Sorkalai Ozhungu Paduthi Sorchodar Aakuthal
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்-
ஒரு சொற்றொடர் எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற அமைப்புடன இருக்க வேண்டும்.
சொற்றொடர்களில் முதலில் எழுவாயும் கடையில் பயனிலையும் வரும். இடையில் செய்யப்படுபொருள் மற்றும் பிற சொற்கள் வரும்.
ஒழுங்கற்ற முறையில் தரப்பட்டிருக்கும் சொற்களை சரியான முறையில் தொடராக எழுத வேண்டும்
எ.கா.
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து
சரியான விடை : வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து தமிழ் வட்டெழுத்து எனப்படும்
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
சரியான விடை : உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
3. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
சரியான விடை : உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
4. உயர்வை உறுதியும் உழைப்பு கொடுக்கும்.
சரியான விடை : உழைப்பும், உறுதியும் உயர்வைக் கொடுக்கும்.
5. கட கடவென விழும் கண்ணுக்கெதிரில்
சரியான விடை : கண்ணுக்கெதிரில் கட கடவென விழும்.
6. கடைபிடித்த உயர்ந்த நெறி காந்தியடிகளின் வாய்மை ஆகும்
சரியான விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
7. இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகின்றேன்.
சரியான விடை : இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
8. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
சரியான விடை : பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்பரணி ஆகும்.
9. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
சரியான விடை : அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது.
10. நிலவு மனதை மகிழ்விக்கும் மாலை
சரியான விடை : மாலை நிலவு மனதை மகிழ்விக்கும்.
தேர்வு நோக்கில் சில சொற்றொடர்கள்
- உடுக்கை இழந்தவன் கை போல
- நுணலும் தன் வாயால் கெடும்
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
- பசுவைப் பிரிந்த கன்றுபோல்
- இலை மறைக் காய்போல
- யானை பசிக்குச் சோளப் பொரியா?
- இருதலைக் கொள்ளி எறும்புபோல
- சிறுதுளி பெருவெள்ளம்
- சோழியன் குடுமி சும்மா ஆடாது
- எறும்பு ஊரக் கல்லும் தேயும்
- குரங்கு கைபட்ட பூமாலை போல
- கடைமடை திறந்தது போல
- பண்பட்ட பைந்தமிழ் பாழ்பட்டுக் கிடந்தது
- நாடும் மொழியும் நமதிருகண்கள்
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
- திங்கள் அமிழ்து திகழ் ஆவின் பாலினிது
- பண்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்
- ஒறுத்தாரை என்றாக வையாரே, வைப்பர்
பொறத்தாரைப் பொன்போல் பொதிந்து
- ஏனா அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கு
- தமிழர்கள் வாழ்வின் இலக்கணம் அறிந்தவர்
- குன்றின்மேல் எரியும் விளக்கு
- ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
- நுண்ணதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் மகனே
- வல்லவர் நல்லவராக இருக்க வேண்டும்
- தூய நெஞ்சினர் துன்பம் செய்யார்
- உழைப்பின் வரா உறுதிகள் உளவோ?
- நீதிக்குப் போராடாதவன் நடை பிணம்
- மின்னுவது எல்லாம் பொன் அல்ல
- குன்று முட்டிய குருவி போல
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to study – Group 4 Science Where to Study 2024
Related Links சொற்களை ஒழுங்கு படுத்தி சொற்சொடர் ஆக்குதல்