திருக்குற்றாலக்குறவஞ்சி
இப்பகுதியில் திருக்குற்றாலக்குறவஞ்சி 6th to 12th உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.
1) எந்த அருவியில் நீராட மறுப்பதாகக் காந்தி கூறினார்? குற்றாலம்.
2) குற்றாலம் என்பது – அருவி.
3) திருக்குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி.
4) குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் – குற்றாலக் குறவஞ்சி.
5) “கூனல் இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர் குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!” இதில் ‘பிறை முடித்த வேணி’ எனக் குறிப்பிடப்படுபவர் – சிவபெருமான்.
6) குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர்.
6) குற்றாலக் குறவஞ்சி இலக்கிய வகை சார்ந்த நூல். வேறுபெயர் – நாடக இலக்கிய வடிவம், குறத்திப்பாட்டு.
8) இலக்கியங்களில் ‘திரிகூடமலை’ என அழைக்கப்படும் மலை –குற்றாலமலை.
9) குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் – குற்றாலக் குறவஞ்சி.
10) திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி.
10) ‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ எனப் பாடியவர் சம்பந்தர் திருஞான.
11) தண்பொருநை நதி என அழைக்கப்படும் ஆறு தாமிரபரணி.
12) தாமிரபரணியின் கிளையாறுகள் – பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி
13) திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
14) திருநெல்வேலி மாவட்ட பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில்.
15) இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலிளையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது – குற்றாலக் குறவஞ்சி.
16) தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள குற்றாலநாதரை போற்றிப் பாடப்பட்டது- குற்றாலக்குறவஞ்சி.
17) திரிகூடராசப்பக் கவிராயரின் ‘கவிதை கிரீடம்’ என்று போற்றப்படுவது – குற்றாலக் குறவஞ்சி.
18) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது – குற்றாலக் குறவஞ்சி.
19) திரிகூடராசப்பக் கவிராயர் பணிபுரிந்த இடம் – குற்றால நாதர் கோவில்.
20) ‘திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்’ என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் – திரிகூடராசப்பக் கவிராயர்.
21) திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத்தின் இயற்றிய நூல்கள் – தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி.
22) மண்ணால் கட்டிய கோயில்களுக்கு எடுத்துக்காட்டு – தில்லைக் கோவில், குற்றாலநாதர் கோவில்.