் – தொழிற்பெயர்

3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.

  • அழகு – பண்புப்பெயர்
  • அறிஞர் – பொருட்பெயர்
  • கற்றுணர்ந்து, அடங்கல் – தொழிற்பெயர்

4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.

  • நீதிநூல், பாரதியார் – பண்புப்பெயர்
  • பயில் – பொருட்பெயர்

5. மாலை முழுவதும் விளையாட்டு.

  • மாலை- காலப்பெயர்
  • உடையவர்கள் – விளையாட்டு

6. அன்பு நிறைய உடையவர்கள் மேலாேர்

  • அன்பு, மேலாேர் – பண்புப்பெயர்
  • உடையவர்கள் – பொருட்பெயர்

பின்வரும் பாடலைப் படித்து, அடிக்கோடிட்ட சாெல் எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதை எழுதுக.

1. விடியலில் துயில் எழுந்தவன்.

  • துயில் – காலப்பெயர்

2. இறைவனைக் கை தாெழுதேன்.

  • கை – சினைப்பெயர்

3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன்

  • மதுரைக்குச் – இடப்பெயர்

4. புத்தகம் வாங்கி வந்தேன்

  • புத்தகம் – பொருட்பெயர்

5. கற்றலைத் தாெடர்வாேம் இனி

  • கற்றலைத் – தொழிற்பெயர்

6. நன்மைகள் பெருகும் நனி

  • நன்மைகள் – பண்புப்பெயர்

மொழியோடு விளையாடு

கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க

வெல்லும்கேளிர்தீதும்
வாராநன்றும்யாவரும்
யாதும் ஊரேபிறர்தரவாCய்மையே
  1. வாய்மையே வெல்லும்
  2. யாதும் ஊரே யாவரும் கேளிர்
  3. தீதும் நன்றும் பிறர்தர வாரா

சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

  1. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்
  2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
  3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
  4. அமுதசுரபியைப் பெற்றாள்
  5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்

விடை :-

  1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
  2. அமுதசுரபியைப் பெற்றாள்
  3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
  4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
  5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

1. அரம் – அறம்

அரம்மரத்தை அறுக்க அரம் பயன்பட்டது.
அறம்உதவி என்று வருபவருக்கு அறம் செய்ய வேண்டும்.

2. மனம் – மணம்

மனம் என் தவறினை எண்ணி மனம் நொந்துவிட்டேன்.
மணம்என் தோட்டத்தில பூக்களின் மணம் வீசியது.

இருபொருள் தருக

1. ஆறுநதி
எண்
2. திங்கள்சந்திரன்
வாரத்தின் இரண்டாம் நாள்
3. ஓடுவீட்டின் கூரையில் அமைப்பது
வேகமாக ஓடுதல்
4. நகைசிரி
அணிகலன்

புதிர்ச்சொல் கண்டுபிடி

இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துக்கள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள் தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொலின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?

விடை – அறம்

கட்டத்தில் உள்ள சொற்களை கொண்டு தொடர்கள் உருவாக்கும்

மாலையில்கற்போம்
பிறருக்கு உதவிஎழுவோம்
பெரியோரைவிளையாடுவோம்
நூல் பலசெய்வோம்
உடற்பயிற்சிபுரிவோம்
அதிகாலையில்வணங்குவோம்
  • மாலையில் விளையாடுவோம்.
  • பிறருக்கு உதவி புரிவோம்.
  • பெரியோரை வணங்குவோம்.
  • நூல் பல கற்போம்.
  • உடற்பயிற்சி செய்வோம்.
  • அதிகாலையில் எழுவோம்.

நிற்க அதற்குத் தக…

கலைச்சாெல் அறிவாேம்

  • அறக்கட்டளை – Trust
  • தன்னார்வலர் – Volunteer
  • இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
  • சாரண சாரணியர் – Scouts & Guides
  • சமூகப்பணியாளர் – Social Worker
Published on: January 31, 2025 Last Updated: January 31, 2025 — Examination Department

பாடம் 8.4 பாதம்

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 8.4 பாதம் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

நூல் வெளி

  • எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
  • நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.
  • உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளளார்.
  • இக்கதை தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

சிறுவினா

பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.

