“ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி-மலை
யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே”
தாமிரபரணியும், சிற்றாரும் கலக்கிற இடம் -சீவலப்பேரி என்கிற – முக்கூடல்.
நாடக பாங்கில் அமைந்த நூல் – முக்கூடற்பள்ளு.
திருநெல்வேலி மாவட்ட வழக்கை ஆங்காங்கே காட்டும் நூல் – முக்கூடற்பள்ளு.
காளைகளின் பல்வேறு பெயர்கள், விதைகளின் பெயர்கள், மீன்வகைகள் என மருத நில வளம் பற்றி கூறும் நூல் – முக்கூடற்பள்ளு.
பள்ளு வடிவிலான நாடகங்களும் குறவஞ்சி நாடகங்களும் யாருடைய காலத்தில் தோன்றின நாயக்கர்கள் காலத்தில்.
“மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து”
‘பள்ளு’ எவ்வாறு அழைக்கப்படுகிறது? உழத்திப்பாட்டு
பள்ளு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
‘பள்’ என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும். ஆகவே பள்ளு உழவரின் பாட்டுக்குப் பெயராக வந்தது.
திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருறை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல், அங்குள்ள இறைவளாகிய அழகர் மீது பாடப்பட்டது முக்கூடற்பள்ளு ஆகும்.
“சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது
தோன்றிற் புலளென மொழிப் புலனுணர்ந் தோரோ” என்பது தொல்காப்பியம்.
தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய வகை ‘பள்ளு வகை’ இலக்கியத்திற்குப் பொருந்தும் என்பர்.
சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக முக்கூடற்பள்ளு தெரிகிறது.
உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கியம் பள்ளு.
மூத்தபள்ளி, இளையபள்ளி குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல், நாட்டுவளன், குறிகேட்டல், மழை வேண்டி வழிபடல், மழைக்குறியோர்தல், ஆற்றில் நீர் வரவு முதலான பல உறுப்புகளைப் பெற்றது பள்ளு இலக்கியமாகும்.
சிந்தும் விருத்தமும் பரவிவர இது பாடப் பெறும்.
இந்நூலை இயற்றியவர் இன்னார் என அறியப்படவில்லை.
இந்நூலை இற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர்.
இந்நூல் தோன்றிய காலத்தைப் 17-ஆம் நூற்றாண்டு என்பர்.
சதுரகராதியுள் வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் கூறப்படாத சிலவற்றை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
Related Links நந்திக் கலம்பகம் 6th – 12th