நாட்குறிப்பு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நாட்குறிப்பு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
ஏடு
ஆங்கிலத்தில் – டைரி
இலத்தீன் – ல் – டைரியம்
நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது EPHEMERIDES என்று அழைக்கப்பெறும் கிரேக்கக் குறிப்பேடு ஆகும்.
1498 – இல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய மாலுமி – வாஸ்கோலகாமா.
வாஸ்கோலகாமா – வின் நாட்குறிப்புகள் யாரால் பதிவு செய்யப்பட்டன – ஆல்வாரோ வெல்ல.
ஆனந்தரங்கர் காலம் – 18 ஆம் நூற்றாண்டு.
பிரெஞ்சுக் கீழக்கிந்தியக் குழுமத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் துய்ப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர் – ஆனந்தரங்கர்.
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் – சாமுவேல் பெய்பிசு.
இந்தியாவின் பெய்பிசு என்று அழைக்கப்படுபவர் – ஆனந்தரங்கர்.
பிரெஞ்சுக் கப்பல் தளபதி – லெபூர்தொனே.
யாருடைய படையெடுப்பு ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகை இட்டது – இராபர்ட் கிளைவின்.
1758 – ஆம் ஆண்டு இறுதியில் சென்னைக் கோட்டை முற்றுகையை தொடங்கியவர் – வல்லி.
“தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்படுகின்றன” – உ.வே.சா
அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று என்று கூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வைத்திருக்கிறார், ஆனந்தரங்கர்” – வ.வே.சு
புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் ‘அழகப்பன்’ என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதையும் ஆனந்தரங்கர் கூறியுள்ளார்.
ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்:-
480 காசு – 1 ரூபாய்
60 காசு – 1 பணம்
8 பணம் – 1 ரூபாய்
24 பணம் – 1 வராகன்
1 பொன் – 1/2 வராகன்
1வராகன் – 3 அல்லது 3.2 ரூபாய்
1 மோகரி – 14 ரூ மதிப்புள்ள தங்க நாணயம்
1 சக்கரம் – 1/2 வராககுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்.
புதுசேரியில் நடந்த போரில் மக்கள் உணவும் நீரும் இன்றி வாடியபோது பெருஞ்சோறு அளித்தவர் – கனகராயர்.
புதுசேரியின் ஆளுநராக லெறி இருந்த காலத்தில் புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயாருக்கும் கூடுதலாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது.
ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள்:
• ஆனந்தரங்கன் கோவை – தியாகராய தேசிகர்.
• ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – புலவரேறு அரிமதி தென்னகன்.
• வானம் வசப்படும் – வானம் வசப்படும் (பிரபஞ்சன்)