நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் (Put in Desktop mode)
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
1) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பொய்கையாழ்வாரால் பாடப்பட்டதாகும்.
புதுமை விளக்கு
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று
– பொய்கை ஆழ்வார்
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே.
– குலசேகர ஆழ்வார்
2) பொய்கையாழ்வார் பிறந்த ஊர் – திருவெஃகா
3) பொய்கையாழ்வார் ஒலிக்கின்ற கடலை நெய்யோடு ஒப்பிடுகிறார்.
4) வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராக கொண்டவன் – திருமால்.
5) நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் – பூதத்தாழ்வார்.
6) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் சென்னை அருகே மாமல்லபுரம்
7) திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு(12) ஆழ்வார்கள்.
8) நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனி.
9) பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் யார்? பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
10) ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு – நாலாயிர திவ்வியப்பிரபந்தம்.
11) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் சிறப்புபெயர் – திராவிடவேதம்
12) குழசேகர ஆழ்வார் ஊர் – திருவஞ்சைக்கலம்.
13) குலசேகராழ்வார் அவர்களின் காலம் 8 நூற்றாண்டு.
14) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ யாரிடம் யார் கூறியது? இறைவனிடம் குலசேகராழ்வார்.
15) குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஒன்று.
16) இதில் 105 பாசுரங்கள் உள்ளன.
17) குழசேகர ஆவார் வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவர்.
18) தமிழில் – பெருமாள் திருமொழி.
வடமொழியில் – முகுந்தமாலை.
19) பெருமாள் திருமொழி ஆனது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழி? 5ஆம் திருமொழி.
20) பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.
21) நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
22) தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்று – வைணவம்.
23) வைணவம் சமயத்தின் கடவுள் – திருமால்.
24) குழசேகர பாடல் முதலாயிரம் தொப்பில் உள்ளது.