பேரறிஞர் அண்ணா 6th – 12th

பேரறிஞர் அண்ணா 

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பேரறிஞர் அண்ணா  பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

 

பேரறிஞர் அண்ணா

பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று முத்துராமலிங்கத்தேவரை புகழ்ந்துரைத்தவர் – அறிஞர் அண்ணா.

“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிர்” என காயிதே மில்லத்தை பாரட்டியவர் – அறிஞர் அண்ணா.

பேச்சுக்கலைக்கு – அறிஞர் அண்ணா.

தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் – அறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா துணையாசிரியராக பணியாற்றிய இதழ்கள் – குடியரசு, விடுதலை.

அறிஞர் அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் •  ஹோம்ரூல்
•  ஹோம்லேண்ட்
•  நம்நாடு
•  திராவிடநாடு
•  மாலைமணி
•  காஞ்சி

பேரறிஞர் அண்ணா பெத்த நாயக்கன் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு – 1935.

இரு மொழி சட்டத்தை உருவாக்கியவர் – அறிஞர் அண்ணா.

சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றியவர் – அறிஞர் அண்ணா.

நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயம் வெளியிட்ட ஆண்டு –2009.

‘தென்னகத்தின் பெர்னாட்ஷா’ என்று அழைக்கப்படுபவர் – அறிஞர் அண்ணா.

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ முதல் ‘இன்ப ஒளி’ வரை பல படைப்புகளைத் தந்தவர் – அறிஞர் அண்ணா.

அண்ணாவின் புகழ் பெற்ற பொன்மொழிகள்
1.  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
2.  கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
3.  சட்டம் ஒரு இருட்டறை-அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
4.  தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியம் தேவை.
5.  இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
6.  இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
7.  எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
8.  நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
9.  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

“இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று கூறியவர் – பேரறிஞர் அண்ணா.

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” எனக் கூறியவர் – அறிஞர் அண்ணா.

தங்கைக்கு – மு.வரதராசன், தம்பிக்கு – அறிஞர் அண்ணா.

“களம் புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்து விட்டது, உண்டு மகிழ்ந்தாய்; அதற்கு உன் புன்னகை தான் சாட்சி” என்றவர் அறிஞர் அண்ணா.

“குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம்; புளிச் சேப்பங்கள் மறுபக்கம்” என்று கூறியவர் -ப. ஜீவானந்தம் 201. அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?… எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்.” என்றவர் அறிஞர் அண்ணா.

மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் – திரு.வி.க, பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.

மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணா.

மேடைப்பேச்சில் அண்ணாவை ஈர்த்தவர் – திரு. வி.க.

“உழைத்துப்பெறு! உரிய நேரத்தில் பெறு!முயற்சி செய்து பெறு!” என்று கூறியவர் – அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா தனது தம்பிக்கு எந்த இதழில் கடிதம் எழுதினார்?  காஞ்சி.

“புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு” என்று கனிமொழி பேசியவர் அண்ணா அறிஞர்.

அண்ணாவின் கடிதம் எழுதப்பட்ட நாள் – 14.1.1968

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை,கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முதலியவற்றால் கவரப்பட்டவர் – எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்அவர்களை ‘இதயக்கனி’ என்று போற்றியவர் – அறிஞர் அண்ணா.

“வீட்டிற்கோர் புத்தக சாவை வேண்டும்” என்று கூறியவர் – அறிஞர் அண்ணா.

“செவ்வாழை” என்ற நூலின் ஆசிரியர் – பேரறிஞர் அண்ணா.

ஓய்வு – பேரறிஞர் அண்ணா.