நிகழ்கலை
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நிகழ்கலை தொடர்பான செய்திகள் பற்றித் தொகுத்து கொடுத்துள்ளோம்.
நிகழ்கலை
• கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன.
• சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை.
1. கரகாட்டம்
• ‘கரகம்’ என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.
• கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
• “நீரற வறியாக் கரகத்து” – புறநானூறு.
• சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’.
• கரகாட்டத்திற்கு அடிப்படை – குடக்கூத்து.
2. மயிலாட்டம்
• மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு. நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.
3. காவடியாட்டம்
• கா – பாரந்தாங்கும் கோல்.
• இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது.
• இலங்கை, மலேசியா உட்பட, புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.
4. ஒயிலாட்டம்
• ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம்.
• உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும் சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும்.
• சிறப்பு – கம்பீரத்துடன் ஆடுதல்.
• ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது.
• ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு.
• குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
5. தேவராட்டம்,
• வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள்.
• ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.
• கருவி – உறுமி (தேவதுந்துபி).
• 8 – 13 கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது.
• வேட்டி + தலை + இடையில் சிறுதுணி) + சலங்கை அணிந்து ஆடும் ஆட்டம்.
6. சேர்வையாட்டம்
• தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை, சேர்வையாட்டம்.
• இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்துகின்றனர்.
• இசைக்கருவிகளை – சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா.
7. பொய்க்கால் குதிரையாட்டம்
• “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
• ‘புரவி ஆட்டம்’, ‘புரவி நாட்டியம்’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
• காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர்.
• பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப்பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நையாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன.
• இராஜஸ்தானில் – கச்சிகொடி என்றும்,
• கேரளத்தில் – குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.
8. தப்பு ஆட்டம்
• ‘தப்பு’ என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும்.
• ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது.
• இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. தப்பு
• தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி.
• ‘தப் தப்’ என்று ஒலிப்பதால், அந்த ஒலியின் அடியாகத் ‘தப்பு’ எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
• தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக” – திருப்புகழ்
• என்று அருணகிரிநாதர், தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார். இதனைப் ‘பறை’ என்றும் அழைப்பர்.
• ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை.
• தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம்பெறுகிறது.
9. புலி ஆட்டம்
• தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
• பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.
10. தெருக்கூத்து
• நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து.
• திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது.
• ஒரு கதையை இசை. வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்.
• திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
• தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” – ந. முத்துசாமி (கலைஞாயிறு).
• இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
• தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது.
11. தோற்பாவைக் கூத்து
• தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
• தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் – தோற்பாவை.
• மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், ‘இராச சோழன் தெரு’ என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது. – ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலர்.
Related Links பெரறிஞர் அண்ணா