6th Tamil Book Back Solutions Chapter 3.4 ஒளி பிறந்நதது

பாடம் 3.4 ஒளி பிறந்தது

Friends.,

Here we have provided the SSLC Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 3.4 ஒளி பிறந்நதது to prepare for exams. The solutions are accurate and as per the SSLC syllabus.

மதிப்பீடு

1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளது.
  • எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.
  • அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது.
  • நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.
  • பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

இவற்றையெல்லாம் இந்தியாவின் வெற்றிகளாகக் கருதுகின்றேன்.

2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?

போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழைையக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை அளித்ததாகக் அப்துல் கலாம் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. லிலியன் வாட்சன் எழுதியுள்ள நூல்

  1. விளக்குகள் பல தந்த ஒளி
  2. ஆசிய ஜோதி
  3. மனோன்மனியம்
  4. வெற்றிகள் தந்த ஒளி

விடை: விளக்குகள் பல தந்த ஒளி

2. உலகின் முதல் விஞ்ஞானிகள்

  1. குழந்தைகள்
  2. ஆசிரியர்கள்
  3. அறிவியல் அறிஞர்கள்
  4. பெற்றோர்கள்

விடை: குழந்தைகள்

குறுவினா

1. வெற்றியடையும் வழிகள் என அப்துல்கலாம் கூறியன யாவை?

  • அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள்
  • வியர்வை! வியர்வை! வியர்வை!

2. உலகின் முதல் விஞ்ஞானியாக யாரைக் கூறலாம்?

கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் எனக் கூறலாம்.

3. சூரியனுக்கு செல்ல அப்துல்கலாம் கூறிய யோசனை யாது?

சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. அவ் வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு இன்றைய சூழலில் கவசங்கள் இல்லை. வருங்காலத்தில் அதிகபட்ச வெப்பத்தைத் தாங்கும் கருவிகள் கண்டறியப்படலாம். அப்போது மனிதன் சூரியனையும் கூடச் சென்றடையலாம் என அப்துல் கலாம் யோசனை கூறியுள்ளார்.

4. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் என கலாம் கூறுகிறார்?

  • ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.
  • அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும், நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக் கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.
  • செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.

5. தமிழில் அப்துல்கலாமுக்கு மிகவும் பிடித்த நூல் எது?

தமிழில் அப்துல்கலாமுக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள் ஆகும்.

6. கலாமின் வாழ்வில் வலு சேர்த்த குறள் எது?

‘அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்’

என்னும் குறள் என் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது.

7. அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் எந்த நூலில் கிடைத்ததாக கலாம் கூறினார்?

அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் ‘லிலியன் வாட்சன்’ எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி நூலில் கிடைத்ததாக கலாம் கூறினார்.

8. கலாமுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமான முதல் நிகழ்வு எது?

கலாம் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது அவரின் அறிவியல் ஆசிரியர் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கிக் கூறினார். அன்று முதல், வானில் பறக்க வேண்டும் என்பது அவரின் வாழ்க்கையின் குறிக்கோள் ஆகிவிட்டது. அதுவே அவரின் அறிவியல் ஆர்வத்தின் தொடக்கம்.