எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்

Ethugai, Monai, Muran, Iyaibu – எதுகை, மோனை,  இயைபு 

இப்பகுதியில் எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்

தொடை

தொடை என்பது தொடுக்கப்படுவது எனப் பொருள்படும். மலர்களைத் தொடுப்பது போலவே, சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது தொடை எனப்படும்.

பாவின் ஓசையின் பதத்திற்கும் சிறப்புக்கும் இத்தொடை உறுப்பு வேண்டுவதாகும். தொடையற்ற பாட்டு நடையற்று போகும் என்பது பழமொழி.

தொடை ஐந்துவகைப்படும். அவை

  1. மோனைத் தொடை
  2. எதுகைத் தொடை
  3. இயைபுத் தொடை
  4. முரண் தொடை
  5. அளபெடைத் தொடை என்பனவாகும்.

மோனைத் தொடை

செய்யுளில் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும் (மோனை – முதன்மை)

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்நேஞ்சே தன்னைச் சுடும்

இக்குறட்பாவில் முதலடியின் முதலெழுத்தும் (த) இரண்டாமடியின் முதலெழுத்தும் (த) ஒன்றி வந்துள்ளன. இவ்வாறு அடிகளில் முதல் எழுத்து ஒன்றி வருவது அடிமோனையாகும்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குஇத்தொடரில் உள்ள நான்கு சீர்களிலும் முதலெத்து (து) ஒன்றாக வந்துள்ளன. இவ்வாறு சீர்கள்தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர்மோனை எனப்படும். சீர்மோனையை “வழிமோனை” என்றும் வழங்குவர்.

இனமோனை

மோனைக்கு முதலெழுத்தேயனறி, அதற்குரிய இனவெழுத்தும் ஒன்றி வரும்.

இதனை “இனமோனை என்றும், கிளைமோனை” என்றும் வழங்குவர்

இனைமோனையாக வரும் எழுத்துக்கள்

உயிரெழுத்து
1. அ, ஆ, ஐ, ஒளஓரினம்
2. இ, ஈ, எ, ஏஓரினம்
3. உ, ஊ, ஒ, ஓஓரினம்
உயிர்மெய்யெழுத்து
3. ஞ, நஓரினம்
4. ம, வஓரினம்
6. த,சஓரினம்

(மெய்யெழுத்துக்களுள் அவற்றின் வர்க்க எழுத்துகளும் வருமென அறிக)

சில எடுத்துக்காட்டுகள்

  • னத்தொடு வாய்மை மொழியின் – ம, வா
  • யாமெய்யாக் கண்டவற்றுள் ல்லை னைத் தொன்றும் – இ, எ
  • சாதனத்தோடு ச்சர் – சா, த
  • மாநதி ருந்தித் தேடி – மா, வ
  • ந்துவித்தான் ற்றல் கல் விசும்பு ளாார்கோமான் – ஐ, ஆ, அ
  • ளவிய நெஞ்சத்தான் க்கமும் – ஒள, ஆ

1. அடிமோனை

அடிதோறும் வரும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை ஆகும்.

எ.கா.

ள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
ள்ளத்துள் எல்லாம் உளன்

2. இணை மோனை

ஓரடியில் முதலிரு சீர்களிலும் (1, 2) வரும் மோனை இணை மோனை எனப்படும்

எ.கா.

டிந்த டிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

3. பொழிப்பு மோனை

ஓரடியில் முதல்சீரிலும் மூன்றாம் சீரிலும் (1, 3) வரும் மோனை பொழிப்பு மோனை எனப்படும்

எ.கா.

புனையா ஓவியம் போல நிற்றலும்

4. ஒரூஉ மோனை

ஓரடியில் முதல்சீரிலும் நான்காம் சீரிலும் (1, 4) வரும் மோனை ஒரூஉ மோனை எனப்படும்

எ.கா.

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் மெனின்

5. கூழை மோனை

ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் (1, 2, 3) வரும் மோனை கூழை மோனை எனப்படும்

எ.கா.

தானம் வமிரண்டும் ங்கா வியனலுகம்
வானம் வழங்கா தெனின்

6. மேற்கதுவாய் மோனை

ஓரடியில் முதல் சீர், மூன்றாம் சீர், நான்காம் சீர்களில் (1, 3, 4) வரும் மோனை மேற்கதுவாய் மோனை எனப்படும்

எ.கா.

வானின்று உலகம் ழங்கி ருவதலால்
தானமிழ்தம் என்றுணாற் மாற்று

7. கீழ்க்கதுவாய் மோனை

ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர்களில் (1, 2, 4) வரும் மோனை கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்

எ.கா.

ருள்சேர் ருவினையுமத் சேரா றைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

8. முற்று மோனை

ஓரடியிலுள்ள நான்கு சீர்களிலும் (1, 2, 3, 4) வரும் மோனை முற்று மோனை எனப்படும்

எ.கா.

பெற்றோர்பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

எதுகைத் தொடை

தாம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வாம் வழங்கா தெனின்

இக்குறட்பாவில் இரண்டடிகளில் முதற்சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்துள்ளது. முதலெழுத்து அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.

