வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் (Versollai Thervu Seithal)

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் tnpsc

இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் பற்றித் தொகுத்து கொடுத்துள்ளோம்.

சொல்

பதம், மொழி, கிளவி என்பன சொல் என்பதன் வேறு பெயர்கள்.

பதம் பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும்.

பகாப்பதம்

பிரித்தால் பொருள் தராத சொல் பகாப்பதம் எனப்படும்.

பெயர், வினை, இடை, உரி ஆகியவற்றின் அடிப்படையில் பகாப்பதம் நான்கு வகைப்படும்.

  • பெயர்ப்பகாப்பதம் – மரம், நாய், நீர்
  • வினைப்பகாப்பதம் – உண், காண், எடு
  • இடைப்பகாப்பதம் – தில், மன், பிற
  • உரிப்பகாப்பதம் – சால, நனி, கடி, உறு

(இடைச்சொல்லும், உரிச்சொல்லும் பகாப்பதங்களாகவே இருக்கும்)

பகாப்பதம்

பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.

(பகுபதம் – பிரிக்கவியலும் பதம்). பகுபதம் பெயர்ப்பகுபதம், வினைப்பகுதி என இருவகைப்படும்

பெயர்ப்பகுபதம் : பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் அடியாகத் தோன்றுவது பெயர்ப்பகுபதம் எனப்படும்

1. பொன்னன்

பொன் + ன் + அன் (ன் இரட்டித்தது)

பொன் என்னும் பொருட்பெயர் அடியாக பிறந்தது.

2. ஊரன்ஊர் + அன்ஊர் என்னும் இடப்பெயர் அடியாகப் பிறந்தது.
3. ஆதிரையான்

ஆதிரை + ய் +ஆன் (ய் – உடம்படுமெய்)

ஆதிரை என்னும் காலப்பெயர் அடியாகப் பிறந்தது.

4. கண்ணன்

கண் + ண் + ன் (ண் இரடித்தது)

கண் என்னும் சினைப்பெயர் அடியாகப் பிறந்தது.

5. கரியன்

கருமை + அன்

கருமை என்னும் பண்புப்பெயர் அடியாகப் பிறந்தது.

6. நடிகன்

நடி + க் + அன் (க் – பெயரிடைநிலை)

நடித்தல் என்னும் தொழில்பெயர் அடியாகப் பிறந்தது.

வினைப்பகுபதம் : பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பகுக்கப்படும் வினைமுற்று வினைப்பகுபதம் எனப்படும்

செய்தான் = செய் + த் +ஆன்

செய்தான் என்னும் வினைமுற்றில் செய் என்னும் பகுதி தொழிலையும், ‘த்’ என்னும் இடைநிலை இறந்த காலத்தையும் ஆன் என்னும் விகுதி ஆண்பாலையும் குறிக்கின்றன.

பகுபத உறுப்புகள்

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறு உறுப்புகளும் பகுபத உறுப்புகள் ஆகும்.

பகுதி

சொல்லின் முதலில் நிற்கும்; பகாப் பதமாக அமையும்; வினைச்சொல்லில்
ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.

  • படித்தான் – படி என்பது பகுதி
  • ஓடினான்- ஓடு என்பது பகுதி
  • வந்தான் – வா என்பது பகுதி

விகுதி

சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.

படித்தான்ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி அன், ஆன்
பாடுகிறாள்ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி அள், ஆள்
பெற்றார்ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி அர், ஆர்
நீந்தியதுது – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி து, று
ஓடினஅ – பலவின்பால் வினைமுற்று விகுதி அ, ஆ
சிரிக்கிறேன்ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதிஎன், ஏன்
உண்டோம்ஓம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிஅம், ஆம், எம், ஏம், ஓம்
செய்தாய்ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிஐ, ஆய், இ
பாரீர்ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிஇர், ஈர்
அழகிய, பேசும்அ, உம் – பெயரெச்ச விகுதிகள் அ, உம்
வந்து, தேடி உ, இ – வினையெச்ச விகுதிகள்உ, இ
வளர்கக – வியங்கோள் வினைமுற்று விகுதிக, இய, இயர்
முளைத்தல்தல் – தொழிற்பெயர் விகுதிதல், அல், ஐ, கை, சி, பு

இடைநிலை

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.

வென்றார்ற்-இறந்தகால இடைநிலைத், ட், ற், இன்
உயர்கிறான்கிறு – நிகழ்கால இடைநிலைகிறு, கின்று, ஆநின்று
புகுவான், செய்கேன்வ், க் – எதிர்கால இடைநிலைகள்ப், வ், க்
பறிக்காதீர்ஆ – எதிர்மறை இடைநிலைஇல், அல், ஆ
மகிழ்ச்சி, அறிஞன்ச், ஞ் – பெயர் இடைநிலைகள்ஞ், ந், வ், ச், த்

சந்தி

பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.

உறுத்தும்த் – சந்தித், ப், க்
பொருந்தியய் – உடம்படுமெய்சந்தி ய், வ்

சாரியை

பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

நடந்தனன்அன் – சாரியைஅன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்

விகாரம்

பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம், விகாரம் எனப்படும்.

தனி உறுப்பு அன்று; மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்.

வேர்ச்சொல்

இப்பகுதி வினாக்களை எளிதில் எதிர்கொள்ள வாக்கியங்களை பிரித்தெழுவதில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

ஒரு வார்த்தையில் வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.

வேர்ச்சொல் என்பது பொதுவாக ஏவலாகவோ இருக்கும்

சொல்வேர்ச்சொல்
அகழந்தான்அகழ்
அகன்றுஅகல்
அடைந்தோம்அடை
அணிந்தான்அணி
அரிந்துஅரி
அரியதுஅருமை
அறிந்தான்அறி
அடித்தாள்அடி
அலறள்அலறு
அருளினர்அருள்
அறுந்ததுஅறு
அறுவடைஅறு
அவிந்ந்ததுஅவிழ்
அறியாதுஅறி
ஆண்டாள்ஆள்
ஆடினாள்ஆடு
ஆழந்தார்ஆழ்
இனிதுஇனிமை
இனிப்புஇனிமை
இயம்பியதுஇயம்பு
ஈந்தது
ஈன்றாள்ஈன்று
ஈட்டினான்ஈட்டு
உண்பார்உண்
உழுதான்உழு
உணவுஉண்
உறங்கினான்உறங்கு
ஊர்ந்துஊர்
உருக்கும்உருக்கு
உழுவித்தான்உழுவி
உள்ளம்உள்
உள்ளீடுஉள்
எஞ்சியஎஞ்சு
எடுக்கும்எடு
எண்ணியஎண்
எய்தான்எய்
எடுத்தான்எடு
எழுந்தான்எழு
எழுதினான்எழுது
ஏத்துதல்ஏத்து
ஒட்டுதல்ஒட்டு
ஒழிந்தான்ஒழி
ஒட்டுவிப்புஒட்டுவி
ஒட்டியதுஓட்டு
ஓடாதுஓடு
ஓடினான்ஓடு
ஓதியவர்ஓதி
கற்ககல்
கடையல்கடை
கற்றேன்கல்
காட்சியில்காண்
காட்டியதுகாட்டு
கண்டு, கண்டனன்காண்
கற்றான்கல்
கடித்தான்கடி
காணாமைகாண்
காட்டுவான்காட்டு
காத்தான்கா
காத்தவன்கா
காண்பார்காண்
கூவல்கூ
கேட்க, கேட்டல்கேள்
கொண்டான்கொள்
கொணர்ந்தான்கொணர்
கொன்றதைகொல்
கொடாமைகொள்
குரைத்ததுகுரை
குடித்தான்குடி
குளித்தான்குளி
கூறினான்கூறு
கொள்ளுதல்கொள்
கொன்றான்கொல்
கொய்தான்கொய்
சாய்ந்ததுசாய்
சாற்றினான்சாற்று
சிரிப்புசிரி
சரிந்தான்சிரி
சிரித்தான்சிரி
சிதறியசிதறு
சீரியசீர்மை
சீத்தாள்சீ
சுட்டதுசுடு
சுருட்டினான்சுருட்டு
சூடினான்சூடு
சென்றாள்செல்
செல்வான்செல்
சேர்ந்தான்சேர்
சொன்னான்சொல்
செத்தவன்சா
செய்கிறாள்செய்
சென்றவன்செல்
சோர்வுசோர்
தந்தான்தா
தட்டுவான்தட்டு
தாண்டினான்தாண்டு
தட்பம்தண்மை
தாவியதுதாவு
தாழ்வுதாழ்
திறந்ததுதிற
திருத்தினான்திருத்து
தீயந்ததுதீய்
தீர்ந்ததீர்
துறவுதுற
தூங்கினதூங்கு
துயின்றான்துயில்
துறந்தான்துற
தூங்கினார்தூங்கு
தெரிந்தனர்தெரிந்து
தெளிந்தான்தெளி
தேடினான்தேடு
தேற்றினான்தேற்று
தேடல்தேடு
தொழாதுதொழு
தோல்விதோல்
தைத்தான்தை
தொடுவாள்தொடு
தொங்கினான்தொங்கு
தொடர்ந்தாள்தொடர்
தோண்டினான்தோண்டு
தோன்றினான்தோன்று
தோற்றான்தோல்வி
நக்கார்நகு
நட்டான்நடு
நடித்தான்நட
நாடகம்நடி
நாட்டும்நாட்டு
நின்றார்நில்
நின்றோன்நில்
நீங்கிநீங்கு
நீண்டநீள்
நுகர்ந்ததுநுகர்
நெட்டினான்நெட்டு
நேர்ந்ததுநேர்
நோக்கம்நோக்கு
நோக்கினான்நோக்கு
நாடியநாடு
நீங்கிநீங்கு
பட்டான்படு
படித்தல்படு
படிபித்தான்படிப்பி
பருகுவான்பருகு
பழுத்ததுபழு
பாய்ச்சல்பாய்
பார்த்தல்பார்
படுத்தான்படு
பறித்தான்பறி
பற்றினான்பற்று
பாழ்த்தபாழ்
பிணங்கினான்பிணங்கு
பிரித்தார்பிரி
புக்கம்புகு
புகழ்ந்தான்புகழ்
பூண்டான்பூண்
பூசுதல்பூசு
பூப்புபூ
பொறாமைபொறு
பெற்றாள்பெறு
பொருந்தினான்பொருத்து
பொருந்தினபொருந்து
போனான்போ

1 thought on “வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்”

Leave a Comment