மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குதல்

இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குதல் (marabu pizhaigal vazhuvu sorkal) பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குதல்

மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குதல்

மரபுச்சொற்கள் பெயர்மரபு, வினை மரபு என வகைப்படும்

பெயர் மரபுச் சொற்கள்

பறவை, விலங்குகளின் இளமைப்பெயர்கள்

எலிக்குஞ்சுகுருவிக்குஞ்சு
கோழிக்குஞ்சுகீரிப்பிள்ளை
பசுங்கன்றுபன்றிக்குட்டி
மான்கன்றுயானைக்கன்று
ஆட்டுக்குட்டிகழுதைக்குட்டி
குதிரைக்குட்டிநாய்க்குட்டி
புலிப்பரள்பூனைக்குட்டி
சிங்கக்குருளைஎருமைக்கன்று
அணிற்பிள்ளைகிளிக்குஞ்சு

பறவை, விலங்குகளின் இருப்பிடம்

கோழிப்பண்ணைமாட்டுத்தொழுவம்
யானைக்கூட்டம்ஆட்டுப்பட்டி
குதிரைக்கொட்டில்கோழிக்கூண்டு
குருவிக்கூடுகரையான் புற்று
எலி வளைநண்டு வளை
வாத்துப் பண்ணைசிலந்தி வலை

தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

வேப்பந்தழைவாழைத்தண்டு
ஆவரங்குழைகீரைத்தண்டு
நெல்தாள்கம்பத்தட்டு (தட்டை)
தாழைமடல்சோளத்தட்டு (தட்டை)
முருங்கைக்கீரைஈச்ச ஓலை
தென்னங்கீற்றுதினைத்தாள்
வாழையிலைமா இலை
பனை ஒலைதென்னை ஓலை
கமுகுக் கூந்தல்கேழ்வரகுத்தட்டை
மூங்கில் இலைபலா இலை

காய்களின் இளமைப்பெயர்கள்

அவரைப்பிஞ்சுவாழைக்காய்
கத்திரிப்பிஞ்சுவெள்ளரிப்பிஞ்சு
தென்னங்குரும்பைபலாப்பிஞ்சு
மாவடுமுருங்கைப்பிஞ்சு
வாழைக்குருத்துமாந்தளிர்

செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்

ஆலங்காடுகம்பங்கொல்லை
பனந்தோப்புசோளக்கொல்லை
மாந்தோப்புவாழைத்தோட்டம்
தென்னந்தோப்புபூஞ்சோலை
வெற்றிலைத்தோட்டம்இலுப்பைத்தோட்டம்
பலாத்தோப்புசவுக்குத்தோப்பு
முந்திரித்தோப்புபுளியந்தோப்பு
தேயிலைத்தோட்டம்பூந்தோட்டம்
பனங்காடுவேலங்காடு
கொய்யாத்தோப்புநெல்வயல்
பூந்தோட்டம்மாந்தோப்பு
கருப்பங்கொல்லை

பொருட்களின் தொகுப்பு

ஆட்டுமந்தைஆநிரை
உடுக்கணம் (உடு-நட்சத்திரம்)வேலங்காடு
கற்குவியல்மக்கள் கூட்டம்
சாவிக்கொத்துமாட்டுமந்தை
கள்ளிக்கற்றையானைக்கூட்டம்
திராட்சைக்குலைவிறகுக்கட்டு
வைக்கோற்போர்வீரர்படை
எறும்புச்சாரை

பறவை, விலங்குகளின் இளமைப்பெயர்கள்

எலிக்குஞ்சுகுருவிக்குஞ்சு
கோழிக்குஞ்சுகீரிப்பிள்ளை
பசுங்கன்றுபன்றிக்குட்டி
மான்கன்றுயானைக்கன்று
ஆட்டுக்குட்டிகழுதைக்குட்டி
குதிரைக்குட்டிநாய்க்குட்டி
புலிப்பரள்பூனைக்குட்டி
சிங்கக்குருளைஎருமைக்கன்று
அணிற்பிள்ளைகிளிக்குஞ்சு

வினை மரபுச் சொற்கள்

ஒலிக்கு உரிய வினைகள்

விலங்குகளின் ஒலி மரபு

கழுதை கத்தும்புலி உறும்
குதிரை கனைக்கும்யானை பிளிறும்
சிங்கம் முழங்கும்எருது எக்காளமிடும்
சிங்கம் கர்சிக்கும்நரி ஊளையிடும்
எலி கீச்சீடும்நாய் குரைக்கும்
அணில் கீச்சிடும்பசு கதறும்
பாம்பு சீறும்பன்றி உறுமும்

பறவைகளின் ஒலி மரபு

சேவல் கூவும்கிளி கொஞ்சும்
கூகை (கோட்டான்) குழறும்குயில் கூவும்
மயில் அகவும்கோழி கொக்கரிக்கும்
கிளி பேசும்குருவி கீச்சிடும்
வண்டு முரலும்வாத்து கத்தும்
ஆந்தை அலறும்காக்கை கரையும்

பெயர்களுக்குப் பொருத்தமான வினைகள்

அப்பம் தின்கதிர் அறு
ஏர் உழுகளை பறி
கல் உடைஅம்பு எய்
காய்கறி அரிமரம் வெட்டு
நார் கிழிகிளையை ஒடி
இலை பறிகூரை வேய்
சந்தனம் பூசுவரப்புக் கட்டு
சோறு உண்விதையை விதை
தென்றல் வீசும்வெற்றிலை தின்
தாள் அடிவிறகைப் பிள
பாடல் இயற்றுநூல் எழுது
பழம் தின்படம் வரை
தோசை சுடுஇட்லி அவி
தேனை நக்குமது அருந்து
பால் பருகுநீர் குடி
ஓவியம் வரைந்தார்வண்ணம் தீட்டினார்
சிற்பம் செதுக்கினார்பூப்பறித்தல்
செய்யுள் இயற்றினார்வெற்றிலை கிள்ளுதல்
குடம் வனைந்தார்யானைப்பாகன்
கூடை முடைந்தார்ஆட்டு இடையன்
கூரை வேய்ந்தார்சுவர் எழுப்பினான்
வீடு கட்டினார்அம்பு, வேல், எறிதல்

