தமிழ்விடு தூது
1) தமிழையே தூதுப் பொருளாக கூறும் சிற்றிலக்கியம் – தமிழ் விடு தூது.
2) இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொகுக்கப்படும் செய்யுள் வகை – கண்ணி.
3) கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி – தூது வாயில்கள்.
4) வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களால் அழைக்கப்படுவது – தூது.
5) அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூதுவிடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படுவது- தூது.
6) தமிழ் விடு தூது என்ற நூலில் கூறப்படும் கண்ணிகளின் எண்ணிக்கை – 268.
7) தமிழ் விடு தூது என்ற நூலை முதன்முதலில் தொகுத்தவர் – உ. வே. சா. (1930).
8) தமிழ்விடு தூது பாடலை பாடியவர் பெயர் தெரியவில்லை.
9) போலிப் புலவர்களின் செவியை அறுத்தவர் வில்லிபுத்தூரார்.
10) போலிப் புலவர்களின் தலையை வெட்டியவர் – ஒட்டக்கூத்தர்.
11) தமிழ் விடு தூது பாடப்பெறும் வெண்பா – கலிவெண்பா.
12) “மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்”
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து தமிழ்விடு தூது பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
தமிழ்விடுதூது (Put your browser in Desktop Mode)
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே* – அந்தரமேல்
முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
குற்றம்இலாப் பத்துக் குணம்பெற்றாய் – மற்றொருவர்
ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ
நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் – நாக்குலவும்
ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு
ஆன நவரசம்உண் டாயினாய் – ஏனோர்க்கு
அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ
ஒழியா வனப்புஎட்டு உடையாய்….
(கண்ணிகள் 69 -76)
Related Links முத்தொள்ளாயிரம் 6th – 12th