பெயர்ச் சொல்லின் வகை அறிதல்
கொடுக்கப்பட்டிருக்கும் சொல் எத்தகைய பெயர்ச்சொல் என கண்டறிதலே இப்பகுதி வினாக்களாக இருக்கின்றன. இவ்வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கும் வகையில் பெயர்ச் சொல்லின் அனைத்து வகைகளையும் அதற்கான உதாரணங்களைு் தேர்வு நோக்கம் தொகுத்துள்ளோம். (பெயர்ச் சொல்லின் வகை அறிதல்)
1. பண்புப்பெயர்
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும். அது நிறம், சுவை, வடிவம், அளவு என்னும் நான்கின் அடிப்படையில் அமையும்.
வெண்மை – நிறப்பண்புபெயர்.
இனிப்புச்சுவை – சுவைப்பண்புப்பெயர்
வட்டவடிவம் – வடிவப்பண்புப்பெயர்
பண்புப்பெயர் | விகுதிகள் |
நன்மை | மை |
தொல்லை | ஐ |
மாட்சி | சி |
மாண்பு | பு |
மழவு | உ |
நன்கு | கு |
நன்றி | றி |
நன்று | று |
நலம் | அம் |
நன்னர் | அர் (அ) நர் |
திட்பம் | பம் |
(மை – விகுதி பெரும்பான்மையாக வரும்) |
எ.கா.
செம்மைகோல், மூவேந்தர், மும்மாரி, சதுரவயல், கருங்கல், வட்டக்கிணறு, கோபம், கசப்பு, துவப்பு, முக்கோணம், சதுரம், குட்டை, செவ்வகம், உயரம், உருண்டை, செம்மை, வட்டநிலா, நீர்நகர், முக்குணம்
2. தொழிற்பெயர்
மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான்
இத்தொடரில் உள்ள பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், தொழிற்பெயர்களை அறிவோம்.
- மாதவி, கோவலன் – இவை பெயர்ச்சொற்கள்
- கண்டு, மகிழந்தான் – இவை வினைச்சொற்கள்
- ஆடல் – என்பது தொழிற்பெயர்
அறுவகைப் பெயர்ச்சொற்களுள் தொழில்பெயரும் ஒன்று என்பதனை முன் வகுப்பிலேயே கற்றிருக்கிறீர்கள். ஆடல் – என்பது ஆடுதல் என்னும் தொழிலைக் குறிப்பதனால், அது தொழில் பெயர் எனப்பட்டது.
ஆடு + அல் = ஆடல், அல் – என்பது தொழிற்பெயர் விகுதி இவ்வாறு தொழிற்பெயரைக் குறிக்க வரும் விகுதிகள் தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.
வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெராகும்.
பெறுதல் | பெறு + தல் |
ஆட்டம் | ஆடு + ஆம் |
போக்கு | போ + கு |
பறவை | பற + வை |
தொற்றரவு | தோற்ற + அரவு |
பாய்த்து | பாய் + து |
கோடல் | கோடு + இரங |
வாழ்க்கை | வாழ் + கை |
புளிப்பு | புளி + பு |
வரவு | வர + உ |
கோட்பாடு | கோள் + பாடு |
கேளானை | கேள் + ஆனை |
தொழிற்பெயரை முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என வகைப்படுத்துவர்.
1. முதனிலைத் தொழிற்பெயர்
தொழிற் பெயர் விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து, தொழிலை உணர்த்துவதற்கு முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா. கபிலனுக்கு அடி விழுந்தது
இத்தொடரில் அடி, என்பது விகுதி பெறாமல், பகுதியாய் நின்று தொழிலை உணர்நத்துகிறது.
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
தொழிற் பெயரின் முதனிலையாக பகுதி திரிந்து வருவது முதனிலைத் திரிந்ததொழிற்பெயர் எனப்படும்.
எ.கா. அறிவறிந்த மக்கட் பேறு. அவனுக்கு என்ன கேடு?
இங்கு ‘பெறு, கெடு’ என்னும் முதனிலைகள் ‘பேறு, கேடு’ எனத் திரிந்து ‘பெறுதல், கெடுதல் என்னும் பொருளை உணர்த்துகின்றன.
3. வினையாலணையும் பெயர்
- முருகன் பரிசு பெற்றான்.
- பரிசு பெற்றானைப் பாராட்டினர்.
இவ்விரு தொடர்களிலும், பெற்றான் என்னும் வினைச்சொல் வந்துள்ளது.
முதல் தொடரிலுள்ள பெற்றான் என்பது, முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள ‘பெற்றானை’ என்பது முருகனை குறிக்கும் பெயராக வந்துள்ளது.
இவ்வாறு வினைமுற்று, வினையைக் குறிக்காமல் வினை செய்தவவரைக் குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும். இது வினைக்குரிய காலம் காட்டும் ; பெர்க்குரிய வேற்றுமை உருபுகளையும் பெற்றுவரும்
பெற்றான் – இறந்தகாலம்
பெறுகின்றானை – நிகழ்காலம்
பெறுவானை – எதிர்காலம்
பெற்றான் + ஐ என, இரண்டாம் வேற்றுமை உருபான ஐ ஏற்று வந்துள்ளமை காண்க.
தொழில்பெயர்க்கும், வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள்
தொழில்பெயர் | வினையாலணையும் பெயர் |
தொழிலுக்குப் பெயராய் வரும் | தொழில் செய்பவருக்குப் பெயராய் வரும் |
படர்க்கை இடத்தில் வரும் | மூவிடங்களில் வரும் |
காலங்காட்டாது | முக்காலத்தையும் காட்டும் |
4. ஆகுபெயர்
- இந்தியா மிகப்பெரிய நாடு
- மட்டைப்பந்தில் இந்தியா வென்றது
இவ்விரு தொடர்களிலும் அமைந்துள்ள இந்தியா என்னும் சொல்லை உற்று நோக்குங்கள். முதல் தொடரில் உள்ள இந்தியா இடத்தைக் குறிக்கின்றது. இரண்டாம் தொடரில் உள்ள இந்தியா, இந்திய வீரர்களை குறிக்கின்றது. இவ்வாறு ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
ஆகு பெயர் பதினாறு வகைப்படும்
1. பொருளாகுபெயர் (முதலாகு பெயர்)
ஒரு முழுப்பொருளின் பெயர், அதனைச் சுட்டாது அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.
சான்று :- முல்லையைத் தொடுத்தாள்
முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.
2. இடவாகு பெயர்
சான்று :- வகுப்பறை சிரித்தது
வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.
3. காலவாகு பெயர்
காலப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.
சான்று :- கார் அறுத்தான்
கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.
4. சினையாகு பெயர்
சினைப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.
சான்று :- மருக்கொழுந்து நட்டான்
மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.
5. பண்பாகுபெயர்
பண்புப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.
சான்று :- மஞ்சள் பூசினாள்
மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.
6. தொழிலாகு பெயர்
தொழில்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
சான்று :- வற்றல் தின்றான்
வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.
7. எண்ணலளவை ஆகுபெயர்
எண்ணின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.
சான்று :- ஒன்று பெற்றால் ஒளிமயம்
ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.
8. எடுத்தலளவை ஆகுபெயர்
அளவை குறிக்காமல் அவ்வளவுடைய பொருளுக்கு ஆகி வருவது
சான்று :-இரண்டு கிலோ கொடு
– நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
9. முகத்தலளவை ஆகுபெயர் –
முகத்தல் அளவை குறிக்காமல் அவ்வளவுடைய பொருளுக்கு ஆகி வருவது
சான்று :- அரை லிட்டர் வாங்கு
முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
10. நீட்டலளவை ஆகுபெயர்
நீட்டல் அளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.
சான்று :- ஐந்து மீட்டர் வெட்டினான்
நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
11. சொல்லாகு பெயர் ஆகுபெயர்
சான்று :- வள்ளுவர் சொல் வாழ்க்கைக்கு இனிது.
இத்தொடரில் வள்ளுவர் சொல் என்பது, சொல்லைக் குறிக்காது பொருளுக்குப் பெயராகி வந்தால், இது சொல்லாகி பெயர்
12. தானியாகு பெயர் ஆகுபெயர்
ஓர் இடத்தில் உள்ள பொருளின் பெயர் (தானி) அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானித்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர்.
சான்று :- பாலை இறக்கு
பாலின் பெயர் பாலைக் குறிக்காமல் பாத்திரத்தை குறிக்கிறது.
13. கருவியாகு பெயர்
கருவியின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.
சான்று :- வானாெலி கேட்டு மகிழ்ந்தனர்
வானாெலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது
14. காரியவாகு பெயர்
சான்று :- நான் சமையல் கற்றேன்.
இங்கு சமையல் என்னும் காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் (கருவிக்கு) பெயராகி வருவது காரியவாகு பெயர்
காரியவாகு பெயர் : காரியப்பொருள் கருவிப்பொருள் கருவிப்பொருளுக்கு ஆகி வருவது (எ-டு) நன்னூல் கற்றேன்.
15. கருத்தாவாகு பெயர்
சான்று :- திருவள்ளுவரைப் படித்துப்பார்.
இத்தொடரில் திருவள்ளுவர் என்பது, அவரால் இயற்றப்பெற்ற நூலுக்கு ஆகி வந்தால், கருத்தாவாகு பெயராயிற்று
16. உவமையாகு பெயர்
ஒருவரைப் பாரத்து, நாரதார் வருகிறார் எனல், இத்தொடரில் நாரதர் என்னும் பெயர் அவரைக் குறிக்காமல், அவரைப் பாேன்ற (கலகமூட்டுபவர்) வேற்றொருவருக்கு ஆகி வந்து. அதனால் இஃது உவமையாகு பெயராயிற்று.
பொருள் முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம்கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே – நன்னூல் – 290
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர்.
எ.கா.
பொருளாகுபெயர் | தாமரைமுகம் |
முதலாகுபெயர் | மல்லிகை மாலை (மலர்) |
இடவாகு பெயர் | ஊர் திரண்டது |
உலகம் விழித்துக் கொண்டது | |
காலவாகு பெயர் | கார் அறுத்தார் |
சினையாகு பெயர் | வெற்றிலை நட்டான் |
பண்பாகு பெயர் | வெள்ளை அடித்தான் |
தொழிலாகு பெயர் | பொங்கல் உண்டான் |
தனியாகுபெயர் | கழில் பணிந்தான் (தானி – இடத்தின் மேல் உள்ள பொருள் |
கருவியாகு பெயர் | குழல்கேட்டு மகிழ்ந்தான் |
குறள் கற்றான் | |
உவமை ஆகுபெயர் | காளை வந்தான |
காரியவாகு பெயர் | நீரின்றிப் பைங்கூழ் வாடியது |
களவியல் படித்தான் | |
கருத்தா ஆகு பெயர் | திருவள்ளுவர் கற்றான் |
சொல்லாகு பெயர் | நூலுக்கு உரை கண்டான் |
பாட்டுக்கு உரை எழுதுக | |
எண்ணல் அளவை பெயர் | பழம் ஒன்று கொடு |
எடுத்தல் அளவை பெயர் | கிலோ என்ன விலை? |
முகத்தல் அளவை பெயர் | இரண்டு லிட்டர் கொடு |
நீட்டல் அளவை ஆகுபெயர் | உடுப்பது நான்கு முழம் இரண்டு மீட்டர் வேண்டும் |
பொருளாகுபெயர் | தாமரை போன்ற முகம் |
இடவாகு பெயர் | ஊர் சிரித்தது |
காலவாகு பெயர் | காரத்திகை பூத்தது |
பண்பாகு பெயர் | நீலம் சூடினாள் |
தொழிலாகு பெயர் | எழுத்து எழுதினேன் |
கருவியாகு பெயர் | திருவாய்மொழி ஓதினான் |
