மணிமேகலை
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து மணிமேகலை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
1) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம், மணிமேகலை.
2) பசிப்பிணி போக்கிய பாவை யார்? மணிமேகலை.
3) மணிமேகலை எந்த ஊரைச் சேர்ந்தவள்? பூம்புகார்.
4) மணிமேகலையை தீவிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் மணிமேகலா தெய்வம்.
5) மணிமேகலையின் பெற்றோர் – கோவலன், மாதவி.
6) மணிமேகலை அமுதசுரபியை பெற்ற இடம் – மணிபல்லவத் தீவு.
7) மணிமேகலை அமுதசுரபியை பெற்று திரும்பிய இடம் – பூம்புகார்.
8)அமுதசுரபியில் முதலில் உணவிட்டவர் – ஆதிரை.
9) பூம்புகாரில் சிறைக்கோட்டம் சென்று மணிமேகலை உணவளித்தால்.
10) மணிமேகலையை மணிமேகலா தெய்வம் அழைத்து சென்ற தீவு – மணிபல்லவத் தீவு.
11) மணிமேகலையின் ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார்.
12) மணிமேகலை பௌத்த சமய நூல்.
13) மணிமேகலை எந்த நூலின் தொடர்ச்சி? சிலப்பதிகாரம்.
14) “சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்” கூற்று? மணிமேகலை.
15) “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்” என்று கம்மியரை பற்றிக் கூறும் நூல் – மணிமேகலை.
15) “புனையா ஓவியம் புறம் போந்தன்ன”
16) வான் வழிப்பயணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல்கள் – சிலம்பு, மணிமேகலை.
17) தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்வது – சிலப்பதிகாரம், மணிமேகலை.
18) மணிமேகலை நூலின் வேறு பெயர் – மணிமேகலைத் துறவு.
19) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் – மணிமேகலை.
20) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் – மணிமேகலை.
21) சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்த காப்பியம் – மணிமேகலை.
22) மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை –30, வரி – 4755.
23) மணிமேகலையின் முதல் காதை – விழாவறை காதை.
24) மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்
25) ‘பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்’
26) “கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
மண்ணும் சிதையும் தந்தமும் வண்ணமும்”
27) மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது.
28) “சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு”
29) மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்.
30) மணிமேகலையை இயற்றியவர் கூலவாணிகன் –சீத்தலை சாத்தனார்.
31) சீத்தலை சாத்தனாரின் இயற்பெயர் – சாத்தன்
32) சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் – சீத்தலை. இளங்கோவடிகளும் இவரும் சமக் கலாத்தவர்.
33) மணிமேகலையை மணம்புரிய விரும்பியவன் – உதயகுமாரன்.
34) மறுபிறப்பு உணர்ந்தவளாகக் குறிப்பிடப்படுபவள் – மணிமேகலை.
35) மணிமேகலை தீவதிலகை உதவியால் அமுசுரபியைப் பெறுகிறாள்.
36) அமுதசுரபி மணிமேகலைக்கு முன்பு ஆபுத்திரனிடம் இருந்தது.
37) மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதனால் இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும்.
38) முப்பது காதைகளுள், இருபத்து நான்காவது காதை – ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
39) மணிமேகலை தப்பிச்சென்ற இடம் – மணிபல்லவத்தீவு.
40) . “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று கூறும் நூல்கள் – புறநானூறு, மணிமேகலை.
41) பெருஞ்சித்திரனார் மாண்புகழாக சிறப்பிக்கும் நூல் திருக்குறள்.
பெருஞ்சித்திரனார் கலைவடிவாக சிறப்பிக்கும் நூல் மணிமேகலை.
பெருஞ்சித்திரனார் என்றும் நிலைத்து நிற்பதாக சிறப்பிக்கும் நூல் சிலப்பதிகாரம்.
42) ‘அடிகள் நீதர அருளுக’ என்றவர்-சீத்தலைச்சாத்தனார்.
43) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் – அகவற்பா.
44) மணிமேகலையின் தோழி – சுதமதி.
45) சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
46) பட்டிமண்டபம் என்பது ‘சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடம்’ என்று சுட்டும் நூல் மணிமேகலை.
50) “ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்று கூறும் நூல் – மணிமேகலை.
51) “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்”
52) “புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பி னுயர்ந்தோ யென்கோ” – சீத்தலைச் சாத்தனார்.
53) மணிமேகலை புத்த சமயச் காப்பியமாகும்.
நல்வினை தீவினை என்றுஇரு வகையால்
சொல்லப் பட்ட கருவில் சார்தலும்
கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்.
54) தண்டமிழ்ச் சாத்தன், சாத்தன், நன்னூற் புலவன் என்று இளங்கோவடிகள் சீத்தலைச்சாதனாரைப் பாராட்டியுள்ளார்.
Related Links சிலபதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள்