சமய முன்னோடிகள்
6th to 12th (old and new + சிறப்பு தமிழ்) சமய முன்னோடிகள் பற்றிய வரையிலான அனைத்து செய்திகளையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.
1. அப்பர் (திருநாவுக்கரசர்)
பிறந்த ஊர் – திருவாமூர்.
பெற்றோர் – புகழனார், மாதினியார்.
தமக்கையார் – திலகவதியார்.
திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்டபெயர் – மருணீக்கியார் (மருள் நீக்கியார்).
இவருக்குத் தருமசேனர், அப்பர், வாகீசர், அப்பரடிகள் என்னும் வேறு பெயர்களும் உண்டு.
இவரது நெறி தொண்டு நெறி.
சைவ அடியார்களை நாயன்மார்கள் என்று வழங்குவர்.
இவர்கள் 63 -வர்.
சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் பாடல்கள் தேவாரம் எனப் போற்றப்படுகின்றது.
இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர் ஆதலால், இவர் தாண்டகவேந்தர் எனவும் வழங்கப்படுகிறார்.
காலம் – 7 –ஆம் நூற்றாண்டு.
தே + வாரம் – தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்றும்,
தே + ஆரம் – தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம்.
திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் 4, 5, 6 திருமுறைகள்.
திருநாவுக்கரசர் அருளிய ஆறாந்திருமுறையில் (6 – ஆம் ) உள்ளது.
திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் ஆறாந்திருமுறைகள் என வழங்கப்படுகிறது.
சைவத் திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.
அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் – திருஞானசம்பந்தராலும்.
நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் – திருநாவுக்கரசராலும்(அப்பர்).
ஏழாந்திருமுறை – சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப்பட்டவை ஆகும்.
சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைக் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளராகவும் காணப்படுகிறார். இவர் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் திருவாக்கைத் தந்தவரும் அதன்படியே வாழ்ந்தவருமாவார்.
2. திருஞானசம்பந்தர்
தேவாரம் – திருஞானசம்பந்தர்
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு கோவில் திருவிழா.
‘திருமயிலை’ என்று அழைக்கப்படும் சென்னை மாநகரப் பகுதி – மயிலாப்பூர்
திருநெல்வேலியை “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்றுvபோற்றியவர் – திருஞான சம்பந்தர்.
நெல்லையில் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை “திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே” – திருஞான சம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.
‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ எனப் பாடியவர் சம்பந்தர் திருஞான.
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு – தேவாரம்.
சைவ சமயக்குரவர் நால்வர் – சுந்தரர், மாணிக்கவாசகர் அப்பர், திருஞானசம்பந்தர்.
“கேளாய்நங் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக்
கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே”
பன்னிரு திருமுறையில் முதல் 3 திருமுறை – திருஞானசம்பந்தர்.
காலம் – 7 ஆம் நூற்றாண்டு.
ஊர் ____.
பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி.
இவர் பாடல்கள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.
சம்பந்தர் பாடல்கள் மூலம் பரவிக் காணப்படுவது – சமுதாயத்தின் பொருளாதாரம், கலை, பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம்
3. சுந்தரர்
தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் சுந்தரர்.
நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் – சுந்தரர்.
திருமுறைகள் மொத்தம் -12. இதில் ஏழாம் திருமுறையைப் பாடியவர் – சுந்தரர்.
திருத்தொண்டத்தொகை எனும் நூலை எழுதியவர் சுந்தரர்.
இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
“பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிர “ எனப் பாடியவர் – சுந்தரர்.
“கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் காம கோபனைக் கண்ணுத லானைச்”சுந்தார்
4. மாணிக்கவாசகர்
சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர்.
பிறந்தவர் ஊர் – திருவாதவூர்.
மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர்.
பாண்டியனுக்காகக் குதிரை வாங்கச் சென்றபோது, திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
அவ்விறைவனை, மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர்.
இதனால் மாணிக்கவாசகரை, ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்பர்.
திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியன.
இவர் எழுப்பிய கோவில், தற்பொழுது ஆவுடையார்கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது.
காலம் – 9 ஆம் நூற்றாண்டு.
சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.
திருவாசகத்தில் – 51 திருப்பதிங்கள், 658 பாடல்கள், 38 சிவத்தளங்கள்.
திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யுமாதலால், ”திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி. யு. போப்.
திரு என்பது, நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி; சதகம் என்பது, நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு.
திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
திருச்சாழல் தில்லைக் கோவில் படப்பெற்றது – திருவாசகம்.
5. திருமூலர்
மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அதனுடன் அர் என்னும் மரியாதைப் பன்மையும் பெற்றுத் திருமூலர் என ஆயிற்று.
காலம் – 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை – திருமந்திரம்.
வேறுபெயர் – தமிழ் மூவாயிரம்.
பாடல்கள் – 3000.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” – திருமந்திரம்
63 நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் (18) சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் – திருமூலர்.
6. குலசேகர ஆழ்வார்
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழி – பெருமாள் திருமொழி.
ஆழ்வார்கள் பன்னிருவாரால் அருளப்பட்டது நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்னும் அருந்தமிழ்ப் பனுவல்.
ஆழ்வார் என்னுஞ் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.
குலசேகர ஆழ்வார் சேரநாட்டுக் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
மொத்த பாடல்கள் – 105
பெருமாள் திருமொழியை பாடியவர் – குலசேகர ஆழ்வார்.
ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் உரை எழுதியவர் – பெரிய வாச்சான் பிள்ளை.
திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பார் எழுதிய ஈடு என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.
