பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 6th – 12th

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் — இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து சொல்லும் பொருளும் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். 

6th to 12th

Quick Links

ஆறாம் வகுப்பு

  1. நிருமித்த – உருவாக்கிய
  2. விளைவு – விளைச்சல்
  3. சமூகம் – மக்கள் குழு
  4. அசதி – சோர்வு
  5. சுடர் – ஒளி
  6. ஆழிப்பெருக்கு – கடல்கோள்
  7. மேதினி – உலகம்
  8. ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  9. உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை
  10. மெய் – உண்மை
  11. வழி – நெறி
  12. அகற்றும் – விலக்கும்
  13. மேன்மை – உயர்வு
  14. அறம் – நற்செயல்
  15. திங்கள் – நிலவு
  16. கொங்கு – மகரந்தம்
  17. அலர் – மலர்தல்
  18. திகிரி – ஆணைச்சக்கரம்
  19. பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்
  20. மேரு – இமயமலை
  21. நாமநீர் – அச்சம் தரும் கடல்
  22. அளி – கருணை
  23. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
  24. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
  25. சித்தம் – உள்ளம்.
  26. இயன்றவரை – முடிந்தவரை
  27. ஒருமித்து – ஒன்றுபட்டு
  28. ஔடதம் – மருந்து
  29. மாசற – குறைஇல்லாமல்
  30. சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
  31. தேசம் – நாடு
  32. தூற்றும் படி – இகழும் படி
  33. மூத்தோர் – பெரியோர்
  34. மேதைகள் – அறிஞர்கள்
  35. மாற்றார் – மற்றவர்
  36. நெறி – வழி
  37. வற்றாமல் – அழியாமல்
  38. நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
  39. ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்
  40. நட்டல் – நட்பு கொள்ளுதல்
  41. நந்தவனம் – பூஞ்சோலை
  42. பார் – உலகம்
  43. பண் – இசை
  44. இழைத்து – செய்து
  45. மல்லெடுத்த – வலிமைபெற்ற
  46. சமர் – போர்
  47. நல்கும் – தரும்
  48. கழனி – வயல்
  49. மறம் – வீரம்
  50. எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
  51. கலம் – கப்பல்
  52. ஆழி – கடல்
  53. கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி
  54. மின்னல்வரி – மின்னல் கோடுகள்
  55. அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்
  56. மெய்- உண்மை
  57. தேசம் – நாடு
  58. தண்டருள் – குளிர்ந்த கருணை
  59. கூர் – மிகுதி
  60. செம்மையருக்கு – சான்றோருக்கு
  61. ஏவல் – தாெண்டு
  62. பராபரமே – மேலான பொருள்
  63. பணி – தொண்டு
  64. எய்தும் – கிடைக்கும்
  65. எல்லாரும் – எல்லா மக்களும்
  66. அல்லாமல் – அதைத்தவிர
  67. சுயம் – தனித்தன்மை
  68. உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை
  69. அஞ்சினார் – பயந்தனர்
  70. கருணை – இரக்கம்
  71. வீழும் – விழும்
  72. ஆகாது – முடியாது
  73. பார் – உலகம்
  74. நீள்நிலம் – பரந்த உலகம்
  75. முற்றும் – முழுவதும்
  76. மாரி – மழை
  77. கும்பி – வயிறு
  78. பூதலம் – பூமி

