பாரதியார் 6th – 12th

பாரதியார் 

6th to 12th old and new book + advance tamil வரையிலான பாரதியார் தொடர்பான செய்திகளை அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.

பாரதியார்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழை வியந்து பாடியவர்.

“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையை கூறியவர் – பாரதியார்.

பாரதியார் 6th book

பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.

காணி நிலம் வேண்டும் எனப் பாடியவர் பாரதியார்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்.

இளமையில் சிறப்பாக கவிபாடும் திறன் பெற்றவர்.

பாரதியார்க்கு ‘பாரதி’ எனும் பட்டம் வழங்கியவர் – எட்டயபுர மன்னர்.

மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.

இயற்றிய நூல்கள் – பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு.
புதிய ஆதிச்சூடி.

உரைநடை நூல்கள் –
தராசு
சந்திரிகையின் கதை
பாப்பா பாட்டு
ஞானாரதம்

“காக்கைகுருவி எங்கள் சாதி”
புதிய ஆத்திசூடி – பாரதியார். (அறிவியல் ஆத்திச்சூடி – ஔவையார்).

வானை அளப்போம்

‘வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’

யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார்.

பாரதியார் 6th old book

பாரதியார் பிறந்த ஆண்டு – 1882.

பாரதியார் இறந்த ஆண்டு – 1921.

யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை பாரதிதாசன் என மாற்றினார்? பாரதியார்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”

“சுதந்திரப் பயிரைத் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்”

யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார்? – பாரதியார்.

தமிழ்நாட்டுக் கவிஞர் யார்? பாரதியார்.

“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்”

பாரதியை இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர் என்றவர் யார்?  இராஜாஜி.

பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றவர் யார்? காந்தியடிகள்.

வ.உ.சி யாருடைய பாடலை விரும்பிக் கேட்பார்? பாரதியார்.

வ.உ.சி சென்னைக்கு செல்லும்போது யாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்? பாரதியார்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”

பாரதியார் 7 term 1

‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்’

“சாதிகள் இல்லையடி பாப்பா”

பாரதியார் எதற்கு கோயில் எனப் பெயர் சூட்டினார்? – பள்ளி.

“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்”

கருத்துப்பட ஓவியங்களை முதன் முதலில் இந்தியா என்ற இதழில் தமிழில் அறிமுகப்படுத்தியவர்? பாரதியார்.

பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் – எட்டையபுரம்.

 

பாரதியார் 7th term 3 old book

தமிழ்மொழி வாழ்த்து எனும் பாடப்பகுதி இடம்பெற்ற நூல் – பாரதியார் கவிதைகள்.

பாரதியார் நடத்திய இதழ்களை விடுதலை போருக்கு விதிட்டவர் – இந்தியா, விஜயா (நாள் இதழ்).

உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும், சீட்டுக்கவிதைகளையும் எழுதியவர்.

• “எட்டயபுர ஏந்தல்”
• “நீடுதுயில் நீக்கப் பாடி வந்த திலா”
• “சிந்துக்குத் தந்தை” செந்தமிழ்த் தேனீ
• “புதிய அறம் பாட வந்த அறிஞன்”
• “மறம் பாட வந்த மறவன்” என்று பாரதிதாசனரால் பாராட்டப்பட்டவர்.

• “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்று கவிமணி பாராட்டியுள்ளார்.

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனையாளர், விடுதலை போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் – பாரதியார்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”பாரதியார்

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” – பாரதிதாசன்.

புதுக்கவிதைக்கு – பாரதியார்.

“சுப்புரத்தினம் ஓர் கவி” எனக் கூறியவர் – பாரதியார்.

மகாகவி பாரதியின் பாடல்களைப்பாடி விடுதலை உணர்வை ஊட்டியவர் – அம்புஜத்தம்மாள்.

பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர் – முடியரசன்.

பாஞ்சாலி சபதம் என்ற பாடலின் ஆசிரியர் – பாரதியார்.

பாரதியாரின் பெற்றோர் சின்னச்சாமி-இலக்குமி அம்மையார்.

பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள்.

“விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யாரு…”

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”

11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் – பாரதியார்.

‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’

“ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை”

 

பாரதியார் 9th old book
பாரதியார் 10th new nook
பாரதியார் 10th book
பாரதியார் தீக்குகள்

பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் – இந்தியா, சுதேசமித்திரன்.

செய்திகளில் வெளிவரும் கேலிச்சித்திரம், கருத்துப்படம் முதலியவற்றை உருவாக்கியவர் – பாரதியார்.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்க ளில் எதிர்த்து எழுதியவர் – பாரதியார்.

பாரதியாரின் முப்பெரும் படைப்புகள்
• கண்ணன் பாட்டு
• குயில் பாட்டு
• பாஞ்சாலி சபதம்

பாரதியாரின் குழந்தை இலக்கியங்கள்
• பாப்பா பாட்டு
• கண்ணன் பாட்டு
• புதிய ஆத்திச்சூடி

தமிழில் வசனக் கவிதை உருவாக காரணமானவர் – பாரதியார்.

பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்.

‘காற்றே வா’ என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர் – பாரதியார்.

“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் போற்றியவர் – பாரதியார்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரை புகழ்ந்து பாடியவர்- பாரதியார்.

‘நிகரென்று கொட்டு முரசே-இந்த நீணிலம் வாழ்பவரெல்லாம்’ என்று விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் முரசு கொட்டியவர் – பாரதியார்.

 

பாரதியார் 10th old
பாரதியார் 10th old book

“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்”

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப் பீர்”

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய ்தல் வேண்டும்.”

“கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்”

“ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ”

தமிழகத்தில் மக்களிடையே விடுதலை வேட்கைக் கனலைத் தம் வீறுகொண்ட பாக்களால் தட்டியெழுப்பியவர் – பாரதியார்.

வள்ளலாரை ‘புதுநெறி கண்ட புலவர்’ என்று கூறியவர்  – பாரதியார்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”

“சிறந்த பத்திரிகையாளன் ‘நல்ல ஆசான்’ என்பதில் ஐயமில்லை” காரணமாக அமைந்த தமிழ்ச்சிற்பி – பாரதியார்.

பாரதி எட்டையபுரம் சமஸ்தானத்தின் பணியிலிருந்து வெளியேறி மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார், அங்கிருந்து வெளியேறி சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

தன் பெயரையும் தன்னையும் முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் “தான்” என்ற ஒன்றை ஒழித்தவர் -பாரதி.

தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் – பாரதி.

கருத்துப்படங்களை மட்டுமே நடத்த விரும்பிய இதழ் – சித்திராவளி.

பாரதி, முதன் முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழ்கள் – இந்தியா, விஜயா.

தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர்.

“பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு” என்ற குறள் வெண்பாவை பெண்களுக்காக சக்கரவர்த்தினி இதழில் பாரதி எழுதியுள்ளார்.

பாரதி சிவப்பு (புரட்சி, விடுதலை) வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ் – இந்தியா.

தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடி – பாரதி.

இதழ்களில் தலைப்பிடுவதை ‘மகுடமிடல்’ என்று கூறியவர் – பாரதி.

பாரதி 1905-07 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பை கலந்து பயன்படுத்திய இதழ்கள் – இந்தியா, சக்கரவர்த்தினி.

பாரதி ஆங்கிலத் தலைப்பை பயன்படுத்துவதை கைவிட்டு அதை சாடியும் எழுதிய இதழ் –  சுதேசமித்திரன்.

ஆங்கிலேயர்களின் கெடுபிடியால் பாரதி சென்ற ஊர் பாண்டிச்சேரி.

பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே இறந்தார்.

“கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி”

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்”

“பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்”

“ஆரிய பூமியில் நாரியரும் பர
சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தேமாதரம்!”

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.

பாரதியார் வசன கவிதைகள் வால்ட்விட்மன் கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத் தக்கவை.

“நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்….” பாரதியார்”

“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்”

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா”

“தமிழா! பயப்படாதே! வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்”

“தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்”

செந்தமிழ் நாடெனும் போதிநிலே
நல்லதோர் வீணை செய்தே

தம்பி நெல்லையப்பருக்கு கடிதம் எழுதியவர் – பாரதியார்.

“பெண்ணை அடைத்தவன், கண்ணை அடைத்தான் என்றெழுது”

“ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள்”

“வெட்டி யடிக்குது மின்னல்- கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது”

சிறப்பு பெயர்கள் –
• மகாகவி
• தேசிய கவி
• விடுதலைகவி

“நெஞ்சையள்ளும் சிலம்பு” என்று கூறியவர் –  பாரதியார்.

மாலைக்கால வருணனை பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ளது.

‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்’

‘தமிழ் நாட்டில் தமிழ்ப்புலவர் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க’ வந்து தோன்றியவர் பாரதியார்.

நிலவுப்பூ என்னும் கவிதையை எழுதியவர் – பாரதி.

தமிழ்ப் புதின வகைக்கான பாரதியாரின் பங்களிப்பாக அவரின் சந்திரிகையின் கதை (1920) அமைகிறது. 

குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஹெப்சிபா ஜேசுநாதன்.

தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார்.

’ சிதம்பரனாரின் பிரசங்கத்தையு ம் ,

பாரதியாரின் பாட்டையும் கேட்டால்

செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ – சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.

நிலவையும் வானத்து
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
சுட்டும் விழிச்சுடர்தான்
வெட்டி யடிக்குது மின்னல்

கங்கை நதிப்புறத்துக் கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலை க்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போப்போம்.

“நீதி நெறியின்றி பிறக்குதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்”.

“சுதந்திர பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்”

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”

“சாதிகள் இல்லையடி பாப்பா”

“ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்
ஒரு சொல் கேளிர்
செமமுற வேண்டுமெனில் தெருவெள்ளாம் தமிழ்முழக்கம்
செழிக்க செய்வீர்”

புதுக்கவிதைக்கு தொண்டாற்றியவர் – பாரதியார்.

தமிழகத்தின் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றினார். (பல்கலைக் கழகத்தின்)

‘சுப்புரத்தினம் ஓர் கவி’ எனக் கூறியவர்.

“ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை”

‘நிகரென்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாபவரெல்லாம்’ என்று விடுதலை சமத்துவத்திற்கு முரசு கொட்டியவர்.

பாடல் வரிகள் 

• ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி

• பாருக்குள்ளே நல்ல நாடு நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்

• எல்லோரும் ஓர் குலம், ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர்.

• ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று.

• வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செங்குவோம்.

• காசி நகரப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதருக்கோர் கருவி செய்வோம் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

• குலத் தாழ்ச் உயர்ச்சி சொல்லல் பாவம்.

• மாதிர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொடுத்துள்ளோம்

• வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்.

• பாரதநாடு பார்க்கெலாம் திலகம்

“பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்”.

“பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றி
பழமையிருந்த நிலை – கிளியே
பாமரர் ஏதறிவார்”

காரியம் மிகப்பெரியது எனது திறமை சிறியது
ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன் – பிறருக்கு
ஆதர்சமாக அன்று வழிகாட்டியாக!

– பஞ்சாலி சபதம் (பாரதியார் )

‘கலை மகள்’ பொருள் – பாரதி.