இப்பாடலில் எதுகை அடிதோறும் வந்ததால் இஃது அடியெதுகையாகும் (அளவொத்திருத்தல் = மாத்திரை அளவில் ஒத்திருத்தல்)

இதே போன்று ஒரடியில் சீர்கள் தோறும் எதுகையை பெற்று வருவது சீர் எதுகையாகும்.

எ.கா

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

எதுகைத் தொடையும், அடி எதுகை, இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒருஉ எதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை என எட்டு வகைப்படும்.

1. அடி எதுகை

அடிதோறும் வரும் முதற்சீரின் முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை ஆகும்.

எ.கா.

டிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

2. இணை எதுகை

ஓரடியில் முதலிரு சீர்களிலும் (1, 2) வரும் எதுகை இணை எதுகை எனப்படும்

எ.கா.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பற
செய்யாமை செய்யாமை நன்று

3. பொழிப்பு எதுகை

ஓரடியில் முதல்சீரிலும் மூன்றாம் சீரிலும் (1, 3) வரும் எதுகை பொழிப்பு எதுகை எனப்படும்

எ.கா.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றிலன் தோன்றாமை நன்று.

4. ஒரூஉ எதுகை

ஓரடியில் முதல்சீரிலும் நான்காம் சீரிலும் (1, 4) வரும் எதுகை ஒரூஉ எதுகை எனப்படும்

எ.கா.

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்

5. கூழை எதுகை

ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் (1, 2, 3) வரும் எதுகை கூழை எதுகை எனப்படும்

எ.கா.

ற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்ற்று பற்று விடற்கு

6. மேற்கதுவாய் எதுகை

ஓரடியில் முதல் சீர், மூன்றாம் சீர், நான்காம் சீர்களில் (1, 3, 4) வரும் எதுகை மேற்கதுவாய் எதுகை எனப்படும்

எ.கா.

க்கொண்ட எல்லாம் அப்போம் இப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

7. கீழ்க்கதுவாய் எதுகை

ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர்களில் (1, 2, 4) வரும் எதுகை கீழ்க்கதுவாய் எதுகை எனப்படும்

எ.கா.

ழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

8. முற்று எதுகை

ஓரடியிலுள்ள நான்கு சீர்களிலும் (1, 2, 3, 4) வரும் எதுகை முற்று எதுகை எனப்படும்

எ.கா.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கதித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

முரண் தொடை

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இத்தொடரில் முன், பின் என்னும் முரண்பட்ட சொற்கள் அமைந்துள்ளன. அடிகளிலோ சீர்களிலே சொல்லோ, பொருளோ முரண்பட்டு (மாறுபட்டு) அமைவது முரண் தொடை ஆகும்.

முரண் தொடை அடி முரண், இணை முரண், பொழிப்பு முரண், ஒருஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்றும் முரண் என எட்டு வகைப்படும்.

1. அடி முரண்

அடிதோறும் முதற்சொல் முரண்படத் தொடுப்பது அடி முரண் ஆகும்.

எ.கா.

கெடுப்பதூம்உம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே
எடுப்பதூம் எல்லாம் மழை

2. இணை முரண்

ஓரடியில் முதலிரு சீர்களிலும் (1, 2) முரண் அமைவது இணை முரண் எனப்படும்

எ.கா.

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

3. பொழிப்பு முரண்

ஓரடியில் முதல்சீரிலும் மூன்றாம் சீரிலும் (1, 3) முரண் அமைவது பொழிப்பு முரண் எனப்படும்

எ.கா.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

4. ஒரூஉ முரண்

ஓரடியில் முதல்சீரிலும் நான்காம் சீரிலும் (1, 4) முரண் அமைவது ஒரூஉ முரண் எனப்படும்

எ.கா.

புறந்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

5. கூழை முரண்

ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் (1, 2, 3) முரண் அமைவது கூழை முரண் எனப்படும்

எ.கா.

கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்றவன்

6. மேற்கதுவாய் முரண்

ஓரடியில் முதல் சீர், மூன்றாம் சீர், நான்காம் சீர்களில் (1, 3, 4) முரண் அமைவது மேற்கதுவாய் முரண் எனப்படும்

எ.கா.

வெண்வளைத் தோளும் சேயரிக் கருங்கனும்

7. கீழ்க்கதுவாய் முரண்

ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர்களில் (1, 2, 4) முரண் அமைவது கீழ்க்கதுவாய் முரண் எனப்படும்

எ.கா.

இருக்கை நிலையும் ஏந்தெழில் இயக்கமும்
உயிரினும் ஓம்பப் படும்

8. முற்று முரண்

ஓரடியிலுள்ள நான்கு சீர்களிலும் (1, 2, 3, 4) முரண் அமைவது முற்று முரண் எனப்படும்

எ.கா.

துவர்வாயத் தீஞ்சொலும் உவந்தெனன் முனியாது

இயைபுத் தொடை

செய்யுளின் அடிகளிலும் சீர்களிலும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத் தொடை ஆகும்.

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்டி பேரண்டத் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் வினை யாடும்

மேற்கண்ட பாடலடிகளின் இறுதியில் ஒரே ஒலி தரும் கூடும், மூடும், நாடும், ஆடும் எனும் எனும் சொற்கள் அமைந்துள்ளன இவ்வாறு அமைவது இயைபுத் தொடை ஆகும்.

Leave a Comment