×

பாடம் 8.6 திருக்குறள்

Hello, Friends.,

Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 8.6 திருக்குறள் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏழைகளுக்கு உதவி செய்வதே _________ ஆகும்.

  1. பகை
  2. ஈகை
  3. வறுமை
  4. கொடுமை

விடை : ஈகை

2. பிற உயிர்களின் _________க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும்.

  1. மகிழ்வதை
  2. செல்வத்தை
  3. துன்பத்தை
  4. பகையை

விடை : துன்பத்தை

3. உள்ளத்தில் _________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

  1. மகிழ்ச்சி
  2. மன்னிப்பு
  3. துணிவு
  4. குற்றம்

விடை : குற்றம்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
   குறியெதிரப்பை உடைத்து நீரது

விடை :

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று  எல்லாம்
குறியெதிரப்பை நீரது உடைத்து

2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
   மானாசெய் தலை யாமை

விடை :

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மானாசெய் யாமை தலை

குறு வினா

1. அறிவின் பயன் யாது?

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதை அறிவின் பயன் ஆகும்.   [பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்த பயனும் இல்லை.]

2. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

3. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?

இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள் பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்.

பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.

நிறைமதி அவளுடைய தாேழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமரந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தாேழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னி்டம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
   ஆகுல நீல பிற.

2. எனத்தானும் எஞ்ஞான்றும் யாரக்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலாேர்
   தாெகுத்தவற்றுள் எல்லாம் தலை.

விடை :

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலாேர்
தாெகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

2. ________ தருவதே ஈகை ஆகும்.

  1. இருப்பவர்க்கு
  2. நல்லவர்க்கு
  3. வலியவர்க்கு
  4. இல்லாதவர்க்கு

விடை : இல்லாதவர்க்கு

3. ஆற்றுவார் ஆற்றல் ________ போற்றுவார்/போற்றலுள் எல்லாம் தலை

  1. புகழ்தல்
  2. இகழ்தல்
  3. பலியாமை
  4. இகழாமை

விடை : இகழாமை

பொருள் தருக

  • மாசு – குற்றம்
  • அவா – பேராசை
  • ஈகை – கொடை
  • ஒறுத்தல் – தண்டித்தல்
  • நாணம் – வெட்கம்

சேர்த்து எழுது

  • மாசு + இலன் = மாசிலன்
  • பல + உயிர் = பல்லுயிர்
  • பகுத்து + உண்டு = பகுத்துண்டு
  • உய்வு + உண்டாம் = உய்வுண்டாம்
  • மற்று + எல்லாம் = மற்றெல்லாம்
  • நன்மை + நயம் = நன்னயம்

குறு வினா

1. வாழ்வின் அறம் பற்றி திருக்குறள் கூறுவதென்ன?

பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சாெல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.

2. தீங்கிலிருந்து காக்க சிறந்த வழி யாது?

ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது. அதுவே தம்மைத் தீங்கிலிருந்து காத்துக் கொள்ளும் வழிகளுள் சிறந்த வழிகளாகும்

3. எச்செயலை யாருக்கு செய்யக்கூடாது?

நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யாரக்கும் சிறிதளவு கூடச் செய்யக் கூ்டாது.

4. ஒருவரை தண்டிக்கும் வழி யாது?

நமக்கு துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வது தான் அவரை தண்டிக்கும் வழியாகும்.

5. எவர் தப்ப முடியாது என வள்ளுவர் கூறுகிறார்?

தீயினால் சுடப்பட்டவர் கூட பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது.

6. அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது என வள்ளுவர் கூறுவதென்ன? 

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது என வள்ளுவர் கூறுகிறார்.

7. தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை எப்போது? 

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை.

Published: November 28, 2024 Last Updated: November 28, 2024 — Examination Department
நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்

நிகழ்கலை

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நிகழ்கலை தொடர்பான செய்திகள் பற்றித் தொகுத்து கொடுத்துள்ளோம்.

நிகழ்கலை

•  கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன.

•  சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை.

1. கரகாட்டம்

•  ‘கரகம்’ என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.

  கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

•  “நீரற வறியாக் கரகத்து” – புறநானூறு.

•  சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’.

•  கரகாட்டத்திற்கு அடிப்படை – குடக்கூத்து.

2. மயிலாட்டம்

•  மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு. நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.

3. காவடியாட்டம்

•  கா – பாரந்தாங்கும் கோல்.

•  இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது.

•  இலங்கை, மலேசியா உட்பட, புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.

4. ஒயிலாட்டம்

•  ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம்.

•  உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும் சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும்.

•  சிறப்பு – கம்பீரத்துடன் ஆடுதல்.

•  ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது.

•  ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு.

•  குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

5. தேவராட்டம்,

•  வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள்.

  ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.

•  கருவி – உறுமி (தேவதுந்துபி).

•  8 – 13 கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது.

•  வேட்டி + தலை + இடையில் சிறுதுணி) + சலங்கை அணிந்து ஆடும் ஆட்டம்.

6. சேர்வையாட்டம்

•  தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை, சேர்வையாட்டம்.

•  இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்துகின்றனர்.

•  இசைக்கருவிகளை – சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா.

7. பொய்க்கால் குதிரையாட்டம்

  “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.

•  ‘புரவி ஆட்டம்’, ‘புரவி நாட்டியம்’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

•  காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர்.

•  பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப்பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நையாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன.

•  இராஜஸ்தானில் – கச்சிகொடி என்றும்,

•  கேரளத்தில் – குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.

8. தப்பு ஆட்டம்

•  ‘தப்பு’ என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும்.

•  ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது.

•  இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. தப்பு

•  தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி.

  ‘தப் தப்’ என்று ஒலிப்பதால், அந்த ஒலியின் அடியாகத் ‘தப்பு’ எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.

•  தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக” – திருப்புகழ் 

•  என்று அருணகிரிநாதர், தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார். இதனைப் ‘பறை’ என்றும் அழைப்பர்.

•  ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை.

  தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம்பெறுகிறது.

9. புலி ஆட்டம்

•  தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.

•  பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.

10. தெருக்கூத்து

•  நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து.

•  திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது.

•  ஒரு கதையை இசை. வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்.

  திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.

•  தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” – ந. முத்துசாமி (கலைஞாயிறு).

•  இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.

•  தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது.

11. தோற்பாவைக் கூத்து

•  தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.

•  தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் – தோற்பாவை.

•  மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், ‘இராச சோழன் தெரு’ என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது. – ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலர்.

Published: October 14, 2024 Last Updated: October 31, 2024 — Examination Department

TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024 Tamil (6th to 12th old and new books) and if you have suggestion please comment below.

பகுதி – அ (இலக்கணம்)

1. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்.

2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.

3. பிரித்தெழுதுக.

4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

6. பிழைதிருத்தம், சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுஉச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்,

9. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்.

10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.

11. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்.

12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்,

13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.

14. பெயர்ச் சொல்லின் வகை அறிதல்.

15. இலக்கணக் குறிப்பறிதல்.

16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.

19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்.

21. பழமொழிகள்

பகுதி – ஆ (இலக்கியம்)

1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை. இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

2. அறநூல்கள் –  நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள். பாவகை, சிறந்த தொடர்கள்.

4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

5. சிலபதிகாரம்மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்,

6. பெரியபுராணம்நாலாயிர திவ்வியப்பிரபந்தம்திருவிளையாடற் புராணம்தேம்பாவணிசீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7. சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது நந்திக்கலம்பகம் – முக்கூடற்பள்ளு -காவடிச்சிந்து – முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8. மனோன்மணியம் பாஞ்சாலி சபதம் மொழிதல் (காளமேகப் புலவர்) செய்திகள். குயில் பாட்டு இரட்டுற அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.

9. நாட்டுப்புறப் பாட்டு சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

10. சமய முன்னோடிகள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார். எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

 

பகுதி – இ (தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்)

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2. மரபுக் கவிதை முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

3. புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன்- தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

4. தமிழில் கடித இலக்கியம் நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.

5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.

6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு ஆசிரியர் – பொருத்துதல்.

7. கலைகள் சிற்பம் ஒவியம் பேச்சு திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.

8. தமிழின் தொன்மை தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்,

9. உரைநடை மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.

10. உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.

11. தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.

12. ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.

13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா- முத்துராமலிங்கர் – அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் சமுதாயத் தொண்டு.

14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.

15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் பெருமையும் தமிழ்ப் பணியும்.

16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.

17. தமிழ் மகளிரின் சிறப்பு மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் – விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.

18. தமிழர் வணிகம் தொல்லியல் ஆய்வுகள் கடற் பயணங்கள் தொடர்பான செய்திகள்,

19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.

20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார். திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.

21. நூலகம் பற்றிய செய்திகள்.

TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024

TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
Published: August 28, 2024 Last Updated: November 8, 2024 — Examination Department
Iniyavai Naarpadhu

இனியவை நாற்பது

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இனியவை நாற்பது பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

 

  1. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
    கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
    மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
    திருவுந்தீர் வின்றேல் இனிது.
  2. சலவரைச் சாரா விடுதல் இனிதே
    புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
    மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
    தகுதியால் வாழ்தல் இனிது.

ஆசிரியர் குறிப்பு

3. பெயர் : மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

4. ஊர் : மதுரை

5. காலம் : கி.பி. 2 ஆம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு

6. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

7. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.

8. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் 3 அல்லது 4 நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.