முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலை இயற்றியவர் – குமரகுருபரர்.
குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்.
குமரகுருபரர் வாழ்ந்த காலம் – 17 ஆம் நூற்றாண்டு.
குமரகுருபரர் இயற்றிய பிற நூல்கள் – திருவாரூர் மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம்
குமரகுருபரர் மடம் நிறுவிய இடம் திருப்பனந்தாள் மற்றும் காசி.
குமரகுருபரர் இறைவனது திருவடியடைந்த இடம் – காசி.
குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்த்தானி மொழிகளில் புலமை பெற்றவர்.
இறைவனையோ, நல்லோரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரை குழந்தையாகக் கருதி பாடப்பட்டது – பிள்ளைத்தமிழ்.
பிள்ளைத்தமிழில் உள்ள பருவங்களின் எண்ணிக்கை –10.
பிள்ளைத்தமிழ் 2 வகைப்படும்.
பிள்ளைத்தமிழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100.
ஆண் பால் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் 7.
பிள்ளைத்தமிழில் உள்ள பொதுவான 7 பருவங்கள் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
பிள்ளைத்தமிழில் உள்ள ஆண்பாலுக்கான மூன்று பருவங்கள் – சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
தளர்நடையிட்டு வரும் குழந்தைகள் சிறப்புகளை எடுத்துக்கூறி, அருகில் வருக வருக என வாய்குளிர, மனங்குளிர அழைக்கும் பாடல்கள் இடம்பெற்றுள்ள பருவம் – வருகைப்பருவம்.
வருகைப்பருவம் –ஆறாவது (குழந்தையின் 13ம் திங்களில் நிகழ்வது
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எந்த இறைவன் மீது பாடப்பட்டது- புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோவில்) உள்ள – முருகப்பெருமான்.
பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலயக்கிய வகையில் ஒன்று.
காற்றில் ஆடுவது போன்று குழந்தை யின் தவை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர்.
எப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும் – செங்கீரைப் பருவம்.
“செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாட”
“பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்”
தாமிரபரணி நதிக்கரையிலுள்ள திருவைகுண்டத்தில் சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாம சுந்தரிக்கும் மகளாகப் குமரகுருபரர் பிறந்தார்.
குமரகுருபரர் பிறந்தது முதல் ஐந்தாண்டு வரையில் பேச்சின்றி இருந்தார். பின்னர்த் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுந்திறம்பெற்றார்.
செங்கீரைப் பருவம் பிள்ளைத்தமிழில் இரண்டாம் பருவமாகும். பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது இது.
குழந்தை பருவம் – செங்கீரை பருவம்.
“விரல் சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ் புலராமே விம்மிப்பொருமி விழுந்தழு தலறியுன் மென்குரல் கம்மாமே”
Related Links காவடிச் சிந்து