காலணி தைக்கும் மாரி வழக்கம்போல் தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தார். காலையிலே தொடங்கிய மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. மாரி எவரேனும் காலணி தைக்க வரக்கூடுமோ எனப பசியுடன் காத்திருந்தார். வலுத்துப் பெய்யத் தொடங்கிய மழையுடன் காற்றும் சேர்ந்து கொண்டது.

அந்த நீண்ட தெரு எவருமில்லை. அவரும் ஒரு மரமும் எட்டு பழைய செருப்புகளும் தவிர, சினிமா தியேட்டரின் குறுகிய வலதுப்புறச் சந்தில் இருந்து குடையில்லாமல் நனைந்தபடி சிறுமியொருத்தி, அவன் அருகில் வந்து, தனது இடக்கையில் வைத்திருந்த காலணி ஒன்றை குனிந்து தரையிலிட்டு, தைத்து வைக்கும்படி சொல்லி விட்டு அவர் நிமிர்ந்து அவளைப் பார்க்கும் முன்பு தெருவில் ஓடி அடுத்த வளைவின் சுவர்களை கடந்து சென்றாள்.

அந்தக் காலணி நிறத்தில் இருந்தது. வழக்கமான சிறுமிகளின் காலணி போல அல்லாது தைத்துப் கொண்ட காலணியாக இருந்தது. மாரி கிழிசலைத் தைத்துக் கொண்டு காத்திருந்தார். நிச்சயம் இரண்டு ரூபாய் கிடைக்குமு் ஆவலில் இருந்தார் மாரி.

ஆனால் மாலை வரை அந்தச் சிறுமி வரவில்லை. மாரி இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா வரை மரத்தடியில் காத்துக் கொண்ருந்தார். அவள் வரவில்லை. காலணியைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தார். மறுநாளும் அந்தச் சிறுமிக்காக காத்திருந்தார். அன்றும் அவள் வரவில்லை. இப்படி மூன்று நாட்கள் கடந்தன. அவர் வரவேயில்லை.

இருந்தாலும் அவர் மனம் சோர்ந்து போகவில்லை. தினமும் கொண்டு வந்து காத்துக் கொண்டே இருந்தார். ஓர் இரவில் மாரியின் மனைவி அந்த காலணியைக் கண்டாள். அதன் வசீகரம் தொற்றிக் கொள்ள கையில் எடுத்துப் பார்த்தாள்.

சிறுமியின் காலணி போலிருந்தது. அதைப் போட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. தனது வலது காலில் அந்தக் காலணியை நுழைத்துப் பார்த்தாள். அது அவளுக்கு சரியாக இருந்தது.

சிறுமியின் காலணி அவளுக்குப் பொருந்துகிறது என்றவள் மற்றொரு காலணியைத் தேடிப் பையில் கொட்டினாள். மாரி உள்ளே கோபமாகச் சப்தமறிந்து வந்தபோது மனைவியின் வலக்காலில் இருந்த சிவப்புக் காலணியைக் கண்டார். ஆத்திரத்துடன் திட்டி, அவள் சொல்வதைக் கேட்காமல் கழற்றச் சொல்லி கிழிந்து விட்டதா எனப் பார்க்கக் கையில் எடுத்து உயர்த்தினார் கிழியவில்லை. காலணி அவருக்குள்ளும் ஆசையைத் தூண்டியது.

போட்டுப் பார்க்கலாமென, தன் வலக்காலைச் சிறிய காலணியில் நுழைத்தபோது அது தனக்கும் சரியாகப் பொருந்துவதைக் கண்டார். விசித்திரமாயிருந்து மாரிக்கு. இந்தச் செய்தி நகரில் பரவியது. அந்தக் காலணியைப் போட்டுப் பார்க்க ஆசை கொண்ட பலர் தினமும் வந்து அணிந்து தமக்கும் சரியாக உள்ளதை கண்டு அதிசயித்துப் போயினார்.

அந்தக் காலணி ஒரு வயது குழந்தை முதல் வயசாளி வரை எல்லாருக்கும் பொருந்துவதாக இருந்தது. அதைக் காலில் அணிந்தவுடன் மேகத்துணுக்குகள் காலடியில் பரவுவது போலவும், பனியின் மிருது படவர்வது போலவும் இருப்பதாக பதில் கூறினர். அந்தச் செருப்பை அணிந்த பார்க்க சிலர் பணம் தரவும் தொடங்கினர். திசரியாகப் பணம் பெருகிக் கொண்டே போனது. வருடங்கள் புரண்டன. அவர் பசு இரண்டு வாங்கினார். வீடு கட்டிக் கொண்டார்.

