Elaadhi (ஏலாதி)
ஏலாதி
வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து,
– கணிமேதாவியார்
1. ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
2. இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
3. இவர், சமண சமயத்தவர் என்பர்.
4. இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார்.
5. இவர் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு.
6. இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
8. இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
9. நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
10. இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது
11. ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
12. இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல, இந்நூலின் நற்கருத்துகள். கற்போரின் அறியாமையை அகற்றும். இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல், நமக்குப் பாடமாக அமைந்துள்ளது.
13. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள் திரிகடுகம், ஏலாதி.