மு.வரதராசனார்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து மு.வரதராசனார் பற்றிய செய்திகளைத் தொகுத்துள்ளோம்.
“பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும்” என்றவர் – மு. வரதராசனார்.
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என்றவர் – மு.வரதராசனார்.
“தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தவல்லது; தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு. ஆட்சிமொழி என்றால் சட்டசபைமுதல் நீதிமன்றம்வரையில் தமிழ் வழங்க வேண்டும்” என்று கூறியவர் – மு.வரதராசனார்.
“உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே, பழிக்காதே. வெறுக்காதே” என்று கூறியவர் – மு. வரதராசனார்.
“தமிழர்களிடையே உள்ள பகை, பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச் செய்யாதே; அத்தகைய சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே. தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை, சொல், செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவையைப் போற்று” என்று கூறியவர் – மு. வரதராசனார்.
“தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும். நீ அதைத் தேடிக் கொண்டுபோய் அலையாதே. நீ தேட வேண்டுவது தொண்டு” என்று கூறியவர் – மு. வரதராசனார்.
‘தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும் என்று கூறியவர் – மு. வரதராசனார்.
“இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை. ஆனால்,bகண்டபடி சொல்ல ஆள் ஏராளம். ஒவ்வொருவரும் ஆணை இடுவதற்கு விரும்புகிறார். அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால்தான் வீழ்ச்சி நேர்ந்தது” என்று கூறியவர் – விவேகானந்தர்.
Related Links மகாத்மா காந்தி 6th – 12th