ஔவையார் 6th – 12th

ஔவையார் tnpsc

ஔவையார்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஔவையார் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

கல்விக்கு எல்லை இல்லை

கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண். *
– ஒளவையார்

இங்குக் குறிக்கப்படும் ஔவையார், சங்க கால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.

கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.

புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு.

இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.

தனிப்பாடல்களைக் கற்பதனால், தமிழ்மொழியின் பெருமையையும் புலவர்களின் புலமையையும் சொல்லின்பம் பொருளின்பம் கற்பனைஇன்பம் முதலியவற்றையும் பெறலாம்.

மூதுரை

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.”
_ ஒளவையார்

இந்நூலின் ஆசிரியர் ஒளவையார்.

இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.

சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன.

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே.
— ஔவையார்

இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே
— ஒளவையார்

1. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற கருத்தைக் கூறியவர் ஔவையார்.

2. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி”. இப்பாடலை பாடியவர் – ஔவையார்.

3. “சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்” இதில் ‘தமிழ்மகள்’ என்பது யாரைக் குறிக்கிறது? ஔவையார்.

4. “பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்று கூறியவர் –ஔவையார்.

நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ, மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே
– ஔவையார்

5. சங்க காலத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர் ஔவையார்.

6. அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் – ஔவையார்

7. .”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளைப் போற்றியவர் – ஔவையார்.

8. “கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)” என்றப் பாடல் வரிகளின் ஆசிரியர் – ஔவையார்

09 . “எறும்புந்தன் கையால்எண் சாண்” என்றப் பாடல் வரிகளின் ஆசிரியர் ஔவையார்

10. ‘இளமையில் கல்’ என்று கூறியவர் -ஔவையார்.

11. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று கூறியவர் ஔவையார்.

12. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது” எனும் பாடலைப் பாடியவர் ஔவையார்.

13. “சாதல் நீங்க எமக்கீந் தனையே” எனும் பாடலைப் பாடியவர் –ஔவையார்

14. “போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும்” என்று கூறியவர் -ஔவையார்.

15. “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து” – இப்பாடலைப் பாடியவர் ஔவையார்.

16.”பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து” – இப்பாடலைப் பாடியவர் ஔவையார்.

17. “இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே” என்ற பாடலைப் பாடியவர் ஒளவையார்.

18. “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே ” – ஒளவையார் (தனிப்பாடல்)

19. சங்ககாலப் பெண்பாற்புலவர்- ஒளவையார்.

20. .’சனி நீராடு’ என்பது ஔவையார் வாக்கு.

21. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ எனத் தமிழரின் கடற்பயணம் குறித்து கூறியவர் – ஔவையார்.

22. ‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர் – ஔவையார்.

23. ‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’ என்கிறார் – ஔவையார்.

24. “ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன”- ஔவையார்.

25. அதியமான் நெடுமானஞ்சி என்னும் குறுநில மன்னனுடன் ஆழ்ந்த நட்புக் கொண்டவர்- ஔவையார்.

26. ஔவையார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை.

27. ‘இளமையில் கல்’ – ஔவையார்.

28. புகழேந்திப்புலவர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியோர் கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் ஆவர்.

29. கடைச்சங்கப் புலவர்கள் பரணர், இடைக்காடர், ஔவை ஆகியோரிடம் நட்பு பூண்டவர்.

30. அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் – ஔவையார்.

31. ஔவையார் பாடியதாக
அகநானூற்றில் — 4
குறுந்தொகையில் — 15
நற்றிணையில் — 7
புறநானூற்றில் — 33
மொத்தம் = 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

32. ஔவைக்கு கொடுக்கப்பட்ட நெல்லிக்கனி கிடைத்த இடம் பூரிக்கல்.

Leave a Comment