புதுக்கவிதை
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து புதுக்கவிதை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ந.பிச்சமூர்த்தி
இயற்பெயர் – ந. வேங்கட மகாலிங்கம்.
புனைபெயர் – ந. பிச்சமூர்த்தி.
ஊர் – தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்.
எழுத்துப்பணி
• கதைகள்,
• மரபுக்கவிதைகள்,
• புதுக்கவிதைகள்,
• ஓரங்க நாடகங்கள்.
காலம் –15.08.1900 04.12.1976
ந.பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் இக்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்.
பொங்கல் வழிபாடு – ந. பிச்சமூர்த்தி கவிதைகள்.
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் – புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலில் வல்லிக்கண்ணன்.
மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் – புதுக்கவிதைகள்.
பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
எனவே, அவர் “புதுக்கவிதையின் தந்தை” என்று போற்றப்படுகிறார்.
புதுக்கவிதையை “இலகு கவிதை, கட்டற்ற கவிதை. விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.
இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.
ந.பிச்சமூர்த்தி துணை ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
• ஹனுமான்
• நவஇந்தியா
முதல் சிறுகதை – “ஸயன்ஸுக்கு பலி”.
1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார். பிக்ஷு”, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.
காட்டு வாத்து – ந. பிச்சமூர்த்தி.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது”
“கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும்”
சி.சு. செல்லப்பா
‘வாடிவாசல்’ நூலின் ஆசிரியர் – சி.சு. செல்லப்பா.
சி.சு. செல்லப்பாவின் இலக்கிய பங்களிப்புகள் – சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு.
சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர் – சி. சு. செல்லப்பா.
‘எழுத்து’ என்னும் இதழினைத் தொடங்கியவர் – சி. சு. செல்லப்பா.
‘எழுத்து இதழினைத் தொடங்கி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் – சி. சு. செல்லப்பா.
செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள்
• வாடிவாசல்,
• சுதந்திர தாகம்,
• ஜீவனாம்சம்,
• பி. எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி
• தமிழ் சிறுகதை பிறக்கிறது.
‘சுதந்திர தாகம்’ புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – சி. சு. செல்லப்பா.
குறும்புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவான ‘வாடிவாசல்’ என்னும் நூலின் ஆசிரியர் சி.சு.செல்லப்பா.
தரும சிவராமு ❌
பசுய்யா ❌
இரா. மீனாட்சி ❌
சி. மணி ❌
சிற்பி ❌
மு.மேத்தா
வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் – மு. மேத்தா.
‘கண்ணீர்ப் பூக்கள்’ எனும் நூலை இயற்றியவர்.
‘ஊர்வலம்’ எனும் நூலை இயற்றியவர்.
‘சோழநிலா’ நூலை இயற்றியவர்.
‘மகுடநிலா’ நூலை இயற்றியவர்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் – ‘ஆகாயத்திற்கு அடுத்த வீடு’ (2006).
உலகிற்கு ஒளியேற்ற எண்ணெய் ஆக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுபவர் · மு.மேத்தா.
தோல்வி உன் உயர்விற்கு தூண்டு கோலாகும் எனக் குறிப்பிடுபவர் – மு. மேத்தா.
மு. மேத்தா கூறும் மூன்றாவது கை – நம்பிக்கை.
“நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்”.
“தூங்கி விழுந்தால் பூமி உனக்கு படுக்கையாகிறது; விழித்து நடந்தால் அதுவே உனக்கு பாதையாகிறது”.
“கவலைகளைத் தூக்கிக் கொண்டு திரியாதே. அவை கைக்குழந்தையல்ல”
“உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்”
ஈரோடு தமிழன்பன்
‘தமிழோவியம்’ – ஈரோடு தமிழன்.
“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்!”
புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களில் படைப்புகளை வெளியிட்டவர் – ஈரோடு தமிழன்பன்.
ஈரோடு தமிழன்பன் இயற்றிய கவிதை நூல்களை –
ஹைக்கூ
சென்ரியு
லிமரைக்கூ
ஈரோடு தமிழன்பனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதை நூல் – வணக்கம் வள்ளுவ (2004).
தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் தமிழன்பன் கவிதைகள்.
இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அப்துல்ரகுமான்
“உன்மனம் ஒரு பாற்கடல்”.
“வாரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதர்காக?”
“இந்த
ஆதிரை பருக்கைகள் (வந்தா அப்துல்ரகுமான்)
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி” – பால்வீதி
‘பால்வீதி’ என்னும் நூலின் ஆசிரியர் – அப்துல்ரகுமான்.
கலாப்பிரியா
“கொப்புகள் விலகி
கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய்
பறித்துப் போடும் மேய்ப்பனை
சிராய்ப்பதில்லை
கருவமுட்கள்”
“குழந்தை
வரைந்து
பறவைகள் மட்டுமே
வானம்”
கல்யானண்ஜி
“சைக்களில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை”