6th Tamil Book Back Solutions Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

பாடம் 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

Hello, Friends.,

Here we have provided the SSLC Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம் to prepare for exams. The solutions are accurate and as per the SSLC syllabus.

சிறு வினா

1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்கான நிகழ்வு யாது?

  • மாமல்லன் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் அவர் தந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்றார்.
  • ஒரு பாறையில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த பாறையில் நிழல் யானை போல் தரையில் விழந்தது. அதை அவர் தந்தையிடம் காட்டினார். அவர் தந்தை “ஆம் நரசிம்மா! இது யானைப் போலத்தான் தெரிகிறது.
  • அதோ அந்தக் குன்றில்  நிழலைப் பார். கோவில் போலத் தெரிகிறது” என்றார். மாமல்லான் “ஆம் அப்பா! அந்தக் குன்றை கோவிலாகவும், இந்த குன்றைக் கோவில் முன் நிற்கும் யானை போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே” என்றார். ” நல்ல சிந்தனை.
  • இவை இரண்டை மட்டும்” அல்ல. இங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றலாம். ஒவ்வொரு பாறையையும் நந்தி, சிங்கம், யானை என்று மாற்றுவோம்.
  • இந்தக் கடற்கரையையே சிற்பக்கலைக்கூடமாக மாற்றிவிடலம்” என்று கூறினார். இந்நிகழ்வே மாமல்லபுரம் உருவான நிகழ்வாகும்.

2. மாமல்லபுரத்தில் “அர்ச்சுனன் தபசு” பாறையில் உள்ள சிறப்பங்களைப் பற்றி எழுதுக.

  • அர்ச்சுனர் தபசு பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக இருக்கும்.
  • அப்பாறையில் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அர்ச்சுனன் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி, வணங்குவது போல ஒரு சிற்பம் உள்ளது. அவரது உடல் மெலிந்து, எலும்புகளும், நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.
  • ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல ஒரு சிற்பம் உள்ளது. சிங்கம். புலி. யானை. அன்னப்பறவை. உடும்பு. குரங்குகள் என எல்லாமே உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன.
  • மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம் அது உண்மையிலேயே மான் ஒன்று இருப்பது போல தோன்றும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கலைகளும் இலக்கியங்களும் ஒருநாட்டின் __________ உலகிற்கு உணர்த்துவன.

  1. பண்பட்ட நாகரிகத்தை
  2. உணவு முறை
  3. வாழ்க்கை முறை
  4. பண்பாட்டினை

விடை : பண்பட்ட நாகரிகத்தை

2. பல்லவ அரசன் __________ மற்போரில் சிறந்நதவன்.

  1. நந்தவர்மன்
  2. கரிகாலன்
  3. மகேந்திரவர்மன்
  4. நரசிம்மன்

விடை : நரசிம்மன்

3. ஐந்து இரதங்கள் உள்ள இடம் __________ எனப்படும்.

  1. அர்ச்சுனன் தபசு
  2. கடற்கரைக் கோவில்
  3. பஞ்சபாண்டவர் இரதம்
  4. குகைக்கோவில்

விடை : பஞ்சபாண்டவர் இரதம்

4. பல்லவ அரசன் நரசிம்மன் __________ சேர்ந்தவர்.

  1. 6-ம் நூற்றாண்டைச்
  2. 7-ம் நூற்றாண்டைச்
  3. 8-ம் நூற்றாண்டைச்
  4. 9-ம் நூற்றாண்டைச்

விடை : 7-ம் நூற்றாண்டைச்

5. __________ உள்ள இடம் மாமல்லபுரம்.

  1. நான்கு வகை சிற்பக்கலைகளும்
  2. இரண்டு வகை சிற்பக்கலைகளும்
  3. மூன்று வகை சிற்பக்கலைகளும்
  4. ஐந்து வகை சிற்பக்கலைகளும்

விடை : நான்கு வகை சிற்பக்கலைகளும்

வினாக்கள்

1. இரதக்கோவில் என்று எதனை அழைக்கிறார்கள்?

  • மாமல்லபுரத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.
  • இது இரதம் (தேர்) வடிவத்தில் இருக்கிறது.
  • அதனால் இதனை இரதக் கோவில் என்று அழைக்கிறார்கள்

2. புடைச்சிற்பங்கள் பற்றி கூறு

  • அர்ச்சுனன் தபசு என்றும் பாறையில் உள்ள மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிறப்பங்கள் உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல் அழகாக உள்ளன.
  • இவற்றிற்கு புடைப்பு சிற்பங்கள் என்று பெயர்.

3. மகாபலிபுரம் என பெயர்வரக் காரணம் என்ன?

மாமல்லன் கேள்வியால் இந்த ஊர் உருவாகியுள்ள காரணத்தால் இதற்கு மகாபலிபுரம் என அழைக்கப்படுகிறது

4. மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள் எவை?

  • அர்ச்சுன் தபசு
  • கடற்கரைக் கோவில்
  • பஞ்ச பாண்டவர் இரதம்
  • ஒற்றைக்கல் யானை
  • குகைக்கோவில்
  • புலிக்குகை
  • திருக்கடல் மல்லை
  • கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து
  • கலங்கரை விளக்கம்

5. சிற்பக்கலை எத்தனை வகைப்படும்?

சிற்பக்கலை நான்கு வகைப்படும்

  • குடைவரைக் காேயில்கள்
  • கட்டுமானக் கோயில்கள்
  • ஒற்றைக் கல் கோயில்கள்
  • புடைப்புச் சிற்பங்கள்