நாட்டுப் புறப் பாடல்கள்
குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாய் பாடும் பாட்டு – தாலாட்டுப் பாடல்.
ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப் பழகிவிடுகிறார். இப்படித் தாளில் எழுதாத பாடல்தான், ‘நாட்டுப்புறப் பாடல்’ எனப்படுகிறது.
எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு நாட்டுப்புறப்பாட்டு. இதேபோல் எழுதப்படாத, எல்லாருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றை எல்லாம் “வாய்மொழி இலக்கியம்” எனக் கூறுவார்கள்.
நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்.
தாலாட்டுப் பாடல்கள்
விளையாட்டுப் பாடல்கள்
தொழில் பாடல்கள்
சடங்குப் பாடல்கள்
கொண்டாட்டப் பாடல்கள்
வழிபாட்டுப் பாடல்கள்
ஒப்பாரிப் பாடல்கள்.
பிறந்த குழந்தைக்குப் பாடுவது – தாலாட்டுப் பாடல்.
கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது விளையாட்டுப் பாடல்.
களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது தொழில் பாடல்.
திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்.
சாமி கும்பிடுவோர் பாடுவது – வழிபாட்டுப் பாடல்.
ஏட்டில் எழுதாத பாடல்தான் _____________ எனப்படுகிறது. நாட்டுப்புறப்பாடல்
வாய்மொழியாகப் பரவும் நாட்டுப்புறப் பாடல்களையும் கதைகளையும் __________ என்று கூறுவர். வாய்மொழி இலக்கியம்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் __________ கூட நாட்டுப்புறப் பாடல்தான். கானாப் பாடல்.
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் (நாட்டுப்புறப் பாடல் ஒன்று).
தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.
நாட்டுப்புற இயல் ஆய்வு நூலின் ஆசிரியர் – சு. சக்திவேல்
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
செந்நெல்லென்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை
– (நாட்டுப்புறப்பாடல்).
நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
வயலும் வாழ்வும் – உழவுத்தொழில் பற்றிய பாடல்.
பஹார் இன மக்களின் புல்லாங்குழவில் வழிந்தோடும் நாட்டுப்புற இசை –பஹாடி.
தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசை வடிவத்தைத் திரையிசையில் தவழவிட்டவர்-இளையராஜா
சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்.
உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் – கடுவெளிச் சித்தர்.
எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்.
வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர் – கமன சித்தர்.
“வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே” என்றனர் – சித்தர்கள்.
63 நாயன்மார்களிலும், 18 சித்தர்களிலும் ஒருவராக இருந்தவர் – திருமூலர்.
மா.பொ.சி தானாக விரும்பி படித்த பாடல்கள் – சித்தர் பாடல்கள்.
சமயங்களில் இருக்கும் தேவையற்ற சடங்குகளை விரும்பாதவர்கள் – சித்தர்கள்.
சித்தர்கள் இயல்பான மனித நேயம் கொண்டவர்கள்.
சித்தர்கள் சித்தத்தை வென்று ‘சித்து’ என்னும் பேரறிவிளை பெற்றவர்கள்.
சித்தர் என்னும் சொல்: நிறைமொழி மாந்தர் என்று தொல்காப்பியம் மற்றும் திருக்குறளிலும், சித்தன் என்று சிலப்பதிகாரம் நாடுகாண் காதையிலும் வழங்கப்படுகிறார்கள்.
அறிவு வேறு, ஞானம் வேறு என்று இந்த உலகிற்கு விளக்கியவர்கள் – சித்தர்கள்.
“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்” என்று கூறும் நூல் – அகத்திய ஞானம்.
சித்தர்கள் என்பதற்கு பொருள் – நிறைவடைந்தவர்கள்.
சித்து – ஆன்மா, மனம், கருத்து
சித்தி – வெற்றி, மெய்யறிதல், காரியம் கைகூடல்.
சித்தர் நோக்கம்-யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ஆதி சித்தர் நூற்றாண்டு) திருமூலர் (கி.பி ஐந்து அல்லது ஆறாம் சித்தர்களில் கலகக்காரர் நூற்றாண்டு) சிவவாக்கியர் (ஒன்பதாம் பதினெண் சித்தர்கள் என்பது அவர்களது எண்ணிக்கையை குறிப்பது அல்ல, அவர்கள் பெற்ற 18 பேறுகளை குறிக்கிறது.
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” என்று பாடியவர்- பாரதியார்.
“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்று பாடியவர் – பட்டினத்தார்
“ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை” என்று பாடியவர் – திருமூலர்.
“தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தனக்குத்தானே தலைவனாய் நிற்கும்” என்று கூறியவர் – திருமூலர்.
“நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்” என்று பாடியவர் – சிவவாக்கியர்.
சித்தர்கள் – சமூகத்தில் நிலவிய பல்வேறு மூடநம்பிக்கைகள் மற்றும் கடும் செயல்களைச் சாடினார்கள்.
சித்தர்களை ‘கிளர்ச்சியாளர்’ என்று கூறுபவர் – சு.கைலாசபதி.
“சாதிபேதம் ஒதுகின்ற தன்மை என்ன தன்மையோ?” என்று பாடியவர் -சிவவாக்கியார்.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்” என்று பாடியவர் – பாம்பாட்டிச் சித்தர்.
“சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?” என்று பாடியவர் – பத்திரகிரியார்.
“ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” – பத்திரகிரியார்.
சித்தர்கள் இரசவாதிகள், சித்தர்கள் தங்களின் யோக சாதனையை உள்ளார்ந்த ஆன்மீக இரசவாதமென்றே கருதினார்கள்.
அணிமா – அணுவைப்போல சிறுத்து நிற்கும் ஆற்றல்.
மகிமா – வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்.
லகிமா – காற்றில் மிதக்கும் ஆற்றல்.
கரிமா – எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்.
பிராகாமியம்-இயற்கைத் தடைகளை கடக்கும் ஆற்றல்.
வசித்வம் உலக படைப்புகளை எல்லாம் அடக்கி ஆளும் ஆற்றல்.
காமாவசாயித்வம் விரும்பியதை முடிக்கும் ஆற்றல்.
ஈசத்துவம் – படைக்கவும், அடக்கவும் கொண்ட ஆற்றல்.
இரசவாதி தாழ்ந்த உலோகத்தை தங்கமாக மாற்றுபவன்.
“நந்தவனத்தில் ஒரு ஆண்டி” என்று பாடியவர் – கடுவெளிச் சித்தர்.
“அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம்” என்பது சித்தர் மொழி.
சித்த மருத்துவம் தோன்றக் காரணம் சித்தர்கள்.
சித்தர் பாடல்கள் எளிமையாக இருப்பினும் மறைபொருள் தருவதாகவும் குழூஉக் குறிகளாகவுமே எழுதப்பட்டுள்ளன.
சித்தர் பாடல்களின் பொருளை யோகம், தந்திரம் மற்றும் மருத்துவம் அறிந்தவர்களால் மட்டுமே அறிய முடியும்.
“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே” என்ற வரிகளைப் பாடியவர் வள்ளலார்.
மருத்துவம், மந்திரம், இரசவாதம், யோகம், ஞானம் போன்ற பல துறைகளில் சித்தர்கள் பாடிய பாடல்கள் தமிழ்மொழியின் அறிவுப் பெட்டகம் என அழைக்கப்படுகிறது.