புறநானூறு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து புறநானூறு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
புறநானூறு -புறம்+நான்கு+நூறு
புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 400
புறநானூற்று பாடலின் பா வாகை – அகவற்பா
‘புறம்’, ‘புறம்பாட்டு’ என்றும் வழங்கப்படும் நூல் – புறநானூறு
தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகத் திகழ்வது – புறநானூறு
“தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே”
காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக புறநானூறு விளங்குகிறது.
“நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே”
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடளே”
“களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
“கலம் தந்த பொற்பரிசும் கழித் தோணியால் கரை சேரக்குந்து”
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக”
‘தமிழ்கெழு கூடல்”
“செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனில் தப்புந பலவே”
ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர
விளையாட்டு பற்றிக் கூறும் நூல் புறநானூறு
“ஓவத்தனைய இடனுடை வனப்பு”
பாய்மரக்கப்பல்களில் பயன்பட்டது கூடப் பாய் தான் என்று கூறும் நூல் – புறாநானூறு.
“கூம்பொடு மீப்பாய் களையாது”
“நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி”
“கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்”
“கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து”
“மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து”
“பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்”
“வலவன் ஏவா வானவூர்தி”
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”
ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ‘ஞாயிற்று வட்டம்’ எனக் குறிப்பிடும் நூல் புறநானூறு
“காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல் அள்ள நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்”, சேக்கிழார் – புறநானூறு
.”பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும்” கூறும் நூல் – புறநானூறு
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! – புறநானூறு, மணிமேகலை
உண்பது நாழி உடுப்பவை இரண்டே!
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!
“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!”,
பண்டையத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது – புறநானூறு
“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!” – புறநானூறு.
‘ஏறு தழுவுதல்’ பற்றி குறிப்பிடும் இலக்கண நூல் – புறப்பொருள் வெண்டாமலை
தமிழ் நாகரீகம் மற்றும் பண்பாடு பற்றி கூறும் நூல் – புறநானூறு
புறநானூறு எவ்வகை நூலாகும்? எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
“நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள், அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை; அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது எனக் கூறும் நூல் புறநானூறு.
கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதை புறநானூறு நூல் கூறுகின்றது.
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி”
புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்
“பூட்கையில்லோன் யாக்கை போல”
“உண்டாலம்ம இவ்வுலகம்” என்னும் பண்பினைக் கூறுவது- புறப்பாட்டு/புறநானூறு (கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
“இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீத
யாக்கையொடு மாய்தல் தவத்திலையே”
“இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே” – புறநாநூறு
“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில்ஆண்ட உரவோன் மருக!”
“களிஇயல் யானைக் கரிகால் வளவ!”
விருந்தினருக்கு தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாக படைத்த செய்தி இடம் பெற்ற நூல்-புறநானூறு.
“குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து”
“நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்” என்ற செய்தி இடம்பெற்ற நூல் புறநானூறு
“நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்”
“கல்வியைப் போற்றும் காலம்” – புறநானூறு
“மாசற விசித்த வார்புறு வள்பின்…”–புறநானூறு
“நீரற வறியாக் கரகத்து”
“சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர், சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேருவர்”
தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவும் நூல் – புறநானூறு
“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை” எனும் பாடல் புறநானூற்றில் எத்தனையாவது பாடல்? 218
“களிறு எரிந்து பெயர்தல் காளைக்கு கடளே”
தமிழகத்தின் வடக்கெல்லையை வேங்கட மலையாகவும் தெற்கெல்லையை குமரி முனையாகவும் குறிப்பிட்ட நூல்கள்- சிலப்பதிகாரம், புறநானூறு
“எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்” என்னும் பாடல் இடம் பெற்ற நூல்-புறநானூறு{ஆவூர் மூலங்கிழார்)
“செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே”
“இன்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறிவிலை வணிகன் ஆஅய் அல்லன்”
‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’
தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனார் பெருமையைக் கூறுவது-புறநானூறு
“கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே!”
‘வலவன் ஏவா வானூர்தி’
‘வறிது நிலைஇய காயமும்’
‘எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம்’ கூறும் நூல் புறநானூறு.
“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்”
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி இயற்றியுள்ள பாடல்கள் புறநானூற்றில் ஒரு பாடல், பரிபாடலில் ஒரு பாடல்
1894 -இல் புறநானூற்றை முதன் முதலாக பதிப்பித்து வெளியிட்டவர் உ.வே.சா
The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical tamil, the purananuru புறநானூற்றை ஜார்ஜ்.எல்.ஹார்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
Extracts from from purananooru & purapporul venbamalai எனும் தலைப்பில் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப்
எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் – பதிற்றுப்பத்து, புறநானூறு
புறநானூற்றுத் தொகுதியின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் –பாரதம்பாடிய பெருந்தேவனார்
இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் கிடைக்கவில்லை.
புறநானூற்றின்கண் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
‘அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்’
நீண்டநாள் வாழச் செய்யும் அமிழ்தத்தை ஒத்ததோர் அரிய நெல்லிக்கனியைத் தாள் உண்ணாது அதியமாள் ஒடி வைக்கு ஈந்து மகிழ்ந்த செய்தியைக் கூறும் நூல்- புறநானூறு
ஔவையார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை
அதியமானின் தூதராக ஒடிவை சென்றதைப் புறநானூறு கூறுகிறது.
“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்
பரிப்பு சூழ்ந்தமண் டிலமும்”
“வளி திரிதரு திசையும்
வறிது நிலை இய காயமும்” என்ற புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர் – உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
“புகாஅர்ப் புகுந்த பெருங்கலத் தகாஅர்”
வானியல் பற்றிக் கணிப்பவர்கள் அன்றே இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு
”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!”
“இடுக வொன்றோ, சடுகவொன்றோ படுவழிப் படுக. இப்புகழ் வெய்யோன் தலையே”
“முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே”
“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேசு”
‘நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை’
‘புக்கில்’ என்ற சொல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
“சிறுவர்தாயே பேரிற் பெண்டே”
பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல்களுள் இப்புறநானூறும் ஒன்றாகும்.
ஔவையார் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
“போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;”
“இன்னாது உற்ற அறனில் கூற்றே!”
“உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படேஎன் ஆயின்”
“பலர் துஞ்சவும் தான் துஞ்சான்”
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே”
வான் உட்கும் வடி நீண் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்று
அதன் தகுதிகேள் இனி மிகுதிஆள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய இகழாது வல்லை
நிலம் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!
சிற்றில் நற்றூண் பற்றிநின் மகன்
யாண்டு ளனோவென வினவுதி; என்மகன்
யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந் துபோகிய கல்லளை போல,
ஈன்ற வயிறோ விதுவே;
தோன்றுவான் மாதோ போர்க்களத் தானே !
– காவற்பண்டு
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”
‘நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
Related Links அகநானூறு 6th – 12th