கம்பராமாயணம்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து கம்பராமாயணம் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. *
– கம்பர்
1) பெயர் : கம்பர்
2) ஊர் : நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்.
3) ஆதரித்த(புரந்த ) வள்ளல் : திருவெண்ணெய் சடையப்ப வள்ளல். இவர் செய்ந்நன்றி மறவா இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
4) இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
5) இயற்றிய நூல்கள்:
1.சடகோபரந்தாதி,
2. ஏரெழுபது,
3. சிலையெழுபது,
4. சரசுவதிஅந்தாதி,
5. திருக்கை வழக்கம்.
6) காலம்: 12 ஆம் நூற்றாண்டு
7) சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
8) இவர், குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவராக விளங்கினார்;
9) கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியர் கம்பர் என்னும் தொடர்களால் கம்பரின் பெருமையை அறியலாம். ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
10) கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் களி கூர்வர். கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. ‘வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே’ என்று ஒரு கணக்கீடும் உண்டு.
11) “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரை புகழ்ந்து பாடியவர்-பாரதியார்
12) “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று கூறியவர் பாரதியார்
13) ஏழாங்காண்டமாக உத்தர காண்டம் என்னும் பகுதியைக் கம்பரின் சமகாலத்தவராகிய ஒட்டக்கூத்தர் இயற்றினார்.
14) கம்பர், வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றினார்; இயற்றிய அந்நூலுக்கு, இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
15) இராமாயணத்துள் ஐந்தாங்காண்டமாக விளங்குவது சுந்தரகாண்டம். இக்காண்டமே காப்பியத்தின் முடிமணியாக விளங்குகிறது என்பர்.
16) அனுமனுக்குச் சுந்தரன் என்னும் பெயரும் உண்டு என்பதால் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறு பெற்று விளங்கும் இக்காண்டம் சுந்தர காண்டம் எனலாயிற்று என்பர்.
17) கடலைத்தாண்டி இலங்கையிற் புக்க அனுமன் சீதை இருக்குமிடத்தைத் தேடித்துருவியதும் அசோகவனத்தையடைந்து சீதையைக் கண்டதும் அங்கே சீதையிடம் இராவணன் வந்து உரையாடியதும் சீதை அவனைக்கடிந்துரைத்து, ஒதுக்கியதும் சீதைக்கு நல்லமொழி சொல்லி இணங்குவிக்குமாறு அரக்கியரை ஏவி இராவணன் அகன்றதும் சீதை மனந்தளர்ந்ததும் உயிரை விடத்துணிந்ததும் இராமதூதன் யான் என அனுமன் சீதைமுன் தோன்றியதும் இராமனின் அடையாள மொழிகளைக் கூறியதும் கணையாழியைத் தந்ததும் சீதை அதனால் மகிழ்ந்ததும் அனுமனிடம் சூடாமணியை வழங்கி வரவிடுத்ததும் இராமனுக்குச் சொன்ன செய்திகளும் அனுமன் பலரோடு பொருது இலங்கையை எரியூட்டி அங்கிருந்து இராமனிடம் வந்ததும் இராமனைக் கண்டு அடிதொழுது நின்று நிகழ்ந்தவற்றை நிரல்படச் சொல்லுதலும் ஆகிய செய்திகளை இப்பகுதியிற் காணலாம். சீதையைக் கண்டு வந்த அனுமன் கூறிய செய்திகள் இப்பகுதியில் அனுமன் கூற்றாகத் தரப்பட்டுள்ளன.
18) அதுவே கம்பராமாயணம் என வழங்கலாயிற்று. எனவே, இது வழிநூல் எனப்படுகிறது.
19) கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
20) கம்பராமாயணம் 6 காண்டங்களையுடையது.
1. பால காண்டம்
2. அயோத்தியா காண்டம்
3. ஆரணிய காண்டம்
4. கிட்கிந்தா காண்டம்
5. சுந்தர காண்டம்
6. யுத்த காண்டம்
21) 6 காண்டங்களையும், 118 படலங்களையும், 10589 பாடல்களையும் கொண்டது.
22) குகன், சடாயு சவரி, சுக்ரீவன், வீடணன் ஆகியோரைப் பற்றிய பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
23) காண்டம் – பெரும் பிரிவு; படலம் – உட்பிரிவு) இப்பாடல் பால காண்டத்து ஆற்றுப்படலத்தில் உள்ளது.
24) தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலையை அடைந்தது.
25) இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்குக் ‘கதி’ என்பர் பெரியோர்.
26) கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது; பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது; கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது; சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ளது.
27) கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் 2-ஆம் காண்டமாகும். இதில் 13 படலங்கள் உள்ளன. நம் பாடப்பகுதியான குகப் படலம் ஏழாம் படலமாகும். இப்பகுதியைக் கங்கைப் படலம் எனவும் கூறுவர்.
28) தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம், இதில் கூறப்பட்டுள்ளது.
வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.*
– கம்பர்
குகன் படகைச்செலுத்துதல்
விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார். *
குகன் கூறியதைக் கேட்ட குற்றமற்றவனாகிய இராமன்
துன்புள தெனின் அன்றோ சுகமுளது அதுவன்றிப்
பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னேல்
முன்புளெம் ஒருநால்வேம் முடிவுள தென உன்னா
அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானோம். *
29) கம்பரின் கவிதை வரிகளுக்கு கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
30) “மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை”
நீடுழி காக்கும்கை காராளர் கை” என்ற பாடல் வரிகளை இயற்றியவர் – கம்பர்
31) இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்.
32) “ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – கம்பராமாயணம்.
33) கம்பராமாயணம்- வழிநூல் எனக் கூறப்படுகிறது
34) வடசொற்களை தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் – கம்பர்.
35) புட்பக விமானம் பற்றி குறிப்பிடும் நூல் –கம்பராமாயணம்.
36) “அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் கம்பராமாயணம்.
37) “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” கம்பராமாயணம் (பாலகாண்டம், நகரப் படலம்).
39) “அலகிலா விளையாட்டுடையவர்” என்ற பாடல் பாலகாண்டத்தில் இடம்பெற்றுள்ளது.
40) விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன் என்று கூறியவர் – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.
41) கல்வியும் செல்லமும் பெற்ற பெண்கள் விருந்தும், ஈகையும் செய்வதாகக் கூறியவர் – கம்பர்.
42) “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தவால்” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் – கம்பராமாயணம்.
43) “வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் – கம்பராமாயணம்.
44) “என்றுமுள தென்தமிழ்”- கம்பர்
45) “விடுநனி கடிது” எனும் பாடல் கம்பராமாயணயத்தின் குகப்படலத்தில் உள்ளது.
46) கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாவது காண்டம்
47) “வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்”- எனும் வரிகள் இடம்பெறும் காண்டம் – அயோத்திய காண்டம்.
49) வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் கம்பராமாயணம் (பால காண்டம்).
49) கங்கைப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது அயோத்தியா காண்டம்.
50) நாட்டுப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது? பால காண்டம்.
51) ஆற்றுப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது? பால காண்டம்.
52) கும்பகருணன் வதைப்படலம் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது? யுத்த காண்டம்.
53) அயோத்தி நாட்டு மன்னன் – தசரதன்
அயோத்தி நாட்டு மன்னன் – தசரதன்
தசரதனின் மனைவி – கைகேயி
கைகேயியின் தோழி –மந்தரை
வேட்டுவத் தலைவன் – குகன்
குகனின் ஊர் – சிருங்கிபேரம்
54) தொல்காப்பிய நெறி நின்றவர் – கம்பர்
55) வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்த தமிழ்வேந்தர் – கம்பர்
56) கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
57) ‘ஓர்அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’. எனகூறியவர் கம்பர்
58) “உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்பார் கம்பர்
59) பிழையன்று நறும்புனலின்மை அன்றே பதியின் பிழையன்று பயந்த புரந்தான் நம்மைப் –கம்பன்
60) மதியின் பிழையன்று; மகள் பிழையன்று; மைந்த!
விதியின் பிழை நீ” எனும் பாடலை பாடியவர்- கம்பன்.
61) “தமிழ் தழீஇய சாயலவர்” என்னும் இடத்து, ‘தமிழ்’ என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன என்றவர் –கம்பன்
62) “தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க… வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ” என்ற பாடலின் ஆசிரியர்-கம்பர்
63) “நன்னுதலவள் நின் யகள் நளிர் கடல் நிலம் எல்லாம்” கம்பராமாயணம்
64) கம்பராமாயணப் பாடலில் ஜவர் எனக் குறிப்பிடும் ஐந்தாவது நபர் – குகன்
65) “கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்துவிட்ட தெய்வக்கவி” எனும் பாடலை பாடியவர் நாமக்கல் கவிஞர்.
66) கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்
67) ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம்- கம்பர்
Related Links ஔவையார் 6th – 12th