தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் பொருத்துதல்.
இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து சிறுகதைகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
தமிழின் உரைநடை வடிவங்கள் – கட்டுரை, புதினம், சிறுகதை.
‘கடைசி வரை நம்பிக்கை’ சிறுகதையின் ஆசிரியர் – அரவிந்த் குப்தா.
‘வீரச்சிறுவன்’ சிறுகதையின் ஆசிரியர் ஜானகிமணாளன்.
‘தாவரங்களின் உரையாடல்’ எனும் சிறுகதையின் ஆசிரியர் – எஸ். ராமகிருஷ்ணன்.
தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் – வ. வே. சுப்பிரமணியம்.
‘பயணம்’ எனும் சிறுகதை இடம் பெற்ற நூல் – பிரயாணம்.
தூரத்து ஒளி (அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகள்) சிறுகதையின் ஆசிரியர் – க.கொ. முத்தழகர்.
நண்பன் (மரியாதைராமன் கதைகள்) என்னும் சிறுகதையின் ஆசிரியர் – ஓவியர் ராம்கி.
‘கொடைக்குணம்’ (தாத்தா பாட்டி சொன்ன கதைகள்) என்னும் சிறுகதையின் ஆசிரியர் – கழனியூரன்.
சிறுகதைக்கு (சிறுகதை மன்னன்) – புதுமைப்பித்தன்.
ஆவணம் சிறுகதையின் ஆசிரியர் – ந. பழநியப்பன்.
பி. ச. குப்புசாமி – ஒரு சிறுகதை ஆசிரியர்.
‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’ எனும் சிறுகதையை எழுதியவர் – கன்னிவாடி சீரங்கராயன்.
‘மனித யந்திரம்’ என்னும் சிறுகதை ஆசிரியர் – புதுமைப்பித்தன்.
‘சிறுகதை மன்னன்’ என அழைக்கப்பெறுபவர் – புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தனின் இயற்பெயர் – கொ.விருத்தாசலம்.
‘சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர்’ என புதுமைப்பித்தனைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் வெளியான இதழ் – மணிக்கொடி.
‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.
‘சாப விமோசனம்’ சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.
‘பொன்னகரம்’ சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.
‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்.
தண்ணீர், சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலிய சிறுகதைகளின் ஆசிரியர் – கந்தர்வன்.
‘ஓய்ந்திருக்கலாகாது’ நூலின் ஆசிரியர் சிறுகதைகள் (தொகுப்பு: அரசி – ஆதிவள்ளியப்பன்).
தி.ஜானகிராமன் எழுதிய ‘செய்தி’ என்னும் சிறுகதை சிவப்பு ரிக்க்ஷா தொகுப்பில் இடம்பெற்றது.
ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை மற்றும் அவர் கலைமகள் பரிசுபெற்ற ஆண்டு – ஸயன்ஸூக்கு பலி, 1932.
2016ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதை – ஒரு சிறு இசை; எழுதியவர் – கல்யாண்ஜி (எ) வண்ணதாசன்.
சு. சமுத்திரத்தின் சிறுகதைகள் –
• வாடாமல்லி
• பாலைப்புறா
• மண்சுமை
• தலைப்பாகை
• காகித உறவு
சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று (தமிழில்) எனும் நூலின் ஆசிரியர் – வல்லிக்கண்ணன்.
‘பாய்ச்சல்’ என்னும் கதை இடம் பெற்றுள்ள சிறுகதை – தக்கையின் மீது நான்கு கண்கள் (சா. கந்தசாமி).
150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர் – சா. கந்தசாமி.
“யுகசந்தி” என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள தர்கத்திற்கு அப்பால் என்ற சிறுகதை ஜெயகாந்தனின் படைப்பாகும்.
‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் – ஜெயகாந்தன்.
அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் –
• அக்கா
• மகாராஜாவின் ரயில்
• வண்டி கண் திகடசக்கரம்.
1999இல் இலங்கை அரசின் பரிசு பெற்ற அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – வடக்கு வீதி.
1996இல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – வம்சவிருத்தி.
சிவராமலிங்கம் எழுதி வெளிவந்தவைலங்காபுரி ராஜா – சிறுகதைத் தொகுப்பு.
அளவில் சிறுகதையைவிட நீளமாகவும் புதினத்தை விடச் சிறியதாகவும் இருக்கும் கதை – குறும்புதினம்.
சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் – குறுநாவல்.
பிம்பம் எனும் சிறுகதையின் ஆசிரியர் – பிரபஞ்சன்.
சிறுகதை ஆசிரியர்
ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்.
தேங்காய்த் துண்டுகள் – டாக்டர் மு.வ.
மறுமணம் – விந்தன்.
செங்கமலமும் ஒரு சோப்பும் – சுந்தரராமசாமி
ஒரு பிரமுகர் – ஜெயகாந்தன்.
மண்ணின் மகன் – நீல பத்மநாபன்.
அனுமதி – சுஜாதா
விழிப்பு – சிவசங்கரி
அனந்தசயனம் காலனி – தோப்பில் முஹம்மது மீரான்
கரையும் உருவங்கள் – வண்ணநிலவன்.
‘மனிதத்தீவுகள்’ எனும் சிறுகதையை இயற்றியவர் – உத்தம சோழன்.
‘குருவி மறந்த வீடு’ எனும் சிறுகதையை இயற்றியவர் – உத்தம சோழன்.
‘முதல்கல்’ என்னும் சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு – தஞ்சைச் சிறுகதைகள்.
தஞ்சைச் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பினுக்கு உதவியவர் – சோலை சுந்தரப் பெருமாள்.
‘உரிமைத்தாகம்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் – பூமணி.
அறுப்பு,வயிறுகள் என்பது பூமணியின் சிறுகதைகள்.
‘ஒரு குட்டித்தீவின் வரைபடம்’ சிறுகதைத் தொகுப்பு நூலின் ஆசிரியர் – தோப்பில் முகமது மீரான்.
‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது’ என்ற சிறுகதையை எழுதியவர் – தமிழ்நதி.
‘விட்டகுறை’ என்ற சிறுகதையின் ஆசிரியர் அழகிரிசாமி.
‘வெந்தழலால் வேகாது’ ஆசிரியர் – அழகிரிசாமி.
முல்லைக்கு தேர் தந்தவர் பாரி சாந்தா தத்தின் இலக்கிய சிந்தனை விருது பெற்ற சிறுகதை – கோடை மழை.
சிறுகதை (ம)ஆசிரியர்
பால்வண்ணம் பிள்ளை – புதுமைப்பித்தன்.
மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து – வல்லிக்கண்ணன்
சட்டை – ஜெயகாந்தன்
வேலி – ராஜம் கிருஷ்ணன்
மகன் – பா.செயப்பிரகாசம்
கிழிசல் – நாஞ்சில் நாடன்
ஓர் உல்லாசப் பயணம் – வண்ணதாசன்
ஒவ்வொரு கல்லாய் – கந்தர்வன்
மண் – அய்க்கண்
பழிக்குப்பழி – த.நா. சேனாதிபதி
பசி – தாமரைச்செல்வி, இலங்கை.
‘பேபி’ குட்டி – கே. பாலமுருகன், மலேசியா
யானையின் சாவு – சார்வாகன்.