சிறுபஞ்சமூலம் 6th – 12th

Sirupanjamoolam (சிறுபஞ்சமூலம்)

கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல், பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு.
— காரியாசான்
1. காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்
எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
 
2. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர்.
 
3. இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர்.
 
4. பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
 
5. சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
 
6. இதன் ஆசிரியர் காரியாசான்.
 
7. இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் 107 வெண்பாக்கள் உள்ளன.
 
8. கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல்நோயைத் தீர்ப்பன.
 
9. அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள 5 கருத்தும் மக்கள் மனநோயைப் போக்குவன.
 
10. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
 
11. கோடிட்ட இடத்தை நிரப்புக.
 
பண்ணுக்கு அழகு அதனைக் கேட்போர் நன்றென்றல்.
 
பிறரிடம் இரந்து செல்லாமை காலுக்கு அழகு.
 
12. மனித வாழ்வைச் செழுமையாக்குபவை அறப் பண்புகளே. காலந்தோறும் தமிழில் அறக் கருத்துகளைக் கூறும் இலக்கியங்கள் தோன்றிவருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் என்னும் நூல்,
 

அறிவுடையார் தாமே உணர்வர்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்.
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு”

13. பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. — சிறுபஞ்சமூலம்

14. மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர் — சிறுபஞ்சமூலம்

15. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

16. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.

17. சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.

18. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

19. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர். மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

சிறுபஞ்சமூலம் ttnpsc

Leave a Comment