மனோன்மணியம்
பேராசிரியர் சுந்தரனார் இயற்றிய நாடகம் – மனோன்மணியம்.
சுந்தரனார் பிறந்த ஊர், ஆண்டு திருவிதாங்கூர் ஆலப்புழை 1855.
மனோன்மணியம் என்ற கவிதை நாடகக் காப்பியம் வெளியான ஆண்டு – 1891
மனோன்மணியம் எக்கதையை தழுவி எழுதப்பட்டது – லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி.
நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய் சிறப்பினையுடையதாக விளங்குவது மனோன்மணியம்.
நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது மனோன்மணியம்.
லிட்டன் பிரவு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது மனோன்மணீயம்.
மனோன்மணீயம் வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது.
பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை, கற்பனையெழில், தத்துவச் செறிவு, உலகியல் உண்மை முதலிய கருத்துகள் அமைய எழுதப் பெற்றிருப்பினும் செய்யுள் நடையில் மிடுக்குடனும் நாடகத்தன்மைக்கேற்ற உரையாடற் சிறப்புகளுடனும் மனோன்மணீய நூல் தன்னிகரற்று விளங்குகிறது.
மனோன்மணீயம் அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு, மனோன்மணியம் நாடகம் 5 – அங்கங்களையும், 20 – காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
மனோன்மணீயம் இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
மனோன்மணீயம் நாடகத்தைத் தமிழன்னைக்கு இயற்றியளித்தவர், பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை ஆவார்.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்.
பாண்டிய மன்னன் ஜீவகள் அமைச்சன் குடிலன்
ஜீவகன் மதுரையைவிட்டுத் திருநெல்வேலியில கோட்டையமைத்துத் தங்குகிறான்.
ஜீவகனின் ஒரே மகள் மனோன்மணி.
மனோன்மணி, சேர நாட்டரசன் புருடோத்தமனைக் கனவில் கண்டு காதல் வயப்படுகிறாள்.
மனோன்மணியம் சுந்தரனாரின் தோற்றம் – 19 – ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.
பெ. சுந்தரம்பிள்ளை இவரியற்றிய பிற நூல்கள் – நூல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி என்பன.
சென்னை மாகாண அரசு சுந்தரம்பிள்ளைக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
பெ. சுந்தரம்பிள்ளை நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது.
“நந்தாய்தமர் நங்காதலர்…
நஞ்சேய்பிறர் நந்தாவுரை
நந்தேயமேல் வந்தேநனி”
மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் வீர உணர்வையும் ஊட்டுவது – மனோன்மணீயம்.
தமிழன்ளை பெற்ற நல்ல அணிகலன் – மனோன்மணியம்.
நாடகத்துறைக்கு தமிழ் நூல்கள் இல்லையே என்ற குறையை தீர்க்க வந்த நூல்- மனோன்மணியம்.
இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதில் தோய்ந்து இணையில்லா இன்பம், அமைதி பெற்றவர்கள் தமிழர்கள்.
சுந்தரமுனிவர் சுரங்கம் அமைக்கும் பணியை யாரிடம் அளித்தார் நடராஜனிடம்.
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் – மனோன்மணியம்.
லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதியுள்ள நூல் – மனோன்மணீயம்.
மனோன்மணீயத்தின் பாவகை – ஆசிரியப்பா.
மனோன்மணியத்தின் கிளைக்கதை – சிவகாமியின் சரிதம்.
பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம் – பாரதியார்.
பாரதத்தாய் – பாஞ்சாலி சபதம்.
பாஞ்சாலி சபதம் மற்றொரு பெயர் – திரளபதி.
சுப்பிரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.12.1882 அன்று பிறந்தார்.
இவர்தம் பெற்றோர் சின்னசாமி இலக்குமி அம்மையார் ஆவர். இவரின் துணைவியார் செல்லம்மாள்.
சிறந்த படைப்பாளரான பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களைப் படைத்தளித்தார்.
நாடு, மொழி, இறை, பெண்மை முதலிய பாடுபொருள்களில் எண்ணற்ற பாடல் இயற்றினார்.
ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களையும் எழுதினார்.
இவர் 11.09.1921அன்று மறைந்தார்.
இப்பாடப்பகுதி, பாரதியாரின் முப்பெரும் படைப்புகளுள் ஒன்றாகிய பாஞ்சாலி சபதம் என்னும் காப்பியத்தின் சூழ்ச்சிச்சருக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
அனை- வரும் அறிந்த இதிகாசக் கதையை எளிய சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் ஆகியவற்றுடன் கூடிய பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம்.