7. ஆண்டாள்
திருமாலைப் போற்றும் பாடல் திருப்பாவை.
பக்தி இலக்கியம் – திருப்பாவை.
“வேதம் அனைத்திற்கும் வித்து” – திருப்பாவை.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
பாவை என்ற சொல் பொம்மை போன்ற படிமத்தைக் குறித்தது.
பின் பாவையைக் குறித்துச் செய்யப்படும் நோன்புக்கு ஆகி, பின்னர் அந்நோன்பைத் தெரிவிக்கும் சிற்றிலக்கியத்துக்காகியது. அதனால் பாவை, இருமடியாகுபெயர்.
திருப்பாவைப் பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையைச் சார்ந்தவை.
ஆண்டாள் பாடியவை –
• திருப்பாவை,
• நாச்சியார் திருமொழி (143 பாடல்கள்)
இரு பாடல்கள் – ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளது.
காலம் – 8 ஆம் நூற்றாண்டு.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராம் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் – ஆண்டாள்.
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர். அவருள் ஆண்டாள் மட்டுமே பெண்.
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி”
8. சீத்தலைச் சாத்தனார்
மணிமேகலை ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார்
காலம் – 2 ஆம் நூற்றாண்டு.
ஊர் – பூம்புகார்.
பெற்றோர் – கோவலன், மாதவி.
மணிமேகலை அமுதசுரபியை பெற்று திரும்பிய இடம் – மணிப்பல்லவத்தீவு.
மணிமேகலை – பெளத்த சமய நூல்.
“சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்”
அமுதசுரபியில் முதலில் உணவிட்டவர் – ஆதிரை.
“கலஞ்செய் கம்மியர் வருகொனாக் கூஇய்”
“புனையா ஓவியம் புறம் போந்தன்ன”
“வான் வழிப்பயணங்கள் பற்றிய குறிப்புகள்” – சிலம்பு, மணிமேகலை.
“பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும்
வளமும் எங்கும் பெருகுவதாகுக” – மணிமேகலை (சீத்தலைச் சாத்தனார்).
“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சிதையும் தந்தமும் வண்ணமும்”
“மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்பு கலவை இருந்தது”
“சாதுவான் வாணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு”
மணிமேகலையை மணம்புரிய விரும்பியவன் – உதயகுமாரன்.
மறுபிறப்பு உணர்ந்தவளாகக் குறிப்பிடுபவள் – மணிமேகலை.
மணிமேகலை தீவதிலகை உதவியால் அமுதசுரபியைப் பெறுகிறாள்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” – புறநானூறு, மணிமேகலை.
வேறு பெயர் – மணிமேகலைத் துறவு.
பெண்மையை முதன்மைப்ப டுத்தும் ‘புரட்சிக் காப்பியம்’ – மணிமேகலை.
காதை – 30, வரி – 4755.
சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கைvவருணனைகளும் நிறைந்தது.
முதல் காதை – விழாவறை காதை.
பௌத்த சமயச் சார்புடையது – மணிமேகலை.
மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் – கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
இயற்பெயர் – சாத்தன்.
பிறந்த ஊர் – சீத்தலை.
கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர்.
தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.
மணிமேகலை, சிலப்பதிகாரம் – அகவற்பா.
நான்காவது காதை – ஆதிபுத்திரன் அடைந்த காதை.
9. எச்.ஏ. கிருடினனார்
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் ல் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் படைக்கப்பட்டது.
இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் – உருவக காப்பியம்.
பருவங்கள் – 5
இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
இரட்சணிய யாத்திரிகம் ஆசிரியர் – எச்.ஏ. கிருட்டிணனார்.
இயற்றிய நூல்கள் – போற்றித் திருவகவல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம்.
இரட்சண்ய மனோகரப்பாடல் – கலி விருத்தம்.
இரட்சணிய மனோகரம் – கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்.
சிறப்பு பெயர் – கிறிஸ்துவக் கம்பர்.
பிறந்த ஊர் – கரையிருப்பு, திருநெல்வேலி.
தந்தை – சங்கரநாராயணர் (பெரும்புலவர்).
இவர் தந்தையிடம் தமிழிலக்கணங்கயும் மாணிக்கவாசகத்தேவரிடம் இலக்கணங்களையும் பிலவணச் சோதிரிடம் வடமொழியையும் கற்றார்.
சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
இயற்றிய நூல்கள் – இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய யாத்திரிகம், போற்றித் திருவகவல்.
இரட்சணிய யாத்திரிகம் (உயிர் தன்னை காக்க வேண்டி).
— இறைவனை நோக்கிச் செல்லும் பயணம். (ஆண்ம ஈடேற்றத்தை விரும்புபவர் என்பதும் பொருந்தும்).
10. உமறுப்புலவர்
சீறாப்புராணத்தினை இயற்றியவர் – உமறுப்புலவர்.
அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் –
• சீதக்காதி
• அபுல்காசிம் மரைக்காயர்.
நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
அவருக்குப்பின், அபுல்காசிம் (பனூ அகுமது மரைக்காயர்) என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது. அஃது சின்னச் சீறா என்று வழங்கப்படுகிறது.
• எட்டயபுரம் அரசவைப் புலவர்.
• எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
• முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
காலம் – 17 ஆம் நூற்றாண்டு.
இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் சீறாப்புராணம்.
சீறா – வாழ்க்கை, புராணம் – வரலாறு.
3 – காண்டங்கள், 92 பாடல்கள், 5027 விருத்தப் பாக்கள்.
விலாதத்துக் காண்டம்,
நுபுவ்வத்துக் காண்டம்,
ஹிஜ்ரத்துக் காண்டம்.