evvagai vakkiyam ena kandezhudhudhal – எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல்
எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் - இப்பகுதியில் வரும் வினாக்கள் ஒரு சொற்றொடர் கொடுத்து அது எவ்வகை வாக்கியம் என கண்டறியுமாறு அமைக்கப்படுகிறது. இதற்கு வாக்கிய வகைகளையும் அதன் இலக்கணங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
வாக்கியம்
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றமைந்து பொருள் நிறைவு பெற்றிருக்கும் சொற்றொடர் வாக்கியம் எனப்படும்
வாக்கிய அமைப்பு:-
பெரும்பாலும் ஒரு வாக்கியத்தில்- எழுவாய் – முதலிலும்
- பயனிலை – இறுதியிலும்
- செய்யப்படுபொருள் – இடையிலும்
எழுவாய்:-
அறுவகைப் பெயர்ச்சொல்களும், வினையாலணையும் பெயரும் எழுவாயாக வரும்.
பயனிலை:-
வினைமுற்று (தெரிநிலை, குறிப்பு) பெயர்ச்சொல், வினாப் பெயர் ஆகியன பயனிலையாக வரும்.
வாக்கிய வகைகள்
1. தனி வாக்கியம்:-
ஒரு எழுவாயோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ வந்து ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது தனிவாக்கியம் ஆகும்.
எழுவாய் செயப்படுபொருள் இன்றியும் வாக்கியம் அமைவது உண்டு.
எ.கா.
- பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தார்
(ஒரு எழுவாய்) (ஒரே பயனிலை)
- சேர, சோழ, பாண்டியரகள் மூவரும் தமிழை வளர்த்தனர்
(மூன்று எழுவாய்) (ஒரே பயனிலை)
எழுவாய் இன்றி
எ.கா.
- வைகறைக் துயிலெழு
(செயப்படுபொருள்) (பயனிலை)
செயப்படுபொருள் இன்றி
பாவை வந்தாள்
எ.கா.
- முகில் வண்ணன் திருக்குறள் கற்றான்.
- அமுதன் எழுதுகிறான்.
- பூ விழியும், சக்தியும் பழனி சென்றனர்.
2. தொடர் வாக்கியம்:-
தனிவாக்கியங்கள் பல தொடரந்து வருவதும் ஒரே எழுவாய் பல பயனிலைகளை பெற்று வருவதும் தொடர் வாக்கியமாகும்.
எ.கா.
- பெண்ணுக்கும் மதிப்பு கொடுங்கள். உரிமை கொடுங்கள். வணக்கம் செலுத்துங்கள்.
3. கலவை வாக்கியம்:-
ஒரு முதன்மை வாக்கியமும் அதனோடு ஒன்றோ பலவோ பொருள் தொடர்புள்ள சார்பு வாக்கியங்களும் சேர்ந்து வருவது கலவை வாக்கியம் எனப்படும்.
எ.கா.
- திருவள்ளுவர், ஒவ்வொருவருக்கும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.எண்வகை விடைகள்
4. செய்தி வாக்கியம்:-
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம் எனப்படும்
எ.கா.
- திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
5. செய்தி வாக்கியம்:-
வினாப்பொருள் தரும் வாக்கியம் வினா வாக்கியம் ஆகும்.
எ.கா.
- தாயின் கடமை என்ன?’
6. விழைவு வாக்கியம்:-
கட்டளை, வேண்டுகோள், வாழ்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம்
எ.கா.
- தமிழ்பாடத்தை முறையாகப் படி (கட்டளை)
- நல்ல கருத்துக்களை நாளும் கேட்க (கட்டளை)
- வையத்துள் வாழ்வாங்கு வாழ்க (வாழ்த்துதல்)
- தீயன ஒழிக (வைதல்)
7. உணர்ச்சி வாக்கியம்:-
உவகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் வாக்கியம்
எ.கா.
- ஆ! தமிழ் மக்கள் அனைவரும் ஏழுத்தறிவு பெற்றனரா? (உவகை)
- அந்தோ! தமிழ் கடைத்தெருக்களில் அறிவுப்புகள் கூட நல்ல தமிழில் இல்லையே! (அவலம்)
- ஐயோ! அப்பா அடிப்பாரா (அச்சம்)
- என்னே! தமிழின் இனிமை! (வியப்பு)
8. உடன்பாட்டு வாக்கியம்:-
செயல் அல்லது தொழில் நிகழ்வதை தெரிவிப்பது உடன்பாட்டு வாக்கியம் எனப்படும்.
எ.கா.
- வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன.
9. எதிர்மறை வாக்கியம்:-
செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது
எ.கா.
- வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தில
10. நேர்கூற்று வாக்கியம்:-
ஒருவர் கூறியதை அவர் கூறிபடியே கூறுவது நேர் கூற்று ஆகும்.
இந்நேர்க்கூற்று தன்னிலை, முன்னிலை இடங்களில் வரும்.
எ.கா.
- “தாய் மகளைப் பார்த்து மணி அடித்து விட்டது. பள்ளிக்கு உடனே செல்” என்றார்.
11. அயர்கூற்று வாக்கியம்:-
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறவது போல கூறவது அயற்கூற்று.
தன்னிலை, முன்னிலை இடங்களில் வரும் எழுவாயைப் படர்க்கையில் அமைத்து கூற வேண்டும்.
எ.கா.
- தாய் மகளிடம், மணி அடித்து விட்டதால் பள்ளிக்கு உடனே செல்லும்படி சொன்னாள்.
(நேர் கூற்றை அயற்கூற்றாக மாற்றும் போது பின்வரும் சொற்கள் மாறுதல் அடையும்)
நேர்க்கூற்று | அயற்கூற்று |
இது, இவை | அது, அவை |
இன்று | அன்று |
இப்பொழுது | அப்பொழுது |
இதனால் | அதனால் |
நாளை | மறுநாள் |
நேற்று | முன்னாள் |
நான், நாம், நாங்கள் | தான், தாம், தாங்கள் |
நீ | அவன், அவள் |
நீங்கள் | அவர்கள் |
நேர்கூற்றை அயற்கூற்றாக்கல்
- அழகுச்சிலை தான் மறுநாள் வருவதாகக் கூறினாள்.
- ஆசிரியர் அன்று வந்து காணுமாறு கூறியதால் தான் செல்கிறேன். நீயும் வா என்று இளங்கோ கதிரவனிடம் கூறியுள்ளான்.
- அவன் தன் மொழியை உயர்த்தினால் தான் உன் நாடு உயரும். அறிவும் உயரும் என்பதாக பாரதிதாசன் கூறியுள்ளார்.
- மேலாளர் மறுநாள் காலையில் வா. உனக்குத் தரவேண்டிய தொகைத் தருவதாக கூறியுள்ளார்.
- ஆசிரியர் மாணவரிடம் உன்னிடம் திறமையும் ஆற்றலும் இருக்கிறது. உழைத்தால் முன்னேறுவாய் என்பதாக கூறியுள்ளார்.
நேர்கூற்றை அயற்கூற்றாக்கல்
- போட்டியில் நான் முதல் பரிசு பெற்றுள்ளேன் என ஆசிரியர் கூறினார்.
- தன் தாயராரிடம் அன்பரசி மல்லிகை மலர் வாங்கி வரக் கூறினாள்.
Related Links விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுதல்