பதிற்றுப்பத்து
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பதிற்றுப்பத்து பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
1) போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் – பதிற்றுப்பத்து.
2) “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
3) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் – பதிற்றுபத்து.
4) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர் – பரஞ்சோதி முனிவர்.
5) அதற்கு பல்லவர்கள் கல்வெட்டுகளையும்; பாண்டியர்கள் செப்பேடுகளையும் அறிமுகம் செய்தனர் (பதிற்றுப்பத்து பாடல்கள் இதற்கு முன்னோடி)
6) மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடியாய் திகழும் சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து.
7) பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர அரசர்களின் கொடையை பற்றின பதிவாகவே உள்ளது.
8) ‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’
9) எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் – பதிற்றுப்பத்து, புறநானூறு.
10) பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகள் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர்- பரணர்.
11) ‘ஒரு பண்டைய நிலத்தில் இருந்து சாயல்கள் மற்றும் இணக்கங்கள்’.
12) பதிற்றுப்பத்து எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று.
13) சேர மன்னர்கள் பத்து பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் நூல் பதிற்றுப்பத்து.
14) பதிற்றுப்பத்து பாடலின் திணை – பாடாண் திணை.
15) பதிற்றுப்பத்தில் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
16) பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் இடம் பெற்றிருக்கும்.
17) ‘நிரைய வெள்ளம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பதிற்றுப்பத்துப் பாடலின் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்சேரலாதன், ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார்.
18) ‘நிறைய வெள்ளம்’ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் – இரண்டாம் பத்தில் உள்ளது.
19) “மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு”
20) சேரலாதனின் நாடு காத்தச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாக அமைந்தது – பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து.
21) ‘மருமக்கள் தாய் முறை’ பற்றி குறிப்பிடும் நூல் – பதிற்றுப்பத்து.
22) இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தி இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
23) பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை கண்டுபிடித்தவர் – ஐராவதம் மகாதேவன்
24) புகளூர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 7ஆவது 8ஆவது 9ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார்.
25) சேர மன்னர்களை பற்றி கூறும் நூல் – பதிற்றுப்பத்து.
Related Links ஐங்குறுநூறு 6th – 12th