மரபுக் கவிதை
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து மரபுக் கவிதை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
முடியரசன்
முடியரசனின் இயற்பெயர் – துரைராசு.
இயற்றிய நூல்கள்:
• பூங்கொடி
• வீரக்காவியம்
• காவியப்பாவை
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் – முடியரசன்.
‘கவியரசு’ என பாரட்டப்பெறுபவர் – முடியரசன்.
‘புதியதொரு விதி’ செய்வோம் நூலின் ஆசிரியர் – முடியரசன்.
நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் – முடியரசன்.
‘நானிலம் படைத்தவன்’ பாடலில் முடியரசன் குறிப்பிடாத திணை – பாலை.
முடியரசனின் பெற்றோர் சுப்பராயலு மற்றும் சீதாலெட்சுமி.
முடியரசனின் ஊர் – தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.
பறம்பு மலையில் நடந்த விழாவில் ‘கவியரசு’ என்னும் பட்டம் முடியரசனுக்கு குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.
பூங்கொடி என்னும் காவியத்துக்காக தமிழக அரசு பரிசு வழங்கிய ஆண்டு – 1966.
பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர் – முடியரசன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர் – முடியரசன்.
முடியரசனின் காலம் 7.10.1920 — 3.12.1998.
“கடல்சுமந்தாள்; மலைசுமந்தாள்; கான்சு மந்தாள்; மிடல்சுமந்த அவள்உறுத்துச் சினந்து நின்றால் மேலாளர் வாழ்வெங்கே? அவளே வெல்வாள்!”, – முடியரசன்
வாணிதாசன்
‘ஓடை’ என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? தொடுவானம்.
தொடுவானம் நூலின் ஆசிரியர் – வாணிதாசன்.
வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு (எ) அரங்கசாமி.
வாணிதாசன் பிறந்த ஊர் – வில்லியனூர்.
வாணிதாசன் பெற்றோர் – அரங்க.திருக்காமு துளசியம்மாள்.
சிறப்பு பெயர்கள் – கவிஞரேறு, பாவலர்மணி.
தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ – வாணிதாசன்.
இயற்றிய நூல்கள் –
• தமிழச்சி,
• கொடிமுல்லை,
• தொடுவானம்,
• எழிலோவியம்,
• குழந்தை இலக்கியம்.
எந்த அரசு வாணிதாசனுக்கு செவாலியர் விருது வழங்கியது – பிரெஞ்சு அரசு.
வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்? தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு.
“வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே”
“ஆயிரம் வண்ணம் காட்டும் அடிவான முகில்கள் ஓடிப்பாய்கதிர் ஒளிமறைக்கும்!”
“புதுவெள் ளத்தில்
மாய்கதிர் செக்கர் வானம்
எழிலோவி யம்பார் தம்பி!”
“களிமயில் அகவும் புள்ளிக்
கருங்குயில் பாட்டிசைக்கும்”
சுரதா
சுரதா பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம், பழையனூர்.
சுரதாவின் பெற்றோர் – திருவேங்கடம் -செண்பகம்.
சுரதாவின் இயற்பெயர் – இராசகோபாலன்.
பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுரதா தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்.
உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.
சுரதாவின் படைப்புகள் –
• அமுதும் தேனும்,
• தேன்மழை,
• துறைமுகம்
• சுவரும் சுண்ணாம்பும்
• மங்கையர்க்கரசி
சுரதாவின் ‘காடு’ என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் இயற்கை எழில்.
‘காடு’ என்னும் பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.
காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருப்பதற்கு கவிஞர் சுரதா உவமையாக ஒப்பிடுவது கார்த்திகை விளக்குகள்.
சுரதா பெற்ற தமிழக அரசின் விருது – பாவேந்தர் விருது.
சுரதா பெற்ற தமிழக இயலிசை நாடக மன்றத்தின் விருது – கலைமாமணி.
சுரதாவின் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்ற நூல் – தேன்மழை.
“வென்றவரும் சில சமயம் தோற்பவரென்று அறிந்தேன்”
இதில் வெற்றிபெற – சுரதா.
‘இதில் வெற்றி பெற’ என்ற கவிதையில் இடம் பெற்ற பா வகை – எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கம் சுரதா.
முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட ‘காவியம்’ என்ற இதழை நடத்தியவர் – சுரதா.
சுரதா நடத்திய ஏடுகள்
• இலக்கியம்,
• விண்மீன்,
• ஊர்வலம்
தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது வாங்கியவர் – சுரதா.
தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது பெற்றவர் – சுரதா.
சுரதா, தமிழகத்தில் உலவும் வாழும் பாவலராகிய பன்னருந்தமிழ்ப் பாவலர்களுக்குத்தலைமை வழிகாட்டி. பாவலர்;.
“உரைநடையின் சிக்கனந்தான் கவிதை; ஓங்கும்
உணர்ச்சிகளின் சிக்கனந்தான் அடக்கம்; காதல்”
கண்ணதாசன்
கண்ணதாசன் 24 ஜூன் 1927 பிறந்தார்.
கண்ணதாசனின் பெற்றோர் – சாத்தப்பன்-விசாலாட்சி.
கண்ணதாசனின் இயற்பெயர் – முத்தையா.
‘இயேசு காவியம்’ என்ற நூலின் ஆசிரியர் – கண்ணதாசன்.
மழைபொழிவு (இயேசு காவியம் )– கண்ணதாசன்.
கண்ணதாசன் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல் பட்டி.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவுரைகளைக் கூறும் நூல் – இயேசு காவியம்.
இயேசு காவியம் என்னும் நூலின் ஆசிரியர் கண்ணதாசன்.
கண்ணதாசன் தமிழக அரசவை கவிஞராக இருந்து உள்ளார்.
கண்ணதாசன் தொடங்கிய இதழ்கள் –
• தென்றல்,
• முல்லை,
• தமிழ்மலர்
கண்ணதாசனின் சிறந்த வரலாற்றுப் புதினம் (சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்)– சேரமான்காதலி.
ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி – கண்ணதாசன் புதினங்கள்.
கண்ணதாசனின் கவிதை நூல்கள் –
• ஆட்டனத்தி ஆதிமந்தி
• இயேசு காவியம்,மாங்களி
• கல்லக்குடி மகாகாவியம்
“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்”
“மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” என்ற பாடலை எழுதியவர் – கண்ணதாசன்.
தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் –கண்ணதாசன்.
1949ஆம் ஆண்டு ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
காலக்கணிதம் – கண்ணதாசன்.
“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதியின் நதிசெய்த குற்றம் இல்லை
விதிசெய்த குற்றம் இன்றி
வேறு – யாரம்மா!”
‘விஞ்ஞானி’ எனும் தலைப்பிலான கவியரங்க கவிதை கண்ணதாசன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
“நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே”
“கட்டற்று வானிலே தவழ்கின்ற காற்றினைக் கைது செய்தாரு மில்லை”
“மாற்றம் எனது மானிடத் தத்துவம்”
5,000 மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதிப் புகழ் பெற்றார்.
அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் கட்டுரைத்தொடர்களும், இயேசுகாவியம் என்னும் நூலும் இவர் புகழை என்றும் நிலைநிறுத்தும்.
“முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி”
இயற்றிய நூல்கள்
• ஆட்டனத்தி ஆதிமந்தி,
• மாங்கனி,
• ஏசுகாவியம்
உடுமலை நாராயணகவி
உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் (1899–1981).
‘அந்தக்காலம் இந்தக்காலம்’ என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் உடுமலை நாராயணகவி.
பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதி சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயணகவி.
பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி.
நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதை எழுதியவர் உடுமலை நாராயணகவி.
தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயணகவி.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம் 13.04.1930 – 08.10.1959.
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு (பட்டுக்கோட்டை).
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர் மக்கள் கவிஞர்.
மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பிறரின் உழைப்பை நம்பி வாழக் கூடாது என மக்கள் கவிஞர் கூறுகிறார்.
உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள் வழிப் பரவலாக்கியவர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அவரின் கவிதை –
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்”
அ.மருதகாசி
அ.மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிகாடு.
‘திரைக்கவித் திலகம்’ யார்? – அ. மருதகாசி.