நற்றிணை 6th – 12th

நற்றிணை

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நற்றிணை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

நன்மை + திணை / நல் + திணை = நற்றிணை

எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து போற்றப்படும் நூல் நற்றிணை.

நற்றிணை பாடல்களின் எண்ணிக்கை – 400

நற்றிணை பாடினோர் –275 பேர்

‘நல்’, ‘நல்ல திணை’ என்ற அடைமொழி கொடுத்துப் போற்றப்படும் நூல் நற்றிணை.

நற்றிணையை தொகுப்பித்தவன் – பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி

நற்றிணையின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்

நற்றிணையில் 110வது பாடலை மட்டும் பாடியவர் போதனார் (சங்ககாலப் புலவர்)

110 வது பாடல் – ‘வளமையும் வறுமையும்’ வாழ்க்கையென்னும் நாணயத்தின் இருபக்கங்களாகும்.

நற்றிணை எந்தத் திணை வகை நூல்?- அகத்திணை நூல்

நற்றிணை நற்றிணை பாடல்களில் உள்ள அடிவரையறை – 9-12

“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்ற (அறுவை மருத்துவம் பற்றி) வரிகள் இடம்பெற்ற நூல் நற்றிணை.

சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியை கூறும் நூல் – நற்றிணை

“தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி உமணர் போகலும்”

“முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை”

. ‘நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு’ எனக் கூறும் நூல் – நற்றிணை

“அல்லில் ஆயினும், விருந்து வரின்”

“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம்
அன்று தன் செய்வினைப் பயனே” – மிளைகிழான் நல்வேட்டனார் (நற்றிணை)

‘அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்’ எனும் பாடல் நற்றிணையில் எத்தனையாவது பாடல்? 210

மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழாள் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.

மிளைகிழான் நல்வேட்டனார் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.

மிளைகிழான் நல்வேட்டனார் நற்றிணையில் நான்கு பாடல்களும் , குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் சங்ககாலத்தவர்.

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே.

‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைப் குறிப்பிடுவது நற்றிணை

‘பொய் மொழிக் கொடுஞ்சொல்’ என்று குறிப்பிடுவது – நற்றிணை

அகப்பொருள் இலக்கியங்கள்- நற்றிணை, குறுந்தொகை,

“நீர்படு பசுங்கலம்”

“புணரின் புணராது பொருளே பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே”

நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி

ஔவையார் பாடியதாக நற்றிணையில் 7.

“முருகு உறழ் முன்பொடு”…

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே
– போதானார்

Natrinai

Leave a Comment