காரியவாகு பெயர் | இலக்கணம் வாங்கினேன் |
கருத்தா ஆகுபெயர் | தொல்காப்பியம் படித்தேன் |
உவமையாகு பெயர் | கம்பன் வாய் தேன்மொழியும் |
எண்ணல் ஆகுபெயர் | தலைக்கு ஒரு பழம் கொடு |
தொழிலாகு பெயர் | வற்றல் உண்டேன் |
நீட்டல் அளவை ஆகுபெயர் | உடுப்பது நான்கு முழம் |
முகத்தல் அளவை ஆகுபெயர் | உண்பது நாழி |
கருவியாகு பெயர் | திருவாசகம் படித்தான் |
தானியாகு பெயர் | கீரையை இறக்கி வை |
உவமையாகு பெயர் | பாய்வதில் அவள் புலி |
இடவாகு பெயர் | பண்பு பாராட்டும் உலகு |
பண்பாகுபெயர் | வெள்ளை அடித்தார் |
எண்ணலளவையாகு பெயர் | கால் வலித்த்து |
சொல்லாகு பெயர் | தம்பி என் சொல்லைக் கேட்பான் |
தானியாகு பெயர் | பாலை வண்டியில் ஏற்று |
கருவியாகு பெயர் | குடி கெட்டது |
கருத்தாகு பெயர் | இவருக்கு பரிமேலழகர் மனப்பாடம் |
உவமையாகு பெயர் | பாவை வந்தான் |
பொருளாகு பெயர் | வெள்ளத் தனைய மலர் நீர்மட்டம் |
சினையாகு பெயர் | எம்பும் உரியர் பிறர்க்கு |
பண்பாகு பெயர் | விருந்த ஓம்பி |
பொருளாகு பெயர் | மருக்கொழுந்து நட்டனர் |
சினையாகு பெயர் | கைகள் வேலை செய்தன |
வேற்றுமை உருபு ஏற்கும் போது திரியும் பெயர்கள் |
5. தன்மைப்பெயர்
பேசுவோரையும் அவன் சார்ந்தோரையும் குறிக்கும் பெயர் தன்மைப்பெயர்
யான் என்பது என்றும்
யாம் என்பது என்று
நாம் என்பது நாம் என்றும் திரிந்து வேற்றுமை உருபுளை ஏற்கும்
வேற்றுமைப் பெயர் | 2 ஐ | 3 ஆல், ஓடு | 4 கு | 5 இன் | 6 அது | 7 கண் |
யான் | என்னை | என்னோடு, என்னால் | எனக்கு | என்னின் | எனது | என்னிடம் |
யாம் | எம்மை | எம்மொடு, எம்மால் | எமக்கு | எம்மின் | எமது | எம்மிடம் |
6. முன்னிலைப்பெயர்
பேசுவோரின் சொல்லையும் முன்னின்று கேட்போரையும் அவர் சார்ந்தோரையும் உணர்த்தி வரும் பெயர் முன்னிலைப் பெயர்.
நீ – முன்னிலை ஒருமைப்பெயர் (நீங்கள், நீயிர், எல்லர், நீவிர்)
முன்னிலைப் பன்மைப் பெயர்கள் (நீ என்பது நீ என்றும்)
நீர் என்பது நும் என்றும், நீங்கள் என்பது நுங்கள் என்றும் திரிந்து வேற்றுமை உருபுகளை ஏற்கும்.
வேற்றுமைப் பெயர் | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
நீ | நின்னை | நின்னோடு, நின்னால் | நினைக்கு | நின்னின் | நினது | நின்னிடம் |
நீ | உன்னை | உன்னோடு, உன்னால | உனக்கு | உன்னின் | உனது | உன்னிடம் |
நீர் | நும்மை | நும்மாடு, நும்மால் | நுமக்கு | நும்மின் | நுமது | நும்மிடம் |
7. படர்க்கைப்பெயர்
தன்மனை, முன்னிலை ஒழிந்த பெயர்கள் எல்லாம் படக்கை பெயர்கள். இதுவும் ஒருமை பன்மை என 2 வகைப்படும்.
