பாடம் 8.2 நீங்கள் நல்லவர்
Hello, Friends.,
Here we have provided the State Board Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.
சொல்லும் பாெருளும்
- சுயம் – தனித்தன்மை
- உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை
நூல் வெளி
- கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
- கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
- இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும்
- கவலை
- துன்பம்
- மகிழ்ச்சி
- சோர்வு
விடை : மகிழ்ச்சி
2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.
- பேச
- சிரிக்க
- நடக்க
- உழைக்க
விடை : உழைக்க
குறு வினா
1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?
பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க் கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் செல்லாது. கொடுப்பது பழத்தின் இயல், பெறுவது வேரின் இயல்பு
2. உழைக்கும் போது என்னவாக ஆகிறோம்?
உழைக்கும் போது புல்லாங்குழலாக மாறுகிறோம்
சிந்தனை வினா
1. நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம்?
- ஒழுக்கத்தில் உயர வேண்டும்.
- வாய்மையைப் போற்ற வேண்டும் அல்லது கடைபிடிக்க வேண்டும்.
- சமூகத் தொண்டின் வழியாக பிறருக்கு உதவ வேண்டும்.
- உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும்.
2. உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக.
எனது குறிக்கோள் நல்ல பேச்சாளராக வேண்டும். அதற்கு தினமும் பள்ளிக்கு ஓழுங்காக செல்கிறேன். அதிகமான புத்தகங்களை வாசிக்கின்றேன். அவை உலக வரலாறு, இந்திய வரலாறு, உயிர்களின் தோற்றமும், வளர்ச்சியும் காலத்தை பயன்படுத்துவது எப்படு, அகராதிகள், உலகை வெல்வோம். உலக நாயகர்கள் வரலாறு, சாதனையாளர்கள் வரலாறு, அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்தித்தாள்கள், இதழ்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், புதுக்கவிதைகள், இலக்கணம், இலக்கிய வரலாறு, சமய வரலாறு, மொழி வரலாறு, உரைநடைகள், அறிவை வளர்ப்பது எப்படி என்று பல புத்தகங்களை வாசித்து வருகின்றேன்.
நான் வாசிப்பது மட்டுமல்லாது என் நண்பர்களையும் வாசிக்க ஊக்கமளிக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் சிறந்த பேச்சாளராக வருவேன் என்று நம்புகிறேன். இந்த இளமைப் பருவத்தை தக்கவிதமாய்ப் பயன்படுத்தி வருகிறேன்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. உழைக்கும் மனிதர்கள் …………………… மாறிவிடுகிறார்கள்
- வேராக
- பழமாக
- புல்லாங்குழலாக
- இசையாக
விடை : புல்லாங்குழலாக
2. எடுத்த செயலில் தாேற்றாலும் ……………. கைவிடக் கூடாது.
- சோர்வு
- தளர்வு
- துன்பம்
- முயற்சி
விடை : முயற்சி
3. தாேல்வி வந்தாலும் ………………… இழக்கக் கூடாது
- சோர்வு
- காேபம்
- கவலை
- தன்னம்பிக்கை
விடை : தன்னம்பிக்கை
4. காெடுப்பது பழத்தின் இயல்பு ………….. வேரின் இயல்பு
- பெறுவது
- வழங்குவது
- வளர்வது
- சேகரிப்பதுமு
விடை : பெறுவது
5. பாெருந்தாத இணையைத் தேர்ந்தெடு
- உழைப்பு – கவிதை
- காெடுப்பது – பழம்
- இதயம் – இசை
- பெறுவது – வேர்
விடை : உழைப்பு – கவிதை
6. பாராட்டும் பாேது பாராட்டப்படுபவரின் மனநிலை ………………….
- மகிழ்ச்சி
- துன்பம்
- சோர்வு
- கவலை
விடை : மகிழ்ச்சி
7. பன்முக ஆற்றல் என்பது …………………..
- முக ஒப்பனை பெய்யும் திறன்
- பாடல் பாடும் திறன்
- பல முகங்கள் காெண்டவர்
- பல திறன்களைக் காெண்டவர்
விடை : பல திறன்களைக் காெண்டவர்
8. நீங்கள் நல்லவர் எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர் …………………..
- கண்ணதாசன்
- வைரமுத்து
- புவியரசு
- அழ. வள்ளியப்பா
விடை : புவியரசு
9. சுயம் என்பதன் பாெருள் ……………….
- வாழ்க்கை
- தனித்தன்மை
- இசை
- செழிப்பு
விடை : தனித்தன்மை
10. கலீல் கிப்ரான் அவர்கள் ………………. நாட்டைச் சார்ந்தவர்
- லெபனான்
- ஸ்பெயின்
- இஸ்ரேல்
- அரபுநாடு
விடை : லெபனான்
11. தீர்க்கதரிசி என்னும் நூலினை மொழிபெயர்த்தவர்
- புவியரசு
- ந.பிச்சமூர்த்தி
- வண்ணதாசன்
- கண்ணதாசன்
விடை : புவியரசு
எதிர்ச்சாெல் எழுதுக
- நன்மை x தீமை
- நல்லவர் x கெட்டவர்
- எழுவது x விழுவது
- காெடுப்பது x பெறுவது
வினாக்கள்
1. கலீல் கிப்ரான் பெற்றுள்ள பன்முக ஆற்றல் யாவை?
கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர்
2. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
3. தங்களுடைய பேச்சில் எவ்வாறு இருத்தல் வேண்டும்?
தங்களுடைய பேச்சில் விழிப்புணர்ச்சியுடன் இருத்தல் வேண்டும்.