முதுமொழிக் காஞ்சி
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து முதுமொழிக் காஞ்சி பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
முதுமொழிக்காஞ்சி
சிறந்த பத்து
(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து.)
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை.
2. காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.
3. மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை.
4. வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை.
5. இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை.
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று.
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று.
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
9. செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று.
10. முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று.
– மதுரைக் கூடலூர்கிழார்
1. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார்
பிறந்த ஊர் – கூடலூர்
2. சிறப்பு : இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள்.
3. காலம்: சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்தவர்
4. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
5. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
6. இந்நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
7. இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன.
8. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன.
9. இந்நூல் 100 பாடல்களால் ஆனது.
10. முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.
Related Links பழமொழி நானூறு 6th – 12th