ராசன் இல்லம் – படர்க்கை ஒருமைப்பெயர்
பசுக்கள், மனிதர்கள் – படர்க்கைப் பண்மைப் பெயர்
தான் என்பது தன் என்றும் தாம் என்பது தம் என்றும் திரிந்து வேற்றுமை உருமை ஏற்கும்
வேற்றுமைப் பெயர் | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
தான் | தன்னை | தனக்கு | தன்னின் | தனது | தன்னிடம் | தன்னால் |
தாம் | தம்மை | தம்மொடு | தமக்கு | தம்மின் | தமது | தம்மிடம் |
8. பெயர்ச்சொல்
பொருள் உணர்த்தி வேற்றுமை உருபுகளை ஏற்று நிற்பது பெயர்ச்சொல்
வினையாலணையும் பெயர் தவிர மற்ற பெயர்ச்சொற்கள் காலம் காட்டாது
இது இடுகுறி அல்லது காரணப் பெயராக இருக்கும்
9. இடுகுறிப்பெயர்
காரணமின்றி முன்னோர் வழங்கிய பெயர்
எ.கா.:- மண், மலை, மடு, கல்
10. காரணப்பெயர்
எ.கா.:-
- வயிறு
- சுவர் (சுவல், தோள்)
- மரம் (தரையில் மருவி இருப்பது)
- கும்மி (குழுமியடித்தல்)
- குறிஞ்சி (மலைப்பகுதி ஊர்)
11. காரண இடுகுறிப்பெயர்
ஒரு பெயர் காரணமுடையதாக இருப்பின் அது அக்காரணமுடைய பலவற்றுக்கும் சொல்லாது ஒன்றனுக்கு உரித்தாய் வருவது.
எ.கா.:- காற்றாடி, பட்டம், நாற்காலி
12. பொருட்பெயர்
பொருளைக் குறிப்பது. இது உயிர்திணை, அஃறிணை என இரு திணையாக இருக்கும்
எ.கா.:-
உயர் திணை – அரசன், தொண்டன், கண்ணன், ராதா, குமரன்
அஃறிணை – பசு, குரங்கு, சேவல், நரி, மேசை
13. இடப்பெயர்
இடத்தைக் குறிப்பதாகும்
எ.கா.:- பள்ளி, சேலம், கல்லூரி, ஊர்
14. காலப்பெயர்
காலம் காட்டுவது
எ.கா.:- பகல், காலை, தை, புதன்கிழமை
15. சினைப்பெயர்
உறுப்புகளை காட்டுவது
எ.கா.:- கை, தண்டு, பழம், கால், வேர், பல்
16. குடிப்பெயர்
சாதியைக் குறிப்பது
எ.கா.:- உழவன், குறவன், ஆயன், மறவன், பரதவன், வாணிபன்
17. கிளைப்பெயர்
உறவுகளைக் குறிப்பது
எ.கா.:- அண்ணன், மாமி, நாத்தனார், தங்கை, மனைவி
18. அளவைபெயர்
நீட்டல், முகத்தல், எடுத்தல், எண்ணல் என நால்வகை அளவின் பெயர் குறிப்பது அளவுப் பெயராகும்.
எ.கா.:- பத்து, ஆழாக்கு, வீசை, கழஞ்சு, படி, கிராம், மீட்டர்
19. சுட்டுப்பெயர்
சுட்டின் அடியாக ஒருவரைச் சுட்டுவதற்குப் பயன்படும் பெயர்
எ.கா.:- இவன், அவன், அது, அங்கே, உவன், இது
20. குடிப்பெயர்
வினாவுவதன் அடியாய் பிறக்கும் பெயர்
எ.கா.:- எவன், யாது, யார், எது, எவை, யாவள், எவர், யாவர்
21. தொகுதிப்பெயர்
தொகுதியைக் குறிக்கும் பெயராகும். இது ஒரு பெயர் பொதுசொல் என்றும் பலவின் இணைந்த ஒரு சொல் எனவும் வழங்கப்படும்.
எ.கா.:-
சேனை – பல வீரர் அடங்கியது
குழு – பல மக்கள் அடங்கியது
மாலை – பல மலர்கள் அடங்கியது
அடிசில் – உண்பன தின்பனவற்றைக் குறிப்பது
Related Links சொற்களை ஒழுங்கு படுத்தி சொற்சொடர் ஆக்குதல்
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to Study – Group 4 Science Where to Study 2024
→ Our Partner and Official Link (For Notification and Apply Exams)Our Partner and Official Link (For Notification and Apply Exams)