ஏழாம் வகுப்பு

  1. ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
  2. குறி – குறிக்கோள்
  3. விரதம் – நோன்பு
  4. பொழிகிற – தருகின்ற
  5. ஒப்புமை – இணை
  6. முகில் – மேகம்
  7. அற்புதம் – விந்தை
  8. உபகாரி – வள்ளல்
  9. ஈன்று – தந்து
  10. களித்திட – மகிழ்ந்திட
  11. கொம்பு – கிளை
  12. நச்சரவம் – விடமுள்ள பாம்பு
  13. அதிமதுரம் – மிகுந்த சுவை
  14. விடுதி – தங்கும் இடம்
  15. தீபம் – ஒளி
  16. பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
  17. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்
  18. சிற்றில் – சிறு வீடு
  19. யாண்டு – எங்கே
  20. கல் அளை – கற்குகை
  21. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
  22. சூரன் – வீரன்
  23. வாரணம் – யானை
  24. பொக்கிஷம் – செல்வம்
  25. பரி – குதிரை
  26. சாஸ்தி – மிகுதி
  27. சிங்காரம் – அழகு
  28. விஸ்தாரம் – பெரும்பரப்பு
  29. கமுகு – பாக்கு
  30. தேடல் – தூண்
  31. சென்னி – உச்சி
  32. ஞெகிழி – தீச்சுடர்
  33. உரவுநீர் – பெருநீர்பரப்பு
  34. அழுவம் – கடல்
  35. கரையும் – அழைக்கும்
  36. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
  37. உரு – அழகு
  38. வங்கம் – கப்பல்
  39. போழ – பிளக்க
  40. எல் – பகல்
  41. வங்கூழ் – காற்று
  42. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
  43. கோடு உயர் – கடை உயர்ந்த
  44. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்
  45. எத்தனிக்கும் – முயலும்
  46. பரிதி – கதிரவன்
  47. வெற்பு – மலை
  48. அன்னதோர் – அப்படி ஒரு
  49. கழனி – வயல்
  50. கார்முகில் – மழைமேகம்
  51. நிகர – சமம்
  52. துயின்றிருந்தோர் – உறங்கியிருந்தார்
  53. வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
  54. கோட்பா – ஒருவரால் கொள்ளப்படாது
  55. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
  56. விச்சை – கல்வி
  57. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
  58. வனப்பு – அழகு
  59. நெடி – நாற்றம்
  60. பூரிப்பு – மகிழ்ச்சி
  61. மழலை – குழந்தை
  62. மேனி – உடல்
  63. வண்கீரை – வளமான கீரை
  64. பரி – குதிரை
  65. முட்டப்போய் – முழுதாகச் சென்று
  66. கால் – வாய்க்கால், குதிரையின் கால்
  67. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
  68. மாரி – மழை
  69. வறந்திருந்த – வறண்டிருந்த
  70. புகவா – உணவாக
  71. மடமகள் – இளமகள்
  72. நல்கினாள் – கொடுத்தாள்
  73. முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
  74. குழி – நில அளவைப்பெயர்
  75. சீலை – புடவை
  76. சாண் – நீட்டல் அளவைப்பெயர்
  77. மடை – வயலுக்கு நீர் வரும் வழி
  78. மணி – முற்றிய நெல்
  79. கழலுதல் – உதிர்தல்
  80. சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
  81. வையம் – உலகம்
  82. புகவா – உணவாக
  83. வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
  84. இடர் ஆழி – துன்பக்கடல்
  85. சொல் மாலை – பாமாலை
  86. தகளி – அகல்விளக்கு
  87. ஞானம் – அறிவு
  88. நாரணன – திருமால்
  89. ஆர்வம் – விருப்பம்
  90. கூடர் – ஒளி
  91. வித்து – விதை
  92. களை – வேண்டாத செடி
  93. ஈன – பெற
  94. பைங்கூழ் – பசுமையான பயிர்
  95. நிலன் – நிலம்
  96. வன்சொல் – கடுஞ்சொல்
  97. சாந்தம் – அமைதி
  98. தாரணி – உலகம்
  99. மகத்துவம் – சிறப்பு
  100. தத்துவம் – உண்மை
  101. பேதங்கள் – வேறுபாடுகள்
  102. இரக்கம் – கருணை

எட்டாம் வகுப்பு

  1. நிரந்தரம் – காலம் முழுமையும்
  2. வண்மொழி – வளமிக்கமொழி
  3. வைப்பு – நிலப்பகுதி
  4. இசை – புகழ்
  5. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  6. தொல்லை – பழமை, துன்பம்
  7. விசும்பு – வானம்
  8. மரபு – வழக்கம்
  9. மயக்கம் – கலவை
  10. திரிதல் – மாறுபடுதல்
  11. இருதிணை – உயர்திணை, அஃறிணை
  12. செய்யுள் – பாட்டு
  13. வழாஅமை – தவறாமை
  14. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
  15. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
  16. தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்
  17. பயிலுதல் – படித்தல்
  18. ஈரம் – இரக்கம்
  19. நாணம் – வெட்கம்
  20. முழவு – இசைக்கருவி
  21. செஞ்சொல் – திருந்தியசொல்
  22. நன்செய் – நிறைந்தை நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  23. புன்செய் – குறைந்தை நீரொல் பயிர்கள் விளையும் நிலம்
  24. வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
  25. முகில் – மேகம்
  26. வின்னம் – சேதம்
  27. கெடிகலங்கி – மிக வருந்தி
  28. வாகு – சரியாக
  29. சம்பிரமுடன் – முறையாக
  30. காலன் – எமன்
  31. சேகரம் – கூட்டம்
  32. மெத்த – மிகவும்
  33. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
  34. தீர்வன – நீங்குபவை
  35. திறத்தன – தன்மையுடையன
  36. உவசமம் – அடங்கி இருத்தல்
  37. கூற்றவா – பிரிவுகளாக
  38. நிழல்இகழும் – ஒளிபொருந்திய
  39. பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
  40. பேர்தற்கு – அகற்றுவதற்கு
  41. பிணி – துன்பம்
  42. திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
  43. ஓர்தல் – நல்லறிவு
  44. தெளிவு – நற்காட்சி
  45. பிறவார் – பிறக்கமாட்டார்
  46. நித்தம் நித்தம் -நாள்தோறும்
  47. வையம் – உலகம்
  48. மட்டு – அ்ளவு
  49. பேணுவயல் -பாதுகாத்தல்
  50. சுண்ட -நன்கு
  51. திட்டுமுட்டு -தடுமாற்றம்
  52. கலன் – அணிகலன்
  53. முற்றை – ஒளிர
  54. வேண்டாவாம் – தேவையில்லை
  55. தடம் – அடையாளம்
  56. அகம்பாவம் – செருக்கு
  57. புத்தி – அறிவு
  58. பாதை – அறிவு
  59. உள்ளம் – மனம்
  60. லாபம் – பலன்
  61. எண்ணி – நினை
  62. பண் – இசை
  63. கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
  64. மதவேழங்கள் – மதயானைகள்
  65. முரலும் – முழங்கும்
  66. பழவெய் – முதிர்ந்த மூங்கில்
  67. அலந்தவர் – வறியவர்
  68. செறாஅமை – வெறுக்காமை
  69. கிளை – உறவினர்
  70. பேதையார் – அறிவற்றவர்
  71. நோன்றல் – பொறுத்தல்
  72. மறாஅமை – மறவாமை
  73. போற்றார் – பகைவர்
  74. பொறை – பொறுமை
  75. வாரி – வருவாய்
  76. எஞ்சாமை – குறைவின்றி
  77. முட்டாது – தட்டுப்பாடின்றி
  78. ஒட்டாது – வாட்டம்இன்ற
  79. வைகுக – தங்குக
  80. ஓதை – ஓசை
  81. வெரீஇ – அஞ்சி
  82. யாணர் – புதுவருவா
  83. மறலி – காலன்
  84. வழிவர் – நழுவி ஓடுவர்
  85. கரி – யானை
  86. பிலம் – மலைக்குகை
  87. தூறு – புதர்
  88. மண்டுதல் – நெருங்குதல்
  89. அருவர் – தமிழர்
  90. இறைஞ்சினர் – வணங்கினர்
  91. உடன்றன – சினந்து எழுந்தன
  92. முழை – மலைக்குகை
  93. சீவன் – உயிர்
  94. வையம் – உலகம்
  95. சத்தியம் – உண்மை
  96. சபதம் – சூளுரை
  97. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
  98. மோகித்து – விரும்பு
  99. நமன் – எமன்
  100. நாணாமே – கூசாமல்
  101. சித்தம் – உள்ளம்
  102. உய்ம்மின் – ஈடேறுங்கள்
  103. நம்பர் – அடியார்
  104. ஈயில் – வழங்கினால்
  105. படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
  106. பகராய் – தருவாய்
  107. பராபரம் – மேலான பொருள்
  108. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
  109. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
  110. நிறை – மேன்மை
  111. அழுக்காறு – பொறாமை
  112. பொறை – பொறுமை
  113. மதம் – கொள்கை
  114. பொச்சாப்பு – சோர்வு
  115. இகல் – பகை
  116. மையல் – விருப்பம்
  117. மன்னும் – நிலைபெற்ற
  118. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்

ஒன்பதாம் வகுப்பு

  1. குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
  2. மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
  3. சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
  4. சிந்து – ஒருவகை இசைப்பாடல்
  5. முக்குணம் – மூன்று குணங்கள் (சமத்துவம் – அமைதி, மேன்மை. இராசசம் – போர்,
  6. தீவிரமான செயல். தாமசம் – சோம்பல், தாழ்மை)
  7. பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதிய பத்துக்குண அணிகள்
  8. வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
  9. வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
  10. ஊனரசம் – குறையுடைய சுவை
  11. நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
  12. வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு
  13. குந்த – உட்கார
  14. கந்தம் – மணம்
  15. மிசை – மேல்
  16. விசனம் – கவலை
  17. எழில் – அழகு
  18. துயர் – துன்பம்
  19. மா – வண்டு
  20. மது – தேன்
  21. வாவி – பொய்கை
  22. வளர் முதல் – நெற்பயிர்
  23. தரளம் – முத்து
  24. பணிலம் – சங்கு
  25. வரம்பு – வரப்பு
  26. கழை – கரும்பு
  27. கா – சோலை
  28. குழை – சிறு கிளை
  29. அரும்பு – மலர் மொட்டு
  30. மாடு – பக்கம்
  31. நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள்
  32. கோடு – குளக்கரை
  33. ஆடும் – நீராடும்
  34. மேதி – எருமை
  35. துதைந்து எழும் – கலக்கி எழும்
  36. கன்னி வாளை – இளமையான வாளைமீன்.
  37. சூடு – நெல் அரிக்கட்டு
  38. சுரிவளை – சங்கு
  39. வேரி – தேன்
  40. பகடு – எருமைக்கடா
  41. பாண்டில் – வட்டம்
  42. சிமயம் – மலையுச்சி
  43. நாளிகேரம் – தென்னை
  44. நரந்தம் – நாரத்தை
  45. கோளி – அரசமரம்
  46. சாலம் – ஆச்சா மரம்
  47. தமாலம் – பச்சிலை மரங்கள்
  48. இரும்போந்து – பருத்த பனைமரம் ;
  49. சந்து – சந்தன மரம்
  50. நாகம் – நாகமரம்
  51. காஞ்சி – ஆற்றுப்பூவரசு
  52. யாக்கை – உடம்பு
  53. புணரியோர் – தந்தவர்
  54. புன்புலம் – புல்லிய நிலம்
  55. தாட்கு – முயற்சி
  56. சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
  57. பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள், குழீஇஒன்றுகூடி
  58. தோம் – குற்றம்
  59. கோட்டி – மன்றம்
  60. பொலம் – பொன்
  61. வேதிகை – திண்ணை
  62. தூணம் – தூண்
  63. தாமம் – மாலை
  64. கதலிகைக் கொடி -சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது,
  65. காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி
  66. விலோதம் – துணியாலான கொடி
  67. வசி – மழை
  68. செற்றம் – சினம்
  69. கலாம் – போர்
  70. துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு)
  71. களர்நிலம் – உவர்நிலம்
  72. நவிலல் – சொல்
  73. வையம் – உலகம்
  74. மாக்கடல் – பெரிய கடல்
  75. இயற்றுக – செய்க
  76. மின்னாளை – மின்னலைப் போன்றவளை
  77. மின்னாள் – ஒளிரமாட்டாள்
  78. தணல் – நெருப்பு
  79. தாழி – சமைக்கும் கலன்
  80. அணித்து – அருகில்
  81. தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத
  82. யாண்டும் – எப்பொழுதும்
  83. மூவாது – முதுமை அடையாமல்
  84. நாறுவ – முளைப்ப
  85. தாவா – கெடாதிருத்தல்
  86. மைவனம் – மலைநெல்
  87. முருகியம் – குறிஞ்சிப்பறை
  88. பூஞ்சினை-பூக்களை
  89. உடைய கிளை
  90. சிறை – இறகு
  91. சாந்தம் – சந்தனம்
  92. பூவை- நாகணவாய்ப் பறவை
  93. பொலம்- அழகு
  94. கடறு – காடு
  95. முக்குழல்-கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
  96. பொலி – தானியக்குவியல்
  97. உழை – ஒரு வகை மான்.
  98. கல் -மலை
  99. முருகு – தேன், மணம், அழகு
  100. மல்லல்- வளம்
  101. செறு- வயல்
  102. கரிக்குருத்து – யானைத்தந்தம்
  103. போர்- வைக்கோற்போர்
  104. புரைதப- குற்றமின்றி
  105. தும்பி- ஒருவகை வண்டு
  106. துவரை-பவளம்
  107. மரை – தாமரை மலர்
  108. விசும்பு- வானம்
  109. மதியம்-நிலவு
  110. தீபம் – விளக்கு
  111. சதிர் – நடனம்
  112. தாமம் – மாலை
  113. தெங்கு – தேங்காய்
  114. இசை – புகழ்
  115. வருக்கை – பலாப்பழம்
  116. நெற்றி – உச்சி
  117. மால்வரை – பெரியமலை
  118. மடுத்து – பாய்ந்து
  119. கொழுநிதி – திரண்ட நிதி
  120. மருப்பு – கொம்பு
  121. வெறி – மணம்
  122. கழனி – வயல்
  123. செறி – சிறந்த
  124. இரிய – ஓட
  125. அடிசில் – சோறு
  126. மடிவு – சோம்பல்
  127. கொடியன்னார் – மகளிர்
  128. நற்றவம் – பெருந்தவம்
  129. வட்டம் – எல்லை
  130. வெற்றம் – வெற்றி
  131. அள்ளல் – சேறு
  132. பழனம் – நீர் மிக்க வயல்
  133. வெரீஇ – அஞ்சி
  134. பார்பபு – குஞ்சு
  135. “நாவலோ” – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
  136. இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்
  137. நந்து – சங்கு
  138. கமுகு – பாக்கு
  139. முத்தம் – முத்து
  140. சாெல்லும் பாெருளும்
  141. விண் – வானம்
  142. ரவி – கதிரவன்
  143. கமுகு – பாக்கு
  144. பாண்டம் பாண்டமாக – அடுக்குத் தொடர்
  145. வாயிலும் சன்னலும் – எண்ணும்மை
  146. அறம் – நற்செயல்
  147. வெகுளி – சினம்
  148. ஞானம் – அறிவு
  149. விரதம் – மேற்கொண்ட நன்னெறி
  150. நசை – விருப்பம்
  151. நல்கல் – வழங்குதல்
  152. பிடி – பெண்யானை
  153. வேழம் – ஆண்யானை
  154. யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
  155. பொளிக்கும் – உரிக்கும்
  156. ஆறு – வழி

பத்தாம் வகுப்பு

  1. துய்ப்பது – கற்பது, தருதல்
  2. மேவலால் – பொருந்துதல், பெறுதல்
  3. மயலுறுத்து – மயங்கச்செய்
  4. ப்ராண – ரஸம் – உயிர்வளி
  5. லயத்துடன் – சீராக
  6. நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
  7. நேமி – வலம்புரிச்சங்கு
  8. காேடு – மலை
  9. காெடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
  10. நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
  11. தூஉய் – தூவி
  12. விரிச்சி – நற்சாெல்
  13. சுவல் – தாேள்
  14. அருகுறை – அருகில்
  15. முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
  16. அசைஇ – இளைப்பாறி
  17. அல்கி – தங்கி
  18. கடும்பு – சுற்றம்
  19. நரலும் – ஒலிக்கும்
  20. ஆரி – அருமை
  21. படுகர் – பள்ளம்
  22. வயிரியம் – கூத்தர்
  23. வேவை – வெந்தது
  24. இறடி – திசை
  25. பொம்மல் – சோறு
  26. சுடினும் – சுட்டாலும்
  27. மாளாத – தீராத
  28. மாயம் – விளையாட்டு
  29. விசும்பு – வானம்
  30. ஊழி – யுகம்
  31. ஊழ – முறை
  32. தண்பெயல் – குளிர்ந்த மழை
  33. ஆர்தருபு – வெள்ளததில் மூழ்கிக் கிடந்த
  34. பீடு – சிறப்பு
  35. ஈண்டி – செறிந்து திரண்டு
  36. கேள்வியினான் – நூல் வல்லான்
  37. கேண்மையினான் – நட்பினன்
  38. தார் – மாலை
  39. முடி – தலை
  40. முனிவு – சினம்
  41. அகத்து உவகை – மனமகிழ்ச்சி
  42. தமர் – உறவினர்
  43. நீபவனம் – கடம்பவனம்
  44. மீனவன் – பாண்டிய மன்னன்
  45. கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)
  46. நுவன்ற – சொல்லிய
  47. என்னா – அசைச் சொல்
  48. பண்டி – வயிறு
  49. அசும்பிய – ஒளிவீசுகிற
  50. முச்சி – தலையுச்சிக் காெண்டை
  51. சுண்ணம் – நறுமணப்பொடி
  52. காருகர் – நெய்பவர் (சாலியர்)
  53. தூசு – பட்டு
  54. துகிர் – பவளம்
  55. வெறுக்கை – செல்வம்
  56. நொடை – விலை
  57. பாசவர் – வெற்றிலை விற்போர்
  58. ஓசுநர் – எண்ணெய் விற்போர்
  59. மண்ணுள் வினைஞர் – ஓவியர்
  60. மண்ணீட்டாளர் – சிற்பி
  61. கிழி – துணி
  62. சேக்கை – படுக்கை
  63. யாக்கை – உடல்
  64. பிணித்து – கட்டி
  65. வாய்ந்த – பயனுள்ள
  66. இளங்கூழ் – இளம்பயிர்
  67. தயங்கி – அசைந்து
  68. காய்ந்தேன் – வருந்தினேன்
  69. கொம்பு – கிளை
  70. புழை – துளை
  71. கான் – காடு
  72. தேம்ப – வாட
  73. அசும்பு – நிலம்
  74. உய்முறை – வாழும் வழி
  75. ஓர்ந்து – நினைத்து
  76. கடிந்து – விலக்கி
  77. உவமணி – மணமலர்
  78. படலை – மாலை
  79. துணர் – மலர்கள்

