ஐங்குறுநூறு 6th – 12th

ஐங்குறுநூறு

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஐங்குறுநூறு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

“கொற்கைக் கோமாள் கொற்கையம் பெருந்துறை”

ஐந்து நிலத்திற்கும் பாடல்கள் இயற்றியுள்ள சங்க இலக்கியம் ஐங்குறுநூறு

ஐங்குறு நூலின் அடி 3 – 6

குறிஞ்சித்திணை பாடியவர் – கபிலர்
முல்லைத்திணை பாடியவர் – பேயனார்
மருதத்திணை பாடியவர் – ஓரம்போகியார்
நெய்தல் திணை பாடியவர் – அம்மூவனார்
பாலைத்திணை பாடியவர் – ஓதலாந்தையார்

ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

ஐங்குறுநூற்றை தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.

ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் சேரலிரும்பொறை யானைக்கட்சேய் மாந்தரஞ்.

ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு

‘சிலம்பு கழி’ பற்றிய செய்தி ஐங்குறுநூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் கழிக”

இளமகவு நிலை குடும்பங்களைக் பற்றிக் குறிப்பிடும் நூல் – ஐங்குறுநூறு.

“மறியிடைப் படுத்த மாள்பிணை போல்”

காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம், விரைந்தே.
– பேயனார்

Ingurunooru tnpsc

Leave a Comment