வாழ்வின் நிலை உயர்ந்து கொண்டு போனது. இப்போதும், அந்தச் சிறுமி வரக்கூடும் என்று பலர் முகத்தின் ஊடேயும் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

இப்படியா மாரியின் முப்பது வருடம் கடந்தது. ஓர் இரவில் காலணியோடு வீடு திரும்பும் போது, அதைத் திருட முனைந்த இருவர் தடியால் தாக்க பலமிழந்து கத்தி கீழே விழுந்தார். யாரோ அவரைக் காப்பாற்றினார்கள். காலணி திருடு போகவில்லை.

ஆனால் தலையில் பட்ட அடி அவரைப் பலவீனமடையச் செய்தது. வீட்டை விட்டு வெளியேறி நடக்க முடியாதவராகிப் போனார். அந்தச் சிறுமிக்காக மனம் காத்துக் கொண்டே இருந்தது. தனது மரணத்தின் முன்பு ஒரு தரம் அவளைச் சந்திக்க முடியாதோன என்ற ஏக்கம் பற்றிக் கொண்டது.

ஒரு மழை இரவில் அந்தச் சிறுமி பெரியவளாக மாரியின் வீட்டிற்கு வந்து நின்றாள். அடையாளர் கண்டு கொண்ட மாரி அவளுடைய செருப்பை அவளிடம் கொடுத்தார். அந்தச் செருப்பின் சிறப்பை அவளிடம் கூறி அவளைப் பற்றி அறிய அவளை வினவினார் மாரி.

ஆனால் அவள் பதில் ஏதும் கூறாமல் சிரித்தபடியே மாரியின் வீட்டை விட்டு நீங்கினாள். வெளியே சென்றதும் அந்த வலதுகால் செருப்பை அணிந்தாள். அது அவளுக்கு பொருந்தவில்லை.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கூற்றை ஆராய்க

1. எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
2. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளளார்.

  1. 1 மட்டும் சரி
  2. இரண்டும் சரி
  3. 2 மட்டும் சரி
  4. இரண்டும் தவறு

விடை: இரண்டும் சரி

2. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய நூல்களின் ஆசிரியர்

  1. எஸ்.ராதாகிருஷ்ணன்
  2. எஸ்.பாலகிருஷ்ணன்
  3. எஸ்.ராமகிருஷ்ணன்
  4. எஸ்.மாயகிருஷ்ணன்

விடை: எஸ்.ராமகிருஷ்ணன்

Published on: January 31, 2025 Last Updated: January 31, 2025 — Examination Department

பாடம் 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு …………………

  1. இலங்கைத்தீவு
  2. இலட்சத்தீவு
  3. மணிபல்லவத்தீவு
  4. மாலத்தீவு

விடை : மணிபல்லவத்தீவு

2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் …………………

  1. சித்திரை
  2. ஆதிரை
  3. காயசண்டிகை
  4. தீவதிலகை

விடை : ஆதிரை

சாெற்றொடரில் அமைத்து எழுதுக.

1. செடிகொடிகள்

விடை : எங்கள் தோட்டத்தில் செடிகொடிகள் வளர்ந்திருந்தன

2. முழுநிலவு நாள்

விடை : மும்பையில் முழுநிலவு நாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது

3. அமுதசுரபி 

விடை : மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம் அமுதசுரபி

4. நல்லறம்

விடை : மணிமேகலை நல்லறம் போற்றியவள்

குறு வினா

1. அமுதசுரபியின் சிறப்பு யாது?

அமுத சுரபி பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல்
வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

2. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?

வாழ்க்கைக்கு அறம் சாென்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவறை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேணடும்.

மேலும் அவர்களுக்குப பெற்றோரை மதித்தல், முதியோரை பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும் என்று மணிமேகலை மன்னரிடம் வேண்டினாள்.

சிறு வினா

1. மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?

எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள். பூத்துக் குலுங்கும் செடி கொடிகள். அடர்ந்த மரங்கள். இடையே பொய்கைகள். மனதை மயக்கும் காட்சிகள் என மணிபல்லவத்தீவு காட்சி அளித்தது

2. ‘கோமுகி“ என்பதன் பொருள் யாது?

கோமுகி என்து ஒரு பொய்கையின் பெயர். ‘கோ’ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.

சிந்தனை வினா

அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?

பசித்தோர்க்கு உணவிடம், பிற உயிர்களை நேசித்தல், கொல்லாமை, உண்மையைப் பேசுதல், ஒழுக்கம் தவறாமை, பிறருக்கு பணம், உணவு, உடை போன்றவற்றை வழங்குதல், அன்பு செய்தல், துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் கூறல், குடிக்காமல் இருத்தல், தீய சொற்களைப் பேசாமல் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மணிமேகலை ________ நகரைச் சேர்ந்தவள்.

  1. உறையூர்
  2. முசிறி
  3. மதுரை
  4. பூம்புகார்

விடை : பூம்புகார்

2. கோவலன் மாதவியின் மகள் பெயர் ________

  1. குண்டகேசி
  2. கோப்பெருந்தேவி
  3. ஆதிரை
  4. மணிமேகலை

விடை : மணிமேகலை

3. மணிமேகலையின் வேறு பெயர் ________

  1. பசிப்பிணி போக்கிய பாவை
  2. சமணத்துறவி
  3. தீயும் தீண்டாத தேவி
  4. வீர மங்கை

விடை : பசிப்பிணி போக்கிய பாவை

4. வைகாசி முழுநிலவு நாள் தோன்றுவது ________

  1. பொற்கிண்ணம்
  2. அமுதசுரபி பாத்திரம்
  3. நெல்லிக்கனி
  4. வற்றாத நீருற்று

விடை : அமுதசுரபி பாத்திரம்

5. பொருந்தாதை தேர்ந்தெடு

  1. மணிமேகலை
  2. வளையாபதி
  3. குண்டலகேசி
  4. கம்பராமயணம்

விடை : கம்பராமயணம்

6. கோமுகி என்பதன் பொருள் ________ 

  1. ஆட்டின் முகம்
  2. கழுதையின் முகம்
  3. பசுவின் முகம்
  4. மனித முகம்

விடை : பசுவின் முகம்

7. மணிமேகலை காப்பியத்தின் படி ________ சிறந்த அறமாகும்

  1. உணவு கொடுப்பது
  2. உடை கொடுப்பது
  3. இருப்பிடம் கொடுப்பது
  4. நீர் கொடுப்பது

விடை : உணவு கொடுப்பது

8. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவாேம் என்றார் 

  1. பாரதிதாசன்
  2. சுரதா
  3. இராமலிங்கனார்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

9. அமுதசுரபி பாத்திரத்தில் உணவு இட்டவள்

  1. மணிமேகலை
  2. ஆதிரை
  3. சுதமதி
  4. தீவதிலகை

விடை : ஆதிரை

10. மணிமேகலையின் தோழி

  1. மணிமேகலை
  2. ஆதிரை
  3. சுதமதி
  4. தீவதிலகை

விடை : சுதமதி

பிரித்து எழுதுக

  • வெண்மணல் = வெண்மை + மணல்
  • கையிலிருந்த = கையில் + இருந்து
  • அறநெறி = அறம் + நெறி

பொருள் தருக

  • பேணல் – பாதுகாத்தல்
  • பிணி – நோய்
  • இல்லம் – வீடு

எதிர்ச்சொல் தருக

  • பெருமை x சிறுமை
  • இட்ட x எடுத்த
  • பெறு x கொடு

வினாக்கள்

1. இரட்டைகாப்பியங்கள் யாவை?

மணிமேகலை, சிலப்பதிகாரம்

2. அமுதசுரபி என்றால் என்ன?

அள்ள அள்ள குறையாமல் உணவு வழங்குவது அமுதசுரபி ஆகும்

3. அமுதசுரபி எப்போது தோன்றும்?

வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் அமுதசுரபி தோன்றும்.

 

Published on: January 31, 2025 Last Updated: January 31, 2025 — Examination Department

பாடம் 8.2 நீங்கள் நல்லவர்

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

சொல்லும் பாெருளும்

  • சுயம் – தனித்தன்மை
  • உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை

நூல் வெளி

  • கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
  • கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
  • இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும்

  1. கவலை
  2. துன்பம்
  3. மகிழ்ச்சி
  4. சோர்வு

விடை : மகிழ்ச்சி

2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.

