இனியவை நாற்பது 6th – 12th

Iniyavai Naarpadhu

இனியவை நாற்பது

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இனியவை நாற்பது பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

 

  1. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
    கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
    மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
    திருவுந்தீர் வின்றேல் இனிது.
  2. சலவரைச் சாரா விடுதல் இனிதே
    புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
    மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
    தகுதியால் வாழ்தல் இனிது.

ஆசிரியர் குறிப்பு

3. பெயர் : மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

4. ஊர் : மதுரை

5. காலம் : கி.பி. 2 ஆம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு

6. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

7. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.

8. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் 3 அல்லது 4 நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

Leave a Comment