கவிமணி தேசிக விநாயகனார்
இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து கவிமணி தேசிக விநாயகனார் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் – ஆசிய ஜோதி.
உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் – புத்தர்.
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் – ஆசிய ஜோதி.
ஆசிய ஜோதி – கவிமணி தேசிக விநாயகனார்.
36 – ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்.
பெற்ற பட்டம் – கவிமணி.
“மக்களுக்கு செய்யும் பணியே, இறைவனுக்கு செய்யும் பணி”
‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற நூலின் ஆசிரியர் – கவிமணி.
காலம் – 1876 – 1954
கவிமணி பிறந்த ஊர் – தேரூர், குமரி மாவட்டம்.
கவிமணியின் பெற்றோர் – சிவதாணு, ஆதிலெட்சுமி.
கவிமணியின் கவிதை நூல்கள் –
• ஆசிய ஜோதி,
• கதர் பிறந்த கதை,
• மருமக்கள் வழி மான்மியம்.
• மலரும் மாலையும்
• குழந்தைச் செல்வம்
கவிமணியின் மொழிபெயர்ப்பு நூல் – உமர்கய்யாம் பாடல்கள்.
“வருமுன் காப்போம்” என்னும் பாடல் அமைந்துள்ள நூல் – மலரும் மாலையும்.
வருமுன் காப்போம் – கவிமணி.
“கூழையே நீ குடித்தாலும் குளித்த பிறகு குடியப்பா; ஏழையே நீ ஆனாலும் இரவில் நன்றாய் உறங்கப்பா! “
எதை கடைப்பிடித்தால் எமன் நம் உயிரை அணுகமாட்டான் என்று கவிமணி கூறுகிறார்? காலையும், மாலையும்.
“நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து”
“கல்லும் மலையும் குதித்து வந்தேன் பெருங் காடும் செடியும் கடந்து வந்தேன்”
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”
“பந்தடிப்போம் உன்னை என்று வெண்ணிலாவே! நீயும் பாரில் வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!”
“நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஒதித்தொழுது எழுக ஓர்ந்து”
பிறப்பினால் எவர்க்கும் உலகில் பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில்-நல்ல செய்கை வேண்டுமப்பா!”
‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம், எனப் பாராட்டியுள்ளார்.
Related Links நாமக்கல் கவிஞர் 6th – 12th