பரிபாடல்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பரிபாடல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
1) ‘இசைப்பாடல்’ என்று அழைக்கப்படும் நூல் – பரிபாடல்.
2) பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் – பரிபாடல்.
3) ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர்” என்ற செய்தி இடம் பெற்றுள்ள நூல் – பரிபாடல்.
4) “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டி அறிவுறுத்தவும்”
5) “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்”
6) தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைக் கூறும் நூல்கள் பரிபாடல் மற்றும் குறுந்தொகை.
7) ‘பூமி’ என்ற செய்தியை கூறும் எட்டுத்தொகை நூல் – பரிபாடல்
8) எட்டுத்தொகையில் ‘அகம் புறம்’ சார்ந்த நூல் – பரிபாடல்.
9) சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் – பரிபாடல்.
10) பரிபாடல் எவ்வாறு புகழப்படுகிறது? ஓங்குபரிபாடல் என்று.
11) பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என உரையாசிரியர்கள் கூறுகின்றனர் – 111.
12) பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை –24
13) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தமிழ்வேலி என்று கூறும் நூல் பரிபாடல்.
14) நோதிறம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் காணப்படுவது – பரிபாடல்
Related Links பதிற்றுப்பத்து 6th – 12th