பதினொன்றாம் வகுப்பு

  1. பால் – வகை
  2. இயல்பு – பண்பு
  3. மாடம் – மாளிகை
  4. அமை – மூங்கில்
  5. புரளும் – ததும்பும்
  6. கரைகின்ற – கத்துகின்ற, ஒலிக்கின்ற
  7. சுழித்தோடும் – சுழன்றோடும்
  8. மார்பு சுரந்த – வளமான
  9. மறுகியது – கலங்கியது
  10. ஏதலி – ஏழை, அகதி
  11. வட ஆரிநாடு – திருமலை
  12. தென் ஆரிநாடு – குற்றாலம்
  13. ஆரளி – மொய்க்கின்ற வண்டு
  14. இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்
  15. இடங்கணி – சங்கிலி
  16. உளம் – உள்ளான் என்ற பறவை
  17. சலச வாவி – தாமரைத் தடாகம்
  18. தரளம் – முத்து
  19. கா – சோலை
  20. முகில்தொகை – மேகக்கூட்டம்
  21. மஞ்ஞை – மயில்
  22. கொண்டல் – கார்கால மேகம்
  23. மண்டலம் – உலகம்
  24. வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை
  25. அளி உலாம் – வண்டு மொய்க்கின்ற
  26. காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மலர்கள்
  27. போது – மொட்டு
  28. அலர்ந்து – மலர்ந்து
  29. கவினி – அழகுற
  30. ஜகம் – உலகம்
  31. புயம் – தோள்
  32. வரை – மலை
  33. வன்னம் – அழகு
  34. கழுகாசல் – கழுகு மலை
  35. த்வஜஸ்தம்பம் – கொடி மரம்
  36. சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
  37. விலாசம் – அழகு
  38. நூபுரம் – சிலம்பு
  39. மாசுணம் – பாம்பு
  40. இஞ்சி – மதில்
  41. புயல் – மேகம்
  42. கறங்கும் – சுழலும்
  43. சிதவல் – தலைப்பாகை
  44. தண்டு – ஊன்றுகோல்
  45. தமியர் – தனித்தவர்
  46. முனிதல் – வெறுத்தல்
  47. துஞ்சல் – சோம்பல்
  48. அயர்வு – சோர்வு
  49. மாட்சி – பெருமை
  50. நோன்மை – வலிமை
  51. தாள் – முயற்சி
  52. பிரசவம் – தேன்
  53. புடைத்தல் – கோல்கொண்டு ஓச்சுதல்
  54. கொழுநன் குடி – கணவனுடைய வீடு
  55. வறன் – வறுமை
  56. கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்
  57. உள்ளாள் – நினையாள்
  58. மதுகை – பெருமிதம்
  59. இக்கும் – நீக்கும்
  60. இழுக்கு – குற்றம்
  61. வினாயவை – கேட்டவை
  62. வரை – மலை
  63. கம்பலை – பேரொலி
  64. புடவி – உலகம்
  65. எய்துதல் – பெறுதல்
  66. வாரணம் – யானை
  67. பூரணம் – நிறைவு
  68. நல்கல் – அளித்தல்
  69. வதுவை – திருமணம்
  70. கோன் – அரசன்
  71. மறுவிலா – குற்றம் இல்லாத
  72. துன்ன – நெருங்கிய
  73. பொறிகள் – ஐம்புலன்
  74. தெண்டிரை – தெள்ளிய நீரலை
  75. விண்டு – திறந்து
  76. மண்டிய – நிறைந்த
  77. காய்ந்த – சிறந்த
  78. தீன் – மார்க்கம்
  79. கொண்மூ – மேகம்
  80. சமம் – போர்
  81. விசும்பு – வானம்
  82. அரவம் – ஆரவாரம்
  83. ஆயம் – சுற்றம்
  84. தழலை, தட்டை – பறவைகள் ஓட்டும் கருவிகள்
  85. இரை – உணவு
  86. படுகை – படுக்கை
  87. சந்து, பொந்து – துளை
  88. தமக்கை – உடன் பிறந்தவள்
  89. அயர்ந்து – சோர்ந்த
  90. கொத்து – பூமாலை
  91. குழல் – கூந்தல்
  92. நாங்கூழ் – மண்புழு
  93. கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
  94. வரிசை – சன்மானம்
  95. குண்டலப்பூச்சி – வளைந்து சுருண்டு கொள்ளும்
  96. சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம், கலாழி – பெண்கள் அணியும் அணிகலண்கள்
  97. காயில் – வெகுண்டல்
  98. அந்தம் – முடிவு
  99. அயன் – பிரமன்
  100. மால் – விஷ்ணு
  101. ஆலாலம் – நஞ்சு
  102. ஒதுக – சொல்க
  103. முழக்கம் – ஓங்கி உரைத்தல்
  104. கனிகள் – மாணிக்கம்
  105. படிக்க – பளபளப்பான கல்
  106. மீட்சி – விடுதலை
  107. நவை – குற்றம்
  108. படி – உலகம்
  109. பதி – நாடு
  110. பிழைப்பு – வாழ்தல்
  111. நிரையம் – நரகம்
  112. ஒரீஇய – நோய் நீங்கிய
  113. புரையோர் – சான்றோர்
  114. யாணர் – புது வருவாய்
  115. மருண்டெனன் – வியப்படைந்தேன்
  116. மன்னுயிர் – நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
  117. கடிநகர் – காவல் உடைய நகரம்
  118. காண்டி – காண்க
  119. பூம்பராகம் – பூவில் உள்ள மகரந்தம்
  120. ஆக இலா – குற்றம் இலாத
  121. தோட்டி – துறட்டி
  122. அயம் – ஆடு, குதிரை
  123. புக்கவிட்டு – போகவிட்டு
  124. சீரியதூளி – நுண்ணிய மணல்
  125. சிறுகால் – வாய்க்கால்
  126. பரல் – கல்
  127. முந்நீர் மடு – கடலாகிய நீர்நிலை
  128. அண்டயோனி – ஞாயிறு
  129. சாடு – பாய்
  130. ஈட்டியது – சேகரித்தது
  131. எழிலி – மேகம்
  132. நாங்கூழ் புழு – மண்புழு
  133. பாடு – உழைப்பு
  134. ஓவா – ஓயாத
  135. வேதித்து – மாற்றி

பன்னிரண்டாம் வகுப்பு

  1. புதுப்பெயல் – புதுமழை
  2. ஆர்கலி – வெள்ளம்
  3. கொடுங்கோல் – வளைந்த கோல்
  4. புலம்பு – தனிமை
  5. கண்ணி – தலையில் சூடும் மாலை
  6. கவுள் – கன்னம்
  7. மா – விலங்கு
  8. அமலன் – இராமன்
  9. இளவல் – தம்பி
  10. நளிர்கடல் – குளிர்ந்தகடல்
  11. துன்பு – துன்பம்
  12. உன்னேல் – எண்ணாதே
  13. அனகன் – இராமன்
  14. உவா – அமாவாசை
  15. உடுபதி – சந்திரன்
  16. செற்றார் – பகைவர்
  17. கிளை – உறவினர்
  18. மலிவிழா – விழாக்கள் நிறைந்த
  19. மடநல்லார் – இளமை பாெருந்திய பெண்கள்
  20. கலிவிழா – எழுச்சி தரும் விழா
  21. பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
  22. ஒலிவிழா – ஆரவார விழா
  23. வேட்டம் – மீன் பிடித்தல்
  24. கழி – உப்பங்கழி
  25. செறு – வயல்
  26. கொள்ளை – விலை
  27. என்றூழ் – சூரியனின் வெப்பம்
  28. விடர – மலைவெடிப்பு
  29. கதழ் – விரைவு
  30. உமணர் – உப்பு வணிகர்
  31. எல்வளை– ஒளிரும் வளையல்
  32. தெளிர்ப்ப – ஒலிப்ப
  33. விளிஅறி – குரல்கேட்ட
  34. ஞமலி – நாய்
  35. வெரீஇய– அஞ்சிய
  36. மதர்கயல்– அழகிய மீன்
  37. புனவன் – கானவன்
  38. அள்ளல் – சேறு
  39. பகடு– எருது
  40. வாயிலோயே – வாயில் காப்போனே
  41. வள்ளியோர் – வள்ளல்கள்
  42. வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
  43. வித்தி – விதைத்து
  44. உள்ளியது – நினைத்தது
  45. உரன் – வலிமை
  46. வறுந்தலை – வெறுமையான இடம்
  47. காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
  48. கலன் – யாழ்
  49. கலப்பை – கருவிகளை வைக்கும் பை
  50. மழு – கோடரி.
  51. புரிகுழல் – சுருண்ட கூந்தல்
  52. கழை – மூங்கில்
  53. கண் – கணு
  54. விரல் – ஆடவர் கைப் பெருவிரல்
  55. உத்தரப் பலகை – மேல் இடும் பலகை
  56. பூதர் – ஐம்பூதங்கள்
  57. ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
  58. நித்திலம் – முத்து
  59. விருந்து – புதுமை
  60. மண்ணிய – கழுவிய
  61. நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
  62. தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
  63. ஓடை – முக படாம்
  64. அரசு உவா – பட்டத்து யானை
  65. பரசினர் – வாழ்த்தினர்
  66. பல்இயம் – இன்னிசைக் கருவி
  67. குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்
  68. தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
  69. வாரம் – தெய்வப்பாடல்
  70. ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
  71. இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
  72. கழஞ்சு – ஒரு வகை எடை அளவு
  73. நகை – சிரிப்பு
  74. இளிவரல் – சிறுமை
  75. மருட்கை – வியப்பு
  76. பெருமிதம் – பெருமை
  77. வெகுளி – சினம்
  78. உவகை – மகிழச்சி
  79. காய்நெல் – விளைந்த நெல்
  80. மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு).
  81. செறு – வயல்
  82. தமித்து – தனித்து
  83. புக்கு – புகுந்து
  84. யாத்து – சேர்த்து
  85. நந்தும் – தழைக்கும்
  86. வரிசை – முறைமை
  87. கல் – ஒலிக்குறிப்பு
  88. பரிவு – அன்பு
  89. தப – கெட
  90. பிண்டம் – வரி
  91. நச்சின் – விரும்பினால்
  92. உன்னலிர் – எண்ணாதீர்கள்
  93. பிணித்தமை – கட்டியமை
  94. நீச – இழிந்த
  95. நேசம் – அன்பு
  96. வல்லியதை – உறுதியை
  97. ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்
  98. பாதகர் – கொடியவர்
  99. குழுமி – ஒன்றுகூடி
  100. பழிப்புரை – இகழ்ச்சியுரை
  101. ஏதமில் – குற்றமில்லாத
  102. ஊன்ற – அழுந்த
  103. மாற்றம் – சொல்
  104. நுவன்றிலர் – கூறவில்லை
  105. ஆக்கினை – தண்டனை
  106. நிண்ணயம் – உறுதி
  107. கூவல் – கிணறு
  108. ஒண்ணுமோ – முடியுமோ
  109. உததி – கடல்
  110. ஒடுக்க – அடக்க.
  111. களைந்து – கழற்றி
  112. திகழ – விளங்க
  113. சேர்த்தினர் – உடுத்தினர்
  114. சிரத்து – தலையில்
  115. பெய்தனர் – வைத்து அழுத்தினர்
  116. கைதுறும் – கையில் கொடுத்திருந்த
  117. கண்டகர் – கொடியவர்கள்
  118. வெய்துற – வலிமை மிக
  119. வைதனர் – திட்டினர்
  120. மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
  121. மேதினி – உலகம்
  122. கீண்டு – பிளந்து
  123. வாரிதி – கடல்
  124. சுவறாதது – வற்றாதது
  125. வல்லானை – வலிமை வாய்ந்தவரை
  126. நிந்தை – பழி
  127. பொல்லாங்கு – கெடுதல், தீமை.
  128. வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
  129. கவாஅன் – மலைப்பக்கம்
  130. கலிங்கம் – ஆடை
  131. சுரும்பு – வண்டு
  132. நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு
  133. பிறங்கு – விளங்கும்
  134. பறம்பு – பறம்பு மலை
  135. கறங்கு – ஒலிக்கும்
  136. வாலுளை – வெண்மையான தலையாட்டம்
  137. மருள – வியக்க
  138. நிழல் – ஒளி வீசும்
  139. நீலம் – நீலமணி
  140. ஆலமர் செல்வன் – சிவபெருமான் (இறைவன்)
  141. அமர்ந்தனன் – விரும்பினன்
  142. சாவம் – வில்
  143. மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்)
  144. கரவாது – மறைக்காது
  145. துஞ்சு – தங்கு
  146. நளிசினை – செறிந்த கிளை (பெரிய கிளை)
  147. போது – மலர்
  148. கஞலிய – நெருங்கிய
  149. நாகு – இளமை
  150. குறும்பொறை – சிறு குன்று
  151. கோடியர் – கூத்தர்
  152. மலைதல் – போரிடல்
  153. உறழ் – செறிவு
  154. நுகம் – பாரம்.

Leave a Comment