இது, வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது.
பாஞ்சாலி சபதம் இரு பாகத்தைக் கொண்டது.
இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என 5 சருக்கத்தையும், 412 பாடலையும் கொண்ட குறுங்காப்பியம்.
பாரதியார் பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாக்கவி என்றெல்லாம் புகழப்பெற்றார்; சுதேசமித்திரன், இந்தியா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்; இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார்.
“தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை” – பாரதிதாசன்.
(பஞ்சாலி சபதம்) இக்குறுங்காப்பியத்தின் முதற்பாகத்திலுள்ள துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கத்தில் நம் பாடப்பகுதி அமைந்துள்ளது.
இக்குறுங்காப்பியத்தில் பாரதத் தாயைப் பாஞ்சாலியாக உருவகப்படுத்தி, இக்கதைமாந்தர் வழி நாட்டுப்பற்றையும், விடுதலை வேட்கையையும், பெண் விடுதலை, சமூக விழிப்புணர்வையும் ஊட்டியுள்ளார் பாரதியார்.
பாஞ்சாலி சபதம் முழுமையும் சிந்து என்னும் பாவகையினைச் சேர்ந்தது. சிந்து ஒரு வகை இசைப்பாட்டு.
கொல்லும் நோய் – குற்றத்தையே எண்ணுகின்ற துரியோதனனின் மதி
மருத்துவன் – திருதராட்டிரன்
சோர்வுறுத்தல் – துரியோதனன் சினங்கொள்ளல்
பாம்பைக் இகழ்கின்றான்………… பாம்புக் கொடியைக் கொண்டவன் துரியோதனன். அவன் தந்தை சொன்ன அறிவுரை கேட்டுப் பாம்புபோல் சீறிக் கூறினான்.
‘கல்லிடை நாருரிப் பாருண்டோ’ எனும் பழமொழியைக் கொண்டு தன் தந்தையைத் திட்டுகிறான். ஆனால் அப்பழமொழிக் கருத்துக்குரியவனாகக் காணப்படுவன் துரியோதனன். இதனை, அவன் கூறும்,
“கொல்லினும் வேறெது செய்யினும் – என்னைக்
நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன்”
“நாடும் குடிகளும் செல்வமும் ஒரு
நாழிகைப் போதினில் சூதினால் -வெல்லக்
கூடுமெனிற் பிறிதெண்ணலேன் – என்றன்
கொள்கை” (இதுவெனக் கூறினான்)
என்பது சகுனி, துரியோதனனுக்குத் தந்த சூழ்ச்சியுரை
குயில் பாட்டு
குயில் பாட்டு – பாரதியார்.
“பாட்டினப்போல் ஆசிரியரிடம் பாரின் மீசை இல்லையடா”
இது ஒரு குறுங்காப்பியம்.
குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் – பாரதிதாசன் (dont confuse)
“ஆரிய பூமியில் நாரியரும் பர சூரியரும் சொலும்
வீரிய வாசகம் வந்தேமாதரம்!” – குயில் பாட்டு (பாரதியார்)
“நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்…. பாரதியார்
பாரதியார் கவிதைகள், பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு முதலிய கவிதைகள் மட்டுமின்றி ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை நூல்களையும் எழுதியவர்- பாரதியார்
இரட்டுற மொழிதல்
கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியாகு மே*
– காளமேகப்புலவர்
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.
காளமேகப்புலவரின் இயற்பெயர – வரதன்.
திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார்.
சமயம் – வைணவம் – சைவம் மாறினார்.,
கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப்புலவர் என அழைக்கப் பெற்றார்.
இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
தனிப்பாடல் (இரட்டுறமொழிதல்)
ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் நாடறியத்
தேடு புகழான் திருமலைரா யன்வரையில்
ஆடுபரி காவிரியா மே.
– காளமேகப் புலவர்.
அழகிய சொக்கநாதப் புலவர்
மரமும் பழைய குடையும்
பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது
மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் தஞ்சம்என்றோர்
வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள்!
கோட்டுமரம் பீற்றல் குடை
– அழகிய சொக்கநாதப் புலவர்
பிறந்த ஊர் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர்.
25 க்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர்.
காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படு இதனை, ‘இரட்டுறமொழிதல்’ எனவும் கூறுவர்.
இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல். இருபொருள்படப் பாடுவது.
Related Links இராசராச சோழனுலா