தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்:

முந்தைய பகுதியில் பயின்ற வாக்கியங்களைத் தவிர தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களில் ஏதேனும் ஒன்றை கண்டறியும் விதமாக இப்குதி வினாக்கள் கேட்கப்டுகின்றன. எனவே இவ்வாக்கியங்கள் பற்றிய இலக்கணங்களை அறிதல் அவசியம்

தன் வினை:-

ஒருவன் தானே செய்யும் செயலை உணர்த்துவதைத் தன்வினை என்பர்.

எ.கா.

  • கோதை நன்கு படித்தாள்.
  • மன்னர் நாட்டை ஆண்டார்.
  • பெரியவர் கடவுளை தொழுதார்.

பிற வினை:-

ஒருவர் பிறரைக் கொண்டு தொழிலைச் செய்வித்தலை உணர்த்துவது பிறவினை வாக்கியம் என்பர்.

எ.கா.

  • ஆசிரியர் பாடம் கற்பித்தார்.

தன்வினையைப் பிறவினையாக்குவதற்குச் செய்ய வேண்டுவன:-

1. தன்வினைப் பகுதியிலுள்ள மெல்லின மெய்யை வல்லின மெய்யாக மாற்ற வேண்டும்.

எ.கா.

  • திருந்தினான் – திருத்தினான்.

2. தன்வினைப் பகுதியிலுள்ள வல்லின மெய்யெழுத்தை இரட்டிக்க வேண்டும்.

எ.கா.

  • பழகினான் – பழக்கினான்.

3. தன்வினைப் பகுதியுடன் வி,பி, கு, சு, டு, து, பு, று என்னும் விகுதிகளில் ஒன்றைச் சேர்க்க வேண்டும்.

எ.கா.

  • செய்தான் – செய்வித்தான்.
தன்வினைபிறவினை
அகல்அகற்று
அமைவான்அமர்த்துவான்
ஏறுஏற்று
செய்செய்வி
உண்உண்பி
பெருகுபெருக்கு
வாடுவாட்டு
மடங்குமடக்கு
கடகட்டு
உருகுஉருக்கு
படித்தாள்படிப்பித்தாள்
போனான்போக்கினான்
உருண்டான்உருட்டினான்
நடந்தாள்நடத்தினாள்
எழுந்தான்எழுப்பினான்
பயின்றான்பயிற்றினான்
போபோக்கு
பாய்பாய்ச்சி
உருள்உருட்டு
நடநடத்து
எழுஎழுப்பு
பயில்பயிற்று
உண்உண்ணச்செய்
உறங்குஉறங்கச்செய்
சேர்கிறேன்சேர்க்கிறேன்
சேர்வேன்சேர்ப்பேன்
சேர்ந்தேன்சேர்த்தேன்

3. செய்வினை வாக்கியம்:-

செயலைச் செய்பவரை முதலில் வாக்கியத்தில் அமைப்பது செய்வினை வாக்கியமாகும்

அதாவது எழுவாயோ செயலைச் செய்வதாகச் கூறுவது செய்வினை வாக்கியம் ஆகும்.

எ.கா.

  • முருகன் பாடம் படித்தான்.
  • குமரன் கோவில் கட்டினார்.

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை, என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படுபொருளோடு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபை சேர்க்க வேண்டும். (ஐ-உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்)

4. செயப்பாட்டு வினை:-

செயப்படுபொருளை அதாவது எதனை செய்தாரோ அதனை எழுவாயாகப் பெற்றும்

எழுவாயோடு மூன்றாம் வேற்றுமை உருபான ஆல் பெற்றும் பயனிலையோடு படு என்பதை பெற்றும் வருகின்ற வாக்கியம் செயப்பாட்டு வினை வாக்கியம் ஆகும்.

எ.கா.

  • பாடம் முருகனால் படிக்கப்பட்டது.
  • வீடு தந்தையால் கட்டப்பட்டது.

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபை சேர்க்க வேண்டும். பயனிலையோடு படு, பட்டது எனும் செற்களைச் சேரக்க வேண்டும். (படு – துணைவினை)

எ.கா.

செய்வினைமாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்.
செயப்பாட்டு வினைவகுப்பு மாணவர்களால் தூய்மை செய்ப்பட்டது.
செய்வினைஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்.
செயப்பாட்டு வினைஇலக்கணம், ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.
செய்வினைதச்சன் நாற்காலியைச் செய்தான்.
செயப்பாட்டு வினைநாற்காலி தச்சனால் செய்யப்பட்டது.
செய்வினை நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர்.
செயப்பாட்டு வினை நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது.
செய்வினைமாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்.
செயப்பாட்டு வினைவகுப்பு மாணவர்களால் தூய்மை செய்ப்பட்டது.
செய்வினை எழுவாய், தானே ஒரு செயலை செய்தல்
செயப்பாட்டு வினைஎழுவாய், ஒரு செயலைப் பிறரைக் கொண்டு செய்வித்தல்.

தன்வினை வாக்கியத்தை பிறவினை வாக்கியமாக மாற்றுதல்

தன்வினை – பிறவினை

ஒருவன் தானே செய்யும் செயலை உணர்த்துவதைத் தன்வினை என்பர்.

எ.கா.

  • அமர்ந்தான்

ஒருவர் பிறரைக் கொண்டு தொழிலைச் செய்வித்தலை உணர்த்துவது பிறவினை வாக்கியம் என்பர்.

எ.கா.

  • அமர்த்தினான்

1. தன் வினையிலுள்ள மெல்லின எழுத்துகளை வல்லினமாக மாற்றித் தன் வினைகளைப் பிற வினைகளாக மாற்றாலாம்.

