பெரியபுராணம் 6th – 12th

Note

(Desktop mode –இல் போட்டு படிக்கவும் (பாடல் வரிகள் மாறாது) >Chrome >(desktop site= on click) சின்னதாக இருந்தால் zoom–செய்தோ அல்லது எழுதி வைத்து கொண்டு படிக்கவும்.

பெரியபுராணம்

1) ‘இயற்கை அன்பு’ –  பெரியபுராணம்.

இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள்
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் – மணிமேகலை சிலப்பதிகாரம்,
இயற்கைத் தவம் – சீவக சிந்தாமணி
இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்

2) “சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி”

3) பெரிய புராணத்தை அருளியவர் – சேக்கிழார்.

4) பெரியபுராணத்தில் உள்ள தனியடியார்கள் எண்ணிக்கை – 63

5) பெரியபுராணத்தில் தொகையடியார்கள் எத்தனை பேர்? 9

6) பெரியபுராணத்தில் உள்ள சிவனடியார் எண்ணிக்கை – 72

7) பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் – திருத்தொண்டர் புராணம்.

8) பெரியபுராணம் பெயர்க்காரணம் 72 சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரியபுராணம் என அழைக்கப்படுகிறது.

9) தில்லை நடராஜப்பெருமான் ‘உலகெலாம்’ என்ற அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்ற நூல் பெரியபுராணம்.

10) “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்றவர் திரு. வி. கலியாணசுந்தரனார்.

11) அப்பூதியடிகளின் மைந்தன் மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டப் பெற்றது கண்டு அப்பரடிகள் ‘ஒன்று கொலாம்’ என்ற தேவாரப்பதிகம் இசைத்து திங்களுரிலே உய்யக் கொண்டது பெரிய புராண வரலாறு

12) பெரியபுராணம், 2 காண்டம், 13 சருக்கங்கள், 4286 பாடல்கள்.

13) திருநெல்வேலியை ‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று போற்றியவர் – சேக்கிழார்.

14) சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக 63 பேரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது – திருத்தொண்டர் புராணம்.

15) சேக்கிழாரை “பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று பாராட்டியவர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

16) சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தவர் – சேக்கிழார் (12ஆம் நூற்றாண்டு).

17) பெரியபுராணத்தை இயற்றியவர் – சேக்கிழார்.

18) சேக்கிழாரின் இயற்பெயர் – அருண் மொழித் தேவர்.

19) சேக்கிழார் பிறந்த ஊர் – குன்றத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்).

20) சேக்கிழார் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்? அநபாயச் சோழன்.

21) உத்தம சோழப் பல்லவர் என்ற பட்டம் பெற்றவர் – சேக்கிழார்

22) ‘தெய்வச் சேக்கிழார்’ என்றும் ‘தொண்டர்சீர் பரவுவார்’ என்றும் போற்றப்படுபவர் -சேக்கிழார்.

23) சேக்கிழாரின் காலம் கி.பி – 12  நூற்றாண்டு.

24) பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் – திருத்தொண்டர் புராணம்.

பெரியபுராணம் பாடல் வரிகள்

மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்.

மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்.

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்

அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்

அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்

சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
போல்வலங் கொண்டு சூழும் காட்சியின் மிக்க தன்றே

நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளிசா லந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்

திருமறையோர் அதுமொழியத் திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார் பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத சிறுமையேன் யான்என்றார்.

நல்லதாய் தந்தைஏவ நானிது செயப்பெற் றேனென்று
ஒல்லையில் விரைந்து தோட்டத் துள்புக்குப் பெரியவாழை
மல்லலம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள ராவொன்று
அல்லலுற் றழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற் றன்றே.

பெரியபுராணம்