வழூஉச் சொற்கள் & திருத்தம்

வழூஉச் சொற்கள்திருத்தம்
அடமழைஅடைமழை
அதுகள்அவை
அருவாமனைஅரிவாள்மனை
அருகாமையில்அருகில்
அண்ணாக்கயிறுஅரைஞாண்கயிறு
அமக்களம்அமர்க்களம்
அவரக்காய்அவரைக்காய்
அடயாளம்அடையாளம்
அப்ளம்அப்பளம்
அலமேலு மங்கைஅலர்மேல் மங்கை
அகண்டஅகன்ற
அடிச்சுட்டாஅடித்துவிட்டாள்
அத்தினிஅத்தனை
ஆத்துக்குஅகத்துக்கு
அறுவறுப்புஅருவருப்பு
அங்கிட்டுஅங்கு
அவுந்துஅவிழ்ந்து
ஆச்சிஆட்சி
ஆம்படையான்அதமுடையான்
அவங்கஅவர்கள்
ஆம்பிள்ளைஆண்பிள்ளை
ஆத்திற்குஆற்றிற்கு
ஆச்சுஆயிற்று
இடதுபக்கம்இடப்பக்கம்
இன்றுஇன்றைக்கு
இடதுகைஇடக்கை
இத்தினைஇத்தனை
இரும்பல்இருமல்
இங்கிட்டுஇங்கு
இளனிஇளநீர்
இறச்சிஇறைச்சி
இன்னும்இன்னும்
இடைபோடுஎடைபோடு
இவையன்றுஇவையல்லை
இத்துபோதல்இற்றுப்போதல்
ஈர்கலிஈர்கொல்லி
உசிர்உயிர்
உடமைஉடைமை
உந்தன்உன்றன்
உளுந்துஉழுந்து
உச்சிஉரித்து
உத்திரவுஉத்தரவு
உலந்துஉலர்ந்து
ஊரணிஊருணி
எகளை, மொகனைஎதுகை, மோனை
எண்ணைஎண்ணெய்
ஒத்தடம்ஒற்றடம்
ஒருக்கால்ஒருகால்
ஒம்பதுஒன்பது
ஒருவள்ஒருத்தி
ஒசத்தி, ஒயர்வுஉயர்வு
ஒண்டியாய்ஒன்றியாய்
ஒண்டுக்குடுத்தனம்ஒன்றிக்குடித்தனம்
ஒட்டரைஒட்டடை
கறம்கரம்
கத்திரிக்காய்கத்தரிக்காய்
கடகால்கடைகால்
கயறு, கவுறுகயிறு
கடப்பாறைகடப்பாரை
கட்டிடம்கட்டம்
கவுளிகவளி
கண்ணாலம்கல்யாணம்
காக்காகாக்கை
கருவேற்பிலைகறிவேப்பிலை
காத்துகாற்று
குடிக்கூலிகுடிக்கூலி
கெடிகாரம்கடிகாரம்
கோடாலிகோடாரி
கோர்வைகோவை
கோர்வைகோத்து
குதவளை, குறவளைகுரல்வளை
கைமாறுகைம்மாறு
கிரணம்கிரகணம்
குதுவைகொதுவை
சாம்பராணிசாம்பிராணி
சாய்ங்காலம்சாயுங்காலம்
சிகப்புசிவப்பு
சிலதுசில
சிலவுசெலவு
சுவற்றில்சுவரில்
சீக்காய்சிகைக்காய்
சந்தணம்சந்தனம்
சம்மந்தம்சம்பந்தம்
சம்மந்திசம்பந்தி
சும்மாயிருசும்மாவிரு
தங்கச்சிதங்கை
தடுமாட்டம்தடுமாற்றம்
தாப்பாள்தாழ்ப்பாள்
தலகாணிதலையணை
தாவாராம்தாழ்வாரம்
தமயன்தமையன்
திரேகம்தேகம்
தொடப்பம், துடப்பம்துடைப்பம்
துவக்கம்தொடக்கம்
துவக்கப்பள்ளிதொடக்கப்பள்ளி
துளிர்தளிர்
தொந்திரவுதொந்தரவு
தேனீர்தேநீர்
துறவல்திறவுபோல்
நேத்துநேற்று
நோம்புநோன்பு
நஞ்சைநன்செய்
நாகரீகம்நாகரிகம்
நாத்தம்நாற்றம்
நெனவுநனவு, நினைவு
பண்டககாலைபண்டசாலை
பதட்டம்பதற்றம்
பயிறுபயறு
பாவக்காய்பாகற்காய்
புஞ்சைபுன்செய்
புண்ணாக்குபிண்ணாக்கு
பெம்பளைபெண்பிள்ளை
பொட்லம்பொட்டலம்
பதனிபதனீர்
புடவைபுடைவை
புழக்கடைபுறங்கடை
புட்டுபிட்டு
மணத்தக்காளிமணித்தக்காளி
பேரன்பெயரன்
பேதமபேதைமை
போச்சுபோயிற்று
போறும்போதும்
பொன்னாங்கண்ணிக்கீரைபொன்னாங்காணிக்கீரை
முழுங்குவிழுங்கு
முயற்சித்தான்முயன்றான்
முமித்தான்விழித்தான்
மெனக்கெட்டுவினைகெட்டு
மோர்ந்துமோந்து
மாங்காமரம்மாமரம்
மானம்வானம்
முந்தாணிமுன்றானை
முன்னூறுமுந்நூறு
ரொம்பநிரம்ப
வயறுவயிறு
வலது பக்கம்வலப்பக்கம்
வெங்கலம்வெண்கலம்
வெண்ணைவெண்ணெய்
வெய்யல்வெயில்
வேண்டாம்வேண்டா
வெட்டிப்பேச்சுவெற்றுப்பேச்சு
வண்ணாத்திப்பூச்சிவண்ணத்துப்பூச்சி
வேர்வைவியர்வை
வைக்கல்வைக்கோல்

சொற்களை சேர்த்தும் பிரித்தும் எழுதுதல்தெளிவும், எளிமையும் உடைய மொழிநடை சிறந்ததாகும். ஆகவே, வாக்கியத்தில் சேர்த்தெழுத வேண்டிய சொற்களைச் சேர்த்தும், பிரித்தெழுத வேண்டிய சொற்களைப் பிரித்தும் எழுதுதல் வேண்டும்.

வேற்றுமை உருபுகளைப் பிரித்தெழுதல் கூடாது

எ.கா.

  • இப்பணி முருகன் ஆல் செய்யப்பட்டது – தவறு
    இப்பணி முருகனால் செய்யப்பட்டது – சரி
  • தாய் ஓடு அறுசுவைப்போம் – தவறு
    தாயோடு அறுசுவைப்போம் – சரி

இடைச்சொற்களைப் பிரித்தெழுதல் கூடாது

எ.கா.

  • சான்றோரும் உண்டு கொல் – தவறு
    சான்றோரும்உண்டுகொல் – சரி

உடம்படு மெய்களைப் பிரித்தெழுதல் கூடாது

எ.கா.

  • மான்கள் நீர் குடித்தன – தவறு
    மான்கள் நீர்குடித்தன – சரி
  • பாய் குதிரை – தவறு
    பாய்குதிரை- சரி
  • செந் தமிழ் – தவறு
    செந்தமிழ் – சரி
  • சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளியற்றினார் – தவறு
    சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் இயற்றினார் – சரி

Leave a Comment