திரிகடுகம் 6th – 12th

திரிகடுகம் 

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து திரிகடுகம் பற்றிய செய்திகள்த் தொகுத்து கொடுத்துள்ளோம்.

திரிகடுகம் Tnpsc notes

தூயவர் செயல்கள்

  • உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
    பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்
    சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
    தூஉயம் என்பார் தொழில்.

அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை

  • இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்
    நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
    துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
    நன்றறியும் மாந்தர்க் குள. *

புதரில் விதைத்த விதை

  • முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
    நிறையிலான் கொண்ட தவமும் நிறைஒழுக்கம்
    தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
    தூற்றின்கண் தூவிய வித்து.

1. திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.

2. இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்.

3. இவரைச், செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடு வதனால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

4. திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

5. இந்நூல் 100 வெண்பாக்களை உடையது.

5. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்.

6. இம்மருந்தை உண்ட மனிதர்களுக்கு உடல்நோய் நீங்கும்.

7. இதனைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம்பெற்றுள்ள மூன்று கருத்தும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்தும்.

8. திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும் கற்பாரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் சமுதாயத்தில் விளங்கச் செய்யும்.

பரிதிமாற் கலைஞர்

Useful Links 

TNPSC Official Link 

Leave a Comment