  1. பேச
  2. சிரிக்க
  3. நடக்க
  4. உழைக்க

விடை : உழைக்க

குறு வினா

1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?

பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க் கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் செல்லாது. கொடுப்பது பழத்தின் இயல், பெறுவது வேரின் இயல்பு

2. உழைக்கும் போது என்னவாக ஆகிறோம்?

உழைக்கும் போது புல்லாங்குழலாக மாறுகிறோம்

சிந்தனை வினா

1. நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம்?

  • ஒழுக்கத்தில் உயர வேண்டும்.
  • வாய்மையைப் போற்ற வேண்டும் அல்லது கடைபிடிக்க வேண்டும்.
  • சமூகத் தொண்டின் வழியாக பிறருக்கு உதவ வேண்டும்.
  • உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும்.

2. உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக.

எனது குறிக்கோள் நல்ல பேச்சாளராக வேண்டும். அதற்கு தினமும் பள்ளிக்கு ஓழுங்காக செல்கிறேன். அதிகமான புத்தகங்களை வாசிக்கின்றேன். அவை உலக வரலாறு, இந்திய வரலாறு, உயிர்களின் தோற்றமும், வளர்ச்சியும் காலத்தை பயன்படுத்துவது எப்படு, அகராதிகள், உலகை வெல்வோம். உலக நாயகர்கள் வரலாறு, சாதனையாளர்கள் வரலாறு, அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்தித்தாள்கள், இதழ்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், புதுக்கவிதைகள், இலக்கணம், இலக்கிய வரலாறு, சமய வரலாறு, மொழி வரலாறு, உரைநடைகள், அறிவை வளர்ப்பது எப்படி என்று பல புத்தகங்களை வாசித்து வருகின்றேன்.

நான் வாசிப்பது மட்டுமல்லாது என் நண்பர்களையும் வாசிக்க ஊக்கமளிக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் சிறந்த பேச்சாளராக வருவேன் என்று நம்புகிறேன். இந்த இளமைப் பருவத்தை தக்கவிதமாய்ப் பயன்படுத்தி வருகிறேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உழைக்கும் மனிதர்கள் …………………… மாறிவிடுகிறார்கள்

  1. வேராக
  2. பழமாக
  3. புல்லாங்குழலாக
  4. இசையாக

விடை : புல்லாங்குழலாக

2. எடுத்த செயலில் தாேற்றாலும் ……………. கைவிடக் கூடாது.

  1. சோர்வு
  2. தளர்வு
  3. துன்பம்
  4. முயற்சி

விடை : முயற்சி

3. தாேல்வி வந்தாலும் ………………… இழக்கக் கூடாது

  1. சோர்வு
  2. காேபம்
  3. கவலை
  4. தன்னம்பிக்கை

விடை : தன்னம்பிக்கை

4. காெடுப்பது பழத்தின் இயல்பு ………….. வேரின் இயல்பு

  1. பெறுவது
  2. வழங்குவது
  3. வளர்வது
  4. சேகரிப்பதுமு

விடை : பெறுவது

5. பாெருந்தாத இணையைத் தேர்ந்தெடு

  1. உழைப்பு – கவிதை
  2. காெடுப்பது – பழம்
  3. இதயம் – இசை
  4. பெறுவது – வேர்

விடை : உழைப்பு – கவிதை

6. பாராட்டும் பாேது பாராட்டப்படுபவரின் மனநிலை ………………….

  1. மகிழ்ச்சி
  2. துன்பம்
  3. சோர்வு
  4. கவலை

விடை : மகிழ்ச்சி

7. பன்முக ஆற்றல் என்பது …………………..

  1. முக ஒப்பனை பெய்யும் திறன்
  2. பாடல் பாடும் திறன்
  3. பல முகங்கள் காெண்டவர்
  4. பல திறன்களைக் காெண்டவர்

விடை : பல திறன்களைக் காெண்டவர்

8. நீங்கள் நல்லவர் எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர் …………………..

