1) பகைவரை அஞ்சச்செய்யும் வீரமும் அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பு எனக் கூறுவது – கலிங்கத்துப்பரணி
2) கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் – செயங்கொண்டார்.
3) சயங்கொண்டார் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.
4) கலிங்கத்துப்பரணி – 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
5) தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி நூல் – கலிங்கத்துப்பரணி.
6) முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தலைவர் – கருணாகரத் தொண்டைமான்.
7) கலிங்கத்துப்பரணி – முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.
8) கலிங்கத்துப்பரணியை “தென்தமிழ்த் தெய்வப்பரணி” என்று புகழ்ந்தவர் – ஒட்டக்கூத்தர்.
9) கலிங்கத்துப்பரணி – கலித்தாழிசையால் பாடப்பட்டது.
10) கலிங்கத்துப்பரணியில் 599 தாழிசைகள் உள்ளது.
11) போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம்
– பரணி.
12) ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பரணி என்பது பெயர்.
எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை
அதுகொல் என அலறா இரிந்தனர்
அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல் இன்றியே
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே
மழைகள் அதிர்வன போல் உடன்றன
வளவன் விடுபடை வேழம் என்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
முதுகு செயும்உப காரம் என்பரே
– செயங்கொண்டார்
12) “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவ னுக்கு வகுப்பது பரணி”– பன்னிரு பாட்டியல்.
13) “தீயின் வாயினீர் பெறினு முண்பதோர் சிந்தை கூரவாய் வெந்து லர்ந்துசெந்”, – கலிங்கத்துப்பரணி.
14) “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” எனக் கூறியவர் – அறிஞர் அண்ணா.
15) பரணி இலக்கியங்களுள் முதலில் தோன்றிய பரணி நூல் –கலிங்கத்துப்பரணி.
16) கலிங்கத்துப்பரணி நூலில்,99 தாழிசைகள் உள்ளன.
17) கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்குகிறார்.
18) “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்- – கலிங்கத்துப்பரணி.
19) “ஆளை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி”
20) பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன்
21) தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றும் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் கூறுவர்.
22) செயங்கொண்டார் முதற் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
23) “வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யெற்றி
வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி”
இத்தலைபில் கலிங்கத்துப்பரணி 6th – 12th பற்றி தொகுத்து கொடுத்துள்ளோம். (Put on your browser in Desktop Mode)