மகாத்மா காந்தி 6th – 12th

மகாத்மா காந்தி 

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து மகாத்மா காந்தி பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

மகாத்மா காந்தி

யாரை எளிமையின் ஓர் அறமாக போற்றினர்? – காந்தியடிகள்.

“இந்தியாவில் இவர் காலடி படாத இடமே இல்லை!” என்று கூறப்படும் நபர் யார்? – காந்தியடிகள்.

காந்தி அருங்காட்சியகம் எங்குள்ளது? – மதுரை.

எப்போது காந்தி சென்னைக்கு வந்தார்? – 1919 (பிப்ரவரி).

ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1919.

ரௌலட் சட்டத்தை எதிர்த்து கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜி வீட்டில் நடைபெற்றது.

யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார்? – பாரதியார்.

பாரதியை இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர் என்றவர் யார்? – இராஜாஜி.

பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றவர் யார்? – காந்தியடிகள்.

காந்தி மதுரைக்கு எப்போது வந்தார்? 1921 (செப்டம்பர்).

காந்தி எங்கு தனது மேலாடை அணியும் பழக்கத்தை கைவிட்டார்?மதுரை.

உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் யார்? – காந்தியடிகள்.

காந்தி காரைக்குடியைச் சுற்றி உள்ள ஊர்களில் பயணம் செய்யும்போது கானாடுகாத்தான் என்னும் ஊருக்குச் சென்றார்.

வீடு முழுவதும் வெளிநாட்டு பொருட்களால் அழகுபடுத்தியிருந்த அன்பரிடம் காந்தியடிகள், “பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுங்கள் இதை விட அழகாக மாற்றுகிறேன்”.

காந்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வரமாட்டேன் என்றார்.

எந்த அருவியில் நீராட மறுப்பதாகக் காந்தி கூறினார்? – குற்றாலம்.

காந்தி எங்கு தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்? – தென்னாப்பிரிக்கா.

ஜி. யு. போப் எழுதிய ‘தமிழ்க்கையேடு’ தம்மை கவர்ந்ததாக காந்தி சொன்னார்.

திருக்குறள் என்னும் நூல் காந்தியை பெரிதும் கவர்ந்தது.

1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது.

“இந்தப் பெரியவரின் (உ. வே ள். சா)அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறியவர்? – காந்தி.