  1. கண்ணதாசன்
  2. வைரமுத்து
  3. புவியரசு
  4. அழ. வள்ளியப்பா

விடை : புவியரசு

9. சுயம் என்பதன் பாெருள் ……………….

  1. வாழ்க்கை
  2. தனித்தன்மை
  3. இசை
  4. செழிப்பு

விடை : தனித்தன்மை

10. கலீல் கிப்ரான் அவர்கள் ………………. நாட்டைச் சார்ந்தவர்

  1. லெபனான்
  2. ஸ்பெயின்
  3. இஸ்ரேல்
  4. அரபுநாடு

விடை : லெபனான்

11. தீர்க்கதரிசி என்னும் நூலினை மொழிபெயர்த்தவர்

  1. புவியரசு
  2. ந.பிச்சமூர்த்தி
  3. வண்ணதாசன்
  4. கண்ணதாசன்

விடை : புவியரசு

எதிர்ச்சாெல் எழுதுக

  • நன்மை x தீமை
  • நல்லவர் x கெட்டவர்
  • எழுவது x விழுவது
  • காெடுப்பது x பெறுவது

வினாக்கள்

1. கலீல் கிப்ரான் பெற்றுள்ள பன்முக ஆற்றல் யாவை?

கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர்

2. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.

3. தங்களுடைய பேச்சில் எவ்வாறு இருத்தல் வேண்டும்?

தங்களுடைய பேச்சில் விழிப்புணர்ச்சியுடன் இருத்தல் வேண்டும்.

 

Published on: January 31, 2025 Last Updated: January 31, 2025 — Examination Department

பாடம் 8.1 பராபரக்கண்ணி

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 8.1 பராபரக் கண்ணி to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

சொல்லும் பாெருளும்

  • தண்டருள் – குளிர்ந்த கருணை
  • கூர் – மிகுதி
  • செம்மையருக்கு – சான்றோருக்கு
  • ஏவல் – தாெண்டு
  • பராபரமே – மேலான பொருள்
  • பணி – தொண்டு
  • எய்தும் –  கிடைக்கும்
  • எல்லாரும் – எல்லா மக்களும்
  • அல்லாமல் – அதைத்தவிர

பாடலின் பொருள்

  • அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
  • அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
  • எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன்.

நூல் வெளி

  • பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.
  • திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
  • இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.
  • இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.
  • இப்பாடல்கள் பராபரக் கண்ணி என்னும் தலைப்பில் உள்ளன.
  • கண்ணி என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. தம்முயிர்
  2. தமதுயிர்
  3. தம்உயிர்
  4. தம்முஉயிர்

விடை : தம்முயிர்

2. இன்புற்று + இருக்கை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________-

  1. இன்புற்றிருக்கை
  2. இன்புறுறிருக்கை
  3. இன்புற்றுஇருக்கை
  4. இன்புறுஇருக்கை

விடை : இன்புற்றிருக்கை

3. தானென்று என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. தானெ + என்று
  2. தான் + என்று
  3. தா + னென்று
  4. தான் + னென்று

விடை : தான் + என்று

4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________

  1. அழிவு
  2. துன்பம்
  3. சுறுசுறுப்பு
  4. சோகம்

விடை : சுறுசுறுப்பு

நயம் அறிக

பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்

ம்உயிர்போல் – ண்டருள்செம்மையருக்கு – செய்வேன்
ன்புற்று – ருக்கல்லாமல் – றியேன்

எதுகைச் சொற்கள்

ம்உயிர் – செம்மையருக்குசெய்யஎனை – எய்தும்
ன்பர்பணி – இன்பநிலைல்லாரும் – அல்லாமல்

குறு வினா

1. யாருக்குத் தாெண்டு செய்ய வேண்டும்?

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும்.

2. இன்பநிலை எப்போது வந்து சேரும்?

அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும்.

சிறு வினா

பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.

சிந்தனை வினா

குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?

