Useful Links
⇒ TNPSC Group Study Material Syllabus Wise 2024
>>> Where to Study – Group 4 Science Where to Study
பழமொழிகள்
முக்கிய அறிவிப்பு
இது புதிதாக சேர்க்கப்பட்ட தலைப்பு ஆகும். இப்பகுதியில் பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகத்தில் இருந்து கேட்பதில்லை. வெளியில் இருந்து தான் கேட்கப்படுகிறது. இருப்பினும் புத்தகத்தில் இடம்பெறும் அனைத்து பழமொழிகளை படித்துக்கொள்வது நல்லது. பழமொழிகள் tnpsc – 6th to 12th (fully covered)
12th Standard
பழமொழி வாழ்க்கை நிகழ்வு
1. பழமொழியை தொல்காப்பியம் ‘முதுசொல்‘ என்று கூறுகிறது.
2. பழமொழி நம் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவங்கள்
i. தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது பழமொழி.
II. பழமொழிகள் மூலம் தமிழர்கள் நற்பண்புகளையும் நல்ல வாழ்வியல் முறைகளையும் கற்றுக் கொண்டனர்.
iii. பழமொழிகள் சுருக்கமாக இருந்தாலும் அரிய வாழ்வியலை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தும்.
3. பழமொழி என்பது சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் ஆகும்.
4. ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளைப் பழமொழி என்பர்.
5. ஒரு கருத்தை, பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சுவையாகவும் விளக்குவன பழமொழிகள்.
6. மக்களின் நீண்ட கால வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடுகளைச் சுருக்கமாகச் சொல்வதே பழமொழியாகும்.
7. பழமொழிகளைக் கொண்டு பழமொழி நானூறு என்னும் நீதி நூல் படைக்கப்பட்டுள்ளது.
4. வாழ்வியல் பழமொழிகள்:
i. ஆசைக்கு அளவில்லை
ii. பேராசைக்கு இல்லை இரக்ககுணம்
III. நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது
iv. உழைக்க கற்றபின் பொறுக்கக் கற்க இவ்வாறு பழமொழி மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
5. கிராமப் புறங்களில் ஒரு சில செய்கையைக் குறிக்கவும், அதன் மூலம் கருத்துச் சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள் பழமொழிகளைச் சொல்லி வந்தனர்.
6. பழமொழி என்பது ஒரு செயலுக்கு விளக்கம் தரவும், அனுபவத்துடன் சேர்ந்து அறிவுரை தரவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்பொழுது பல பழமொழிகளுக்கு அதற்குரிய பொருள் சொல்லப்படாமல் நாளடைவில் மருவி வேறு ஏதோ பொருள் சொல்லப்படுகிறது.
சான்று: புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து,
உண்மைப் பொருள்: புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.
மனம் புண்பட்டு இருக்கும் போது தமக்குப் பிடித்த வேறு ஒரு செயலில் மனதைப் புக விட்டு ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பதே சரி.
7. “தன் கையே தனக்கு உதவி”
விளக்கம்: ஒரு பணியைச் செய்வதற்குப் பிறரை நம்பாமல் தன்னை மட்டுமே நம்புவது சிறப்பு.
8. “இளங்கன்று பயம் அறியாது”
விளக்கம்: இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்து விடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும்.
9. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா”
பொருள்: இளமையில் கல்வி கற்காதவன் முதுமையில் கல்வி கற்பது என்பது முடியாத காரியம் ஆகும் அதுபோல இளமையில் முயற்சி செய்யாதவன் முதுமையில் முயற்சி செய்ய முடியாது என்பதை இப்பழமொழி உணர்த்தும் பொருளாகும்.
11. “மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே”
விளக்கம் : ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகளை நம்பி, ஆற்றுக்குள் இறங்கக்கூடாது. அவை, நீர் ஊறிய மண்மேடுகள் என்பதால் காலை வைத்தவுடன் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதையே மேற்கண்ட பழமொழி எடுத்துக்காட்டுகிறது.
(குறிப்பு-மண்குதிர்- மண்மேடு/ மண்திட்டு)
12. “குந்தித் தின்றால் குன்றும் மாளும்” என்பதுபோல குமரன் தன் தந்தை சேமித்து வைத்த பெருஞ்செல்வத்தை, உழைக்காமலே செலவழித்து வறியன் ஆனான்.
13. பழமொழி எவ்வாறு வாழ்க்கை நிகழ்வோடு பொருந்துகிறது என்பதை ஒரு சில எழுத்துக்காட்டு
i. வாய்மையே வெல்லும்
ii. இளங்கன்று பயம் அறியாது
iii. எறும்பு ஊரக் கல்லும் தேயும்
iv. ‘போதும்’ என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
V. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
vi. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
vii. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
12th Standard
பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.
1. யானைக்கும் அடிசறுக்கும்?
தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்து “யானைக்கும் அடிசறுக்கும்” போல ஆயிற்று
2. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
I. வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும்.
il. வாழ்க்கையில் நாம் பிறருக்கு தீமை செய்து வந்தோம் என்றால் நமக்கும் தீமையே நடக்கும்.
3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை?
நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.
4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்?
வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.
5. ஊழி பெயரினும் தாம் பெயரார்?
நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாற மாட்டார்கள்.
12th standard
“துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
Answer: நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும்.
விளக்கம்: குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பம் என்பது புலப்படும் என்பதே பொருத்தம்.
10th standard
பழமொழிகளை நிறைவு செய்க.
1. உப்பில்லாப் ? உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
2. ஒரு பானை ? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
3. உப்பிட்டவரை ? உப்பிட்டவரை உள்ளளவும் நினை
4. விருந்தும் ? விருந்தும் மருந்தும் மூன்று வேளை
5. அளவுக்கு ? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
1. பழமொழிக்கான பொருள் எழுதுக.
ஊருடன் ஒத்து வாழ்? நாம் வாழும் ஊர் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும்.
2. பழமொழியைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
அ) பதறாத காரியம் சிதறாது? பதறாத காரியம் சிதறாது என்பதற்கேற்ப நிதானமாகச் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிட்டும்.
ஆ) ஒரு கை தட்டினால் ஓசை வராது? ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதைப்போல் நம்மிடையே ஒற்றுமை இல்லையேல் உயர்வில்லை.
3. பழமொழியை நிறைவு செய்க.
அ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து
ஆ) சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
இ) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval
மொழி பெயர்க்க : எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது
பழமொழி: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்
பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்
3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
மொழி பெயர்க்க : அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்
பழமொழி நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை
4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson
மொழி பெயர்க்க: வெறுமையான வாழ்வு மட்டும் போதாது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.
பழமொழி: இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்
9th standard
பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi
ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது
2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் -ஜவஹர்லால் நேகு
3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
அன்புக் குறைவும், தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை- அன்னைதெராசா
4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செயவதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள்-ஷிவ் கேரா
பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.
3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்
4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.
8th standard
வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக
1. முயற்சி திருவினையாக்கும்
2. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
3. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
4. அறிவே ஆற்றல்
5. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
6. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
7. வருமுன் காப்போம்
8. சுத்தம் சோறு போடும்
9. பருவத்தே பயிர் செய்
10. பசித்து புசி
6th standard
மொழியை ஆள்வோம்
1. பழமொழியின் சிறப்பு சொல்வது? சுருங்கச்
2. நோயற்ற வாழ்வை த் தருவது? சுத்தம்
3. உடல் ஆரோக்கியமே அடிப்படை? உழைப்பு
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை? உணவு, உடை, உறைவிடம்
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக? சுத்தம்