2. தன் வினைப் பகுதியிலுள் வல்லின மெய்கள் இரட்டித்துத் தன் வினைகளைப் பிறவினைகளாக மாற்றலாம்.

3. தன் வினைப் பகுதிகளோடு து விகுதியைச் சேர்த்துத் தன்வினைகளைப் பிறவினைகளாக ஆக்கலாம்

காரண வினை

ஒரு வினையைக் காரண வினையாக மாற்ற வி, பி என்ற விகுதியை சேர்க்க வேண்டும்.

பயின்றான்பயில்
பயில்வித்தான்பயில்வி
செய்தான்செய்
செய்வித்தான்செய்வி
கற்றான்கல்
கற்பித்தான்கற்பி
நடந்தான்நட
நடப்பித்தான்நடப்பி

செய்வினை – செயப்பாட்டு வினை

  • பாரதியார் பாட்டைப் பாடினார் – இது செய்வினை வாக்கியம்
  • பாட்டு பாரதியார் பாடப்பட்டது – இது செயப்பாட்டு வினை வாக்கியம்
  • பாடினார் என்பது செய்வினை

பாடப்பட்டது என்பது செயப்பாட்டு வினை, செய்வினைக்குச் செய்பவன் எழுவாயாக வரும். செயப்படுபொருள் உண்டு. செயப்பாட்டு வினைக்கு செய்பவன் எழுவாயாக வராது. செயப்படு பொருளும் இல்லை.

உடன்பாடு – உடன்பாட்டு வாக்கியம்எதிர்மறை – எதிர்மறை வாக்கியம்
நான் வந்தேன்நான் வந்திலேன்
நான் வருகிறேன்நான் வருகின்றிலேன்
நான் வருவேன்வான் வாரேன்

இன்று வந்திலேன், வருகின்றிலேன், வாரேன் என்பவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்கால நிகழ்ச்சிகளை பற்றி உணர்த்துவதால் அவை எதிர்மறை வினைகளாகும்.

தன்வினைபிறவினை
1. திருக்குறள் கற்றேன்.திருக்குறளை கற்பித்தேன்.
2. கொள்ளையர் கொட்டம் அடிங்கினர்.காவலர், கொள்ளையர் கொட்டத்தை அடிக்கினர்
3. நண்பர்கள் வீட்டில் விருந்து உண்டேன்.நண்பரை விருந்து உண்பித்தேன்.
4. நான் நேற்று வந்தேன்.நான் நேற்று வருவித்தேன்
5. தாய் உணவை உண்டாள்தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.
6. செல்வம் பாடம் கற்றான்.செல்வம் பாடம் கற்பித்தான்.
7. பூங்கோரை பொம்மை செய்தாள்பூங்கோதை பொம்மை செய்வித்தாள்
திருந்தினான்திருக்குறளை கற்பித்தேன்.
உருண்டான்உருட்டினான்
உண்டாள்உண்பித்தாள்
ஆடினார்ஆட்டுவித்தார்
கண்டான்காண்பித்தான்
உழுதார்உழுவித்தார்
செய்வினைசெயப்பாட்டு வினை
1. கரிகாலன் கல்லணையைக் கட்டினான்கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
2. சோழன் சேக்கிழாரை வரவேற்று வணங்கினான்.சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டு வணங்கப்பட்டார்
3. நான் பாடம் படித்தேன்பாடம் என்னால் படிக்கப்பட்டது.
4. திருவள்ளுவர் திருக்குறளை திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.திருக்குறள் இயற்றினார்.
உடன்பாட்டு வாக்கியம்எதிர்மறை வாக்கியம்
1. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும்போட்டியில் எல்லோரும் வெற்றி பெற முடியாது.
2. இந்த வகுப்பில் மாணாக்கர் பலர் நன்கு படிக்கின்றனர்.இந்த வகுப்பில் மாணாக்கர் சிலரே நன்கு படிக்கவில்லை
3. மொழிகள் சிலவே இலக்கிய வளம் உள்ளவை.மொழிகள் பல இலக்கிய வளமற்றவை.
4. பேதை தனக்குத்தானே கேடு செய்து கொள்கிறான்.பேதைக்குக் கேடு செய்ய வேறொருவர் வேண்டியதில்லை
5. திருக்குறளில் எல்லாக் கருத்துக்களும் உளதிருக்குறளில் இல்லா கருத்துகள் இல்லை
செய்தி வாக்கியம்வினா வாக்கியம்
1. தோல்வியடைய வேண்டும் எவரும் விரும்பார்.தோல்வியடைய என்று விரும்புவரும் உளரோ?
2. முன்றால் அனைத்தும் ஆகும்முயன்றால் ஆகாததும் உண்டோ?
3. தமிழின் இனிமையை ஒருவரும் மறுக்கார்.தமிழின் இனிமையை எவரும் மறுப்பரோ?
செய்தி வாக்கியம்கட்டளை வாக்கியம்
1. இளமையில் கற்க வேண்டும்.இளமையில் கல்
2. அறம் செய்ய வேண்டும்அறம் செய்
3. வைகறையில் துயில் எழுதல் வேண்டும்வைகறையில் துயில் எழு
செய்தி வாக்கியம்உணர்ச்சி வாக்கியம்
1. வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறதுஎன்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு.
2. அறிஞர் அண்ணா மறைந்து விட்டார்.அந்தோ! அறிஞர் அண்ணா மறைந்து விட்டாரே!

Leave a Comment