தேம்பாவணி
பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்தென்று ஆக
இனிதிலுள் அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கிப் பூவோடு
அழுங்கணீர் பொழிந்தான் மீதே.
வாய்மணி யாகக் கூறும்
வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பில்
தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்
தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ
விரிந்தன கொம்பில் கொய்த
வீயென உள்ளம் வாட
எரிந்தன நுதிநச்சு அம்புண்டு
இரும்புழைப் புண்போல் நோகப்
பிரிந்தன புள்ளின் கானில்
பெரிதழுது இரங்கித் தேம்பச்
சரிந்தன அசும்பில் செல்லும்
தடவிலா தனித்தேன் அந்தோ!
உய்முறை அறியேன்; ஓர்ந்த
உணர்வினொத்து உறுப்பும் இல்லா
மெய்முறை அறியேன்; மெய்தான்
விரும்பிய உணவு தேடச்
செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்; தாய்தன்
கைமுறை அறிந்தேன் தாயும்
கடிந்தெனைத் தனித்துப் போனாள்.
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே.
1) கிறித்துவிற்குமுன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
2) இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
3) இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. – அருளப்பன்*
4) வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார்.
5) கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.
6) இஸ்மத் சன்னியாசி – தூய துறவி
7) வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
8) இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
9) இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.
10) தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
11) கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
12) இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும், 36 படலங்களையும், உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
13) 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
14) இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.
15) இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.
16) வீரமாமுனிவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் :
* தமிழின் முதல் அகராதியான சதுரகராதி,
* தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்),
* சிற்றிலக்கியங்கள்,
* உரைநடை நூல்கள்,
*பரமார்த்தக் குருகதைகள்,
17) இயற்றிய நூல்கள் :
*ஞானோபதேசம், *பரமார்த்த குரு கதை, *திருக்காவலூர்க் *கலம்பகம்,
*தொன்னூல் விளக்கம், *கித்தேரியம்மாள் அம்மானை.
தேம்பாவணி
நகைசெய் தன்மையி னம்பெழீ இத் தாய்துகள்
பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற
முகைசெய் மேனி தழுவிமுத் திட்டலுங்
குகைசெய் யின்பெழக் கோலமிட் டொத்ததே.*
– வீரமாமுனிவர்
18) பிறந்தநாடு – இத்தாலி.
19) அறிந்தமொழிகள் – இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமற்கிருதம்.
20) சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
21) கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் – தேம்பாவணி.
22) வீரமாமுனிவர் 31 ஆண்டுகள் தமிழ் பணி புரிந்தார்
23) தேம்பாவணி பாவகை – கலித்துறை.
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து தேம்பாவணி பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். (Put your Browser in Desktop Mode)