இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குதல் (marabu pizhaigal vazhuvu sorkal) பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குதல்
மரபுச்சொற்கள் பெயர்மரபு, வினை மரபு என வகைப்படும்
பெயர் மரபுச் சொற்கள் |
பறவை, விலங்குகளின் இளமைப்பெயர்கள்
| எலிக்குஞ்சு | குருவிக்குஞ்சு |
| கோழிக்குஞ்சு | கீரிப்பிள்ளை |
| பசுங்கன்று | பன்றிக்குட்டி |
| மான்கன்று | யானைக்கன்று |
| ஆட்டுக்குட்டி | கழுதைக்குட்டி |
| குதிரைக்குட்டி | நாய்க்குட்டி |
| புலிப்பரள் | பூனைக்குட்டி |
| சிங்கக்குருளை | எருமைக்கன்று |
| அணிற்பிள்ளை | கிளிக்குஞ்சு |
பறவை, விலங்குகளின் இருப்பிடம்
| கோழிப்பண்ணை | மாட்டுத்தொழுவம் |
| யானைக்கூட்டம் | ஆட்டுப்பட்டி |
| குதிரைக்கொட்டில் | கோழிக்கூண்டு |
| குருவிக்கூடு | கரையான் புற்று |
| எலி வளை | நண்டு வளை |
| வாத்துப் பண்ணை | சிலந்தி வலை |
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்
| வேப்பந்தழை | வாழைத்தண்டு |
| ஆவரங்குழை | கீரைத்தண்டு |
| நெல்தாள் | கம்பத்தட்டு (தட்டை) |
| தாழைமடல் | சோளத்தட்டு (தட்டை) |
| முருங்கைக்கீரை | ஈச்ச ஓலை |
| தென்னங்கீற்று | தினைத்தாள் |
| வாழையிலை | மா இலை |
| பனை ஒலை | தென்னை ஓலை |
| கமுகுக் கூந்தல் | கேழ்வரகுத்தட்டை |
| மூங்கில் இலை | பலா இலை |
காய்களின் இளமைப்பெயர்கள்
| அவரைப்பிஞ்சு | வாழைக்காய் |
| கத்திரிப்பிஞ்சு | வெள்ளரிப்பிஞ்சு |
| தென்னங்குரும்பை | பலாப்பிஞ்சு |
| மாவடு | முருங்கைப்பிஞ்சு |
| வாழைக்குருத்து | மாந்தளிர் |
செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்
| ஆலங்காடு | கம்பங்கொல்லை |
| பனந்தோப்பு | சோளக்கொல்லை |
| மாந்தோப்பு | வாழைத்தோட்டம் |
| தென்னந்தோப்பு | பூஞ்சோலை |
| வெற்றிலைத்தோட்டம் | இலுப்பைத்தோட்டம் |
| பலாத்தோப்பு | சவுக்குத்தோப்பு |
| முந்திரித்தோப்பு | புளியந்தோப்பு |
| தேயிலைத்தோட்டம் | பூந்தோட்டம் |
| பனங்காடு | வேலங்காடு |
| கொய்யாத்தோப்பு | நெல்வயல் |
| பூந்தோட்டம் | மாந்தோப்பு |
| கருப்பங்கொல்லை |
பொருட்களின் தொகுப்பு
| ஆட்டுமந்தை | ஆநிரை |
| உடுக்கணம் (உடு-நட்சத்திரம்) | வேலங்காடு |
| கற்குவியல் | மக்கள் கூட்டம் |
| சாவிக்கொத்து | மாட்டுமந்தை |
| கள்ளிக்கற்றை | யானைக்கூட்டம் |
| திராட்சைக்குலை | விறகுக்கட்டு |
| வைக்கோற்போர் | வீரர்படை |
| எறும்புச்சாரை |
பறவை, விலங்குகளின் இளமைப்பெயர்கள்
| எலிக்குஞ்சு | குருவிக்குஞ்சு |
| கோழிக்குஞ்சு | கீரிப்பிள்ளை |
| பசுங்கன்று | பன்றிக்குட்டி |
| மான்கன்று | யானைக்கன்று |
| ஆட்டுக்குட்டி | கழுதைக்குட்டி |
| குதிரைக்குட்டி | நாய்க்குட்டி |
| புலிப்பரள் | பூனைக்குட்டி |
| சிங்கக்குருளை | எருமைக்கன்று |
| அணிற்பிள்ளை | கிளிக்குஞ்சு |
வினை மரபுச் சொற்கள் |
ஒலிக்கு உரிய வினைகள்
விலங்குகளின் ஒலி மரபு
| கழுதை கத்தும் | புலி உறும் |
| குதிரை கனைக்கும் | யானை பிளிறும் |
| சிங்கம் முழங்கும் | எருது எக்காளமிடும் |
| சிங்கம் கர்சிக்கும் | நரி ஊளையிடும் |
| எலி கீச்சீடும் | நாய் குரைக்கும் |
| அணில் கீச்சிடும் | பசு கதறும் |
| பாம்பு சீறும் | பன்றி உறுமும் |
பறவைகளின் ஒலி மரபு
| சேவல் கூவும் | கிளி கொஞ்சும் |
| கூகை (கோட்டான்) குழறும் | குயில் கூவும் |
| மயில் அகவும் | கோழி கொக்கரிக்கும் |
| கிளி பேசும் | குருவி கீச்சிடும் |
| வண்டு முரலும் | வாத்து கத்தும் |
| ஆந்தை அலறும் | காக்கை கரையும் |
பெயர்களுக்குப் பொருத்தமான வினைகள்
| அப்பம் தின் | கதிர் அறு |
| ஏர் உழு | களை பறி |
| கல் உடை | அம்பு எய் |
| காய்கறி அரி | மரம் வெட்டு |
| நார் கிழி | கிளையை ஒடி |
| இலை பறி | கூரை வேய் |
| சந்தனம் பூசு | வரப்புக் கட்டு |
| சோறு உண் | விதையை விதை |
| தென்றல் வீசும் | வெற்றிலை தின் |
| தாள் அடி | விறகைப் பிள |
| பாடல் இயற்று | நூல் எழுது |
| பழம் தின் | படம் வரை |
| தோசை சுடு | இட்லி அவி |
| தேனை நக்கு | மது அருந்து |
| பால் பருகு | நீர் குடி |
| ஓவியம் வரைந்தார் | வண்ணம் தீட்டினார் |
| சிற்பம் செதுக்கினார் | பூப்பறித்தல் |
| செய்யுள் இயற்றினார் | வெற்றிலை கிள்ளுதல் |
| குடம் வனைந்தார் | யானைப்பாகன் |
| கூடை முடைந்தார் | ஆட்டு இடையன் |
| கூரை வேய்ந்தார் | சுவர் எழுப்பினான் |
| வீடு கட்டினார் | அம்பு, வேல், எறிதல் |
வழூஉச் சொற்கள் & திருத்தம்
| வழூஉச் சொற்கள் | திருத்தம் |
| அடமழை | அடைமழை |
| அதுகள் | அவை |
| அருவாமனை | அரிவாள்மனை |
| அருகாமையில் | அருகில் |
| அண்ணாக்கயிறு | அரைஞாண்கயிறு |
| அமக்களம் | அமர்க்களம் |
| அவரக்காய் | அவரைக்காய் |
| அடயாளம் | அடையாளம் |
| அப்ளம் | அப்பளம் |
| அலமேலு மங்கை | அலர்மேல் மங்கை |
| அகண்ட | அகன்ற |
| அடிச்சுட்டா | அடித்துவிட்டாள் |
| அத்தினி | அத்தனை |
| ஆத்துக்கு | அகத்துக்கு |
| அறுவறுப்பு | அருவருப்பு |
| அங்கிட்டு | அங்கு |
| அவுந்து | அவிழ்ந்து |
| ஆச்சி | ஆட்சி |
| ஆம்படையான் | அதமுடையான் |
| அவங்க | அவர்கள் |
| ஆம்பிள்ளை | ஆண்பிள்ளை |
| ஆத்திற்கு | ஆற்றிற்கு |
| ஆச்சு | ஆயிற்று |
| இடதுபக்கம் | இடப்பக்கம் |
| இன்று | இன்றைக்கு |
| இடதுகை | இடக்கை |
| இத்தினை | இத்தனை |
| இரும்பல் | இருமல் |
| இங்கிட்டு | இங்கு |
| இளனி | இளநீர் |
| இறச்சி | இறைச்சி |
| இன்னும் | இன்னும் |
| இடைபோடு | எடைபோடு |
| இவையன்று | இவையல்லை |
| இத்துபோதல் | இற்றுப்போதல் |
| ஈர்கலி | ஈர்கொல்லி |
| உசிர் | உயிர் |
| உடமை | உடைமை |
| உந்தன் | உன்றன் |
| உளுந்து | உழுந்து |
| உச்சி | உரித்து |
| உத்திரவு | உத்தரவு |
| உலந்து | உலர்ந்து |
| ஊரணி | ஊருணி |
| எகளை, மொகனை | எதுகை, மோனை |
| எண்ணை | எண்ணெய் |
| ஒத்தடம் | ஒற்றடம் |
| ஒருக்கால் | ஒருகால் |
| ஒம்பது | ஒன்பது |
| ஒருவள் | ஒருத்தி |
| ஒசத்தி, ஒயர்வு | உயர்வு |
| ஒண்டியாய் | ஒன்றியாய் |
| ஒண்டுக்குடுத்தனம் | ஒன்றிக்குடித்தனம் |
| ஒட்டரை | ஒட்டடை |
| கறம் | கரம் |
| கத்திரிக்காய் | கத்தரிக்காய் |
| கடகால் | கடைகால் |
| கயறு, கவுறு | கயிறு |
| கடப்பாறை | கடப்பாரை |
| கட்டிடம் | கட்டம் |
| கவுளி | கவளி |
| கண்ணாலம் | கல்யாணம் |
| காக்கா | காக்கை |
| கருவேற்பிலை | கறிவேப்பிலை |
| காத்து | காற்று |
| குடிக்கூலி | குடிக்கூலி |
| கெடிகாரம் | கடிகாரம் |
| கோடாலி | கோடாரி |
| கோர்வை | கோவை |
| கோர்வை | கோத்து |
| குதவளை, குறவளை | குரல்வளை |
| கைமாறு | கைம்மாறு |
| கிரணம் | கிரகணம் |
| குதுவை | கொதுவை |
| சாம்பராணி | சாம்பிராணி |
| சாய்ங்காலம் | சாயுங்காலம் |
| சிகப்பு | சிவப்பு |
| சிலது | சில |
| சிலவு | செலவு |
| சுவற்றில் | சுவரில் |
| சீக்காய் | சிகைக்காய் |
| சந்தணம் | சந்தனம் |
| சம்மந்தம் | சம்பந்தம் |
| சம்மந்தி | சம்பந்தி |
| சும்மாயிரு | சும்மாவிரு |
| தங்கச்சி | தங்கை |
| தடுமாட்டம் | தடுமாற்றம் |
| தாப்பாள் | தாழ்ப்பாள் |
| தலகாணி | தலையணை |
| தாவாராம் | தாழ்வாரம் |
| தமயன் | தமையன் |
| திரேகம் | தேகம் |
| தொடப்பம், துடப்பம் | துடைப்பம் |
| துவக்கம் | தொடக்கம் |
| துவக்கப்பள்ளி | தொடக்கப்பள்ளி |
| துளிர் | தளிர் |
| தொந்திரவு | தொந்தரவு |
| தேனீர் | தேநீர் |
| துறவல் | திறவுபோல் |
| நேத்து | நேற்று |
| நோம்பு | நோன்பு |
| நஞ்சை | நன்செய் |
| நாகரீகம் | நாகரிகம் |
| நாத்தம் | நாற்றம் |
| நெனவு | நனவு, நினைவு |
| பண்டககாலை | பண்டசாலை |
| பதட்டம் | பதற்றம் |
| பயிறு | பயறு |
| பாவக்காய் | பாகற்காய் |
| புஞ்சை | புன்செய் |
| புண்ணாக்கு | பிண்ணாக்கு |
| பெம்பளை | பெண்பிள்ளை |
| பொட்லம் | பொட்டலம் |
| பதனி | பதனீர் |
| புடவை | புடைவை |
| புழக்கடை | புறங்கடை |
| புட்டு | பிட்டு |
| மணத்தக்காளி | மணித்தக்காளி |
| பேரன் | பெயரன் |
| பேதம | பேதைமை |
| போச்சு | போயிற்று |
| போறும் | போதும் |
| பொன்னாங்கண்ணிக்கீரை | பொன்னாங்காணிக்கீரை |
| முழுங்கு | விழுங்கு |
| முயற்சித்தான் | முயன்றான் |
| முமித்தான் | விழித்தான் |
| மெனக்கெட்டு | வினைகெட்டு |
| மோர்ந்து | மோந்து |
| மாங்காமரம் | மாமரம் |
| மானம் | வானம் |
| முந்தாணி | முன்றானை |
| முன்னூறு | முந்நூறு |
| ரொம்ப | நிரம்ப |
| வயறு | வயிறு |
| வலது பக்கம் | வலப்பக்கம் |
| வெங்கலம் | வெண்கலம் |
| வெண்ணை | வெண்ணெய் |
| வெய்யல் | வெயில் |
| வேண்டாம் | வேண்டா |
| வெட்டிப்பேச்சு | வெற்றுப்பேச்சு |
| வண்ணாத்திப்பூச்சி | வண்ணத்துப்பூச்சி |
| வேர்வை | வியர்வை |
| வைக்கல் | வைக்கோல் |
சொற்களை சேர்த்தும் பிரித்தும் எழுதுதல்
தெளிவும், எளிமையும் உடைய மொழிநடை சிறந்ததாகும். ஆகவே, வாக்கியத்தில் சேர்த்தெழுத வேண்டிய சொற்களைச் சேர்த்தும், பிரித்தெழுத வேண்டிய சொற்களைப் பிரித்தும் எழுதுதல் வேண்டும்.வேற்றுமை உருபுகளைப் பிரித்தெழுதல் கூடாது
எ.கா.
- இப்பணி முருகன் ஆல் செய்யப்பட்டது – தவறு
இப்பணி முருகனால் செய்யப்பட்டது – சரி
- தாய் ஓடு அறுசுவைப்போம் – தவறு
தாயோடு அறுசுவைப்போம் – சரி
இடைச்சொற்களைப் பிரித்தெழுதல் கூடாது
எ.கா.
- சான்றோரும் உண்டு கொல் – தவறு
சான்றோரும்உண்டுகொல் – சரி
உடம்படு மெய்களைப் பிரித்தெழுதல் கூடாது
எ.கா.
- மான்கள் நீர் குடித்தன – தவறு
மான்கள் நீர்குடித்தன – சரி
- பாய் குதிரை – தவறு
பாய்குதிரை- சரி
- செந் தமிழ் – தவறு
செந்தமிழ் – சரி
- சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளியற்றினார் – தவறு
சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் இயற்றினார் – சரி
Related Links
ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்