குளிரால் வாடுபவர்களுக்கு வீடுகள் கட்டுக் கொடுப்பேன். ஆடைகள் வாங்கிக் கொடுப்பேன். தேநீர், காபி வாங்கிக் கொடுப்பேன். பாய், போர்வை, ஸ்வட்டர், கம்பளிப் போர்வை, குல்லா, மப்ளர் போன்றவைகள் வாங்கிக் கொடுப்பேன். வீட்டில் அடைக்கலம் தருவேன். நெருப்பு மூட்டி குளிரைப் போக்குவேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பராபரமே என்பதற்கு _______________ என்று பொருள்

  1. மிகுதி
  2. சான்றோருக்கு
  3. மேலான பொருள்
  4. தொண்டு

விடை : மேலான பொருள்

2. எல்லாரும் ________ வாழ வேண்டும்.

  1. துன்பமாக
  2. மகிழ்ச்சியாக
  3. சோர்வாக
  4. இன்பமாக

விடை : இன்பமாக

3. பராபரக்கண்ணி ________ என்னும் நூலில் உள்ளது

  1. தாயுமானவர் பாடல்கள்
  2. பாரதியார் பாடல்கள்
  3. பாரதிதாசன் பாடல்கள்
  4. வள்ளுவர் பாடல்கள்

விடை : தாயுமானவர் பாடல்கள்

4. ________ எனப் போற்றப்படுவது பராபரக்கண்ணி

  1. உலகப்பொதுமறை
  2. தமிழ் மொழி உபநிடதம்
  3. பொய்யா மொழி
  4. முப்பால்

விடை : தமிழ் மொழி உபநிடதம்

5. கூர் என்பதனைக் குறிக்கும் மற்றொரு சொல் ________

  1. மிகுதி
  2. கருணை
  3. குறைவு
  4. தொண்டு

விடை : மிகுதி

பிரித்து எழுதுக

  • எவ்வுயிரும் = எ + உயிரும்
  • இன்பநிலை = இன்பம் + நிலை
  • இன்புற்ற = இன்பம் +உற்ற
  • வேறொன்று = வேறு + ஒன்று
  • வந்தெய்தும் = வந்து + எய்தும்
  • ஆளாக்கி = ஆள் + ஆக்கி

எதிர்ச்சொல் எழுதுக

  • இன்பம் x துன்பம்
  • வந்து x சென்று
  • நினைக்க x மறக்க

வினாக்கள்

1. தாயுமானவர் எதையும் நினைக்க மாட்டேன் என்று எதை கூறுகிறார்?

எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.

2. தாயுமானவர் பற்றி குறிப்பு எழுதுக

  • பராபரக்கண்ணி என்னும் நூலை எழுதியவர் தாயுமானவர்
  • திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்காராகப் பணி புரிந்தவர்.

3. ‘கண்ணி’ என்பது யாது?

‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

 

Published on: January 30, 2025 Last Updated: January 30, 2025 — Examination Department

பாடம் 7.4 நால்வகைச் சொற்கள்

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 7.4 நால்வகைச் சொற்கள் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

கற்பவை கற்றபின்

பின்வரும் தாெடர்களில் உள்ள நால்வகைச் சாெற்களை வகைப்படுத்துக.

1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.

வளவனும்வளவன்பெயர்ச்சொல்
உம்இடைச்சொல்
தங்கையும்தங்கைபெயர்ச்சொல்
உம்இடைச்சொல்
மாநகரப்நகரம்பெயர்ச்சொல்
மாஉரிச்சொல்
பேருந்தில்பேருந்துபெயர்ச்சொல்
ஏறினர்வினைச்சொல்

2. நாள்தாேறும் திருக்குறளைப் படி.

நாள்தோறும்

  • நாள் – பெயர்ச்சொல்
  • உம் – இடைச்சொல்

திருக்குறளைப்

  • திருக்குறள் – பெயர்ச்சொல்
  • ஐ – இடைச்சொல்

படி – வினைச்சொல்

3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர்.

ஏழைக்குஏழைபெயர்ச்சொல்
ஏழைக்குகுஇடைச்சொல்
உதவுதல்வினைச்சொல்
சாலச் சிறந்ததுசாலஉரிச்சொல்
ஆசிரியர்பெயர்ச்சொல்

4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சாெல்லை எழுதுக.

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

இடைச்சொல் – கு (செவிக்கு), மற்று

மதிப்பீடு

சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு

1. அ) படித்தாள் ஆ) இ) மற்று ஈ) கு

விடை : படித்தாள்

2. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஆல்

விடை : ஆல்

3. அ) சென்ற ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்த

விடை : சித்திரை

4. அ) மாநாடு ஆ) இ) உம் ஈ) மற்று

விடை : மாநாடு

குறு வினா

1. சாெல் என்றால் என்ன?

தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தாெடரந்து வந்தும் பொருள் தரும். இவவாறு பொருள் தருபவை சாெல் எனப்படும்.

2. சாெற்களின் வகைகளை எழுதுக.

இலக்கண அடிப்படையில் சாெற்கள்

  • பெயரச்சாெல்
  • வினைச்சாெல்
  • இடைச்சாெல்
  • உரிச்சாெல்

என நான்கு வகைப்படும்.

3. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சாெற்களை எவ்வாறு வழங்குகிறோம்?

பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சாெற்களை இடைச்சொல் என்று வழங்குகிறோம். இது தனித்து இயங்காது.

கூடுதல் வினாக்கள்

1. பெயர்ச்சொல் என்றால் என்ன?

ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

(எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

2. வினைச்சொல் என்றால் என்ன?

வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

(எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.

3. இடைச்சொல் என்றால் என்ன?

பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.

(எ.கா.)

  • உம் – தந்தையும் தாயும்
  • மற்று – மற்றொருவர்
  • ஐ – திருக்குறளை

4. உரிச்சொல் என்றால் என்ன?

பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.

(எ.கா.)

  • மா – மாநகரம்
  • சால – சாலச்சிறந்தது

 

மொழியை ஆள்வோம்

கீழ்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தாெழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தாெடங்கியவர்.

1906 ஆம் ஆண்டு அக்டாேபர் 16ஆம் நாள் ”சுதேசி நாவாய்ச் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

சுதேசி நாவாயச் சங்கத்தை நிறுவியவர் வ.உ.சிதம்பரனார்.

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்

3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?

வ. உ.சி. அவர்கள் பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?

  • வழக்கறிஞர்
  • எழுத்தாளர்
  • பேச்சாளர்
  • தாெழிற்சங்கத் தலைவர்

5. வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மாெழிகள் யாவை?

வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.

இடம் அறிந்து பயன்படுத்துவோம்

ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)

  • ஓர் ஊர் ஓர் ஏரி
  • ஒரு நகரம் ஒரு கடல்

இவை போலவே, உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)

  • அஃது இங்கே உள்ளது.
  • அது நன்றாக உள்ளது.

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

விடை : ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.

விடை : ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

விடை : அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

விடை : அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

5. அது ஒரு இனிய பாடல்.

விடை : அஃது அது ஒரு இனிய பாடல்.

அகரவரிசைப்படுத்து

பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.

விடை :

பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து,

மொழியோடு விளையாடு

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு.

எனக்குஉண்டுஎனக்குண்டு
இல்லைஎனக்கில்லை
வடக்குஉண்டுவடக்குண்டு
இல்லைவடக்கில்லை
பந்துஉண்டுபந்துண்டு
இல்லைபந்தில்லை
பாட்டுஉண்டுபாட்டுண்டு
இல்லைபாட்டில்லை

கட்டங்களில் உள்ள சொற்களை கொண்டு தொடர்களை உருவாக்குக

பாரிவீட்டுக்குவந்தன
எழிலிவந்தான்
மாணவர்கள்வந்தது
மாடுவந்தார்கள்
மாடுகள்வந்தாள்
  • பாரி வீட்டுக்கு வந்தான்.
  • எழிலி வீட்டுக்கு வந்தாள்.
  • மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
  • மாடு வீட்டுக்கு வந்தது.
  • மாடுகள் வீட்டுக்கு வந்தன.

கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக

கும்பேசின்
ருண்தா
ந்றுடிய்
ன்தும்செ
மாடுற்று
க்கிறான்

பெயர்ச்சொல்

  • குமரன், கரம், மாடு, பேருந்து, சிவன், தாய், வண்டி, செறு, பண், பசி, நகரம்

வினைச்சொல்

  • நடக்கிறாள், செய்தான்

இடைச்சொல்

  • கு, ஐ, உம், மற்று, தான்

உரிச்சொல்

  • உறு, மாநகரம்

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்

  • நட்டுப்பற்று – Patriotism
  • இலக்கியம் – Literature
  • கலைக்கூடம் – Art Gallery
  • மெய்யுணர